பாண்டியன்-வானதி காதலுக்கு வந்த ட்விஸ்ட், ராகவ் எடுக்க போகும் முடிவு என்ன? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், நிலா விஷயத்தில் எதுவுமே பேசாமல் அமைதியாகவே இருந்தார். இதனால் நிலா விசாரித்தார். அப்போது சோழன், நீங்கள் ராகவ் உடைய ஆளாம். உங்களை பத்திரமாக பார்த்துக் கொள் என்றார். ஃபோனில் ஸ்டேட்டஸில் கிஸ், ஹார்ட்டு சிம்பல் எல்லாம் வைத்திருக்கிறார் என்று கோபமாக பேசி இருந்தார். இருந்தாலும் நிலா, ராகவ் அப்படியெல்லாம் செய்திருக்க மாட்டார் என்று திட்டினார். பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் பெரிதாக நடந்தது. இதையெல்லாம் பார்த்து சேரனுக்கு கஷ்டமாக இருந்தது.
நிலா ஆபீஸில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது சோழன் சொன்ன விஷயத்தைப் பற்றி நிலா யோசித்துப் பார்த்து ராகவிடம் கேட்டார். ராகவ் ஆரம்பத்தில் சமாளித்தார். ஒரு கட்டத்தில் ராகவ் ஒத்துக் கொண்டார். நிலா, உங்களால் எனக்கும் சோழனுக்கும் சண்டை வந்தது என்று கேட்டார். ராகவுக்கு ஒன்றுமே புரியவில்லை. பின் நிலா, சோழன் தான் என் கணவர். அவர்தான் கோவப்படுவார் என்று சொல்லி தங்களுக்கு திருமணமான புகைப்படத்தை எடுத்து காண்பித்தார்.
அய்யனார் துணை:
இதை பார்த்து ராகவ் அதிர்ச்சியாக இருக்கிறது. இன்னொரு பக்கம் சேரன் வேலை செய்யும் இடத்தில் இன்ஜினியர், டிசைன் போடுபவரை சந்திக்க வேண்டும் என்று ஹோட்டலுக்கு அழைத்து வந்தார். ஆனால், அங்கு இருப்பது ராகவ் தான். பின் ராகவ், சேரன் இருவரும் நன்றாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ராகவ், நிலா-சோழன் திருமண விஷயத்தைப் பற்றி கேட்டார். சேரனும் உண்மை அறியாமல் நடந்த எல்லாவற்றையும் சொல்லி விட்டார். இது ராகவிற்க்கு ஷாக்கிங் ஆக இருக்கிறது. நிலாவிற்கு கட்டாய கல்யாணம் நடந்ததை அறிந்தவுடன் ராகவ் உள்ளுக்குள் சந்தோஷப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேரன், சோழன்- நிலா இருவரும் விவாகரத்து வாங்க இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தான் எங்களுடைய ஆசை என்று சொல்கிறார். இதை எல்லாம் கேட்ட ராகவிற்கு உள்ளுக்குள் சந்தோசமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் வானதியின் அப்பா- அம்மா இருவருமே பாண்டியன் பெருந்தன்மையாக நடந்து கொண்ட விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இது எல்லாம் கேட்ட வானதி ரொம்பவே சந்தோசத்தில் துள்ளி கொள்கிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் சோழன், தன் ஓனரிடம் ராகவ் விஷயத்தை பற்றி சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் வேலை முடித்துவிட்டு நிலா கிளம்ப பார்க்கிறார். உடனே ராகவ், சின்ன வேலை இருக்கிறது காத்துக் கொண்டிருங்கள் என்று சொல்கிறார். எல்லோரும் கிளம்பியுமே நிலாவை விடாமல் ஆபீஸ்லயே இருக்க சொல்கிறார். அதற்குப்பின் பாண்டியன் கடைக்கு வந்த வானதி, தன்னுடைய அப்பா- அம்மா பேசிய விஷயத்தை சொல்லி ரொம்பவே சந்தோஷப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது