வீட்டை விட்டு வெளியே வந்த வானதி, பாண்டியன் எடுக்க போகும் முடிவு என்ன? விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் போலீஸ் இரண்டு தரப்பினருக்கும் அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார்கள். இதற்கெல்லாம் காரணம் வானதி தான் என்று அவருடைய அம்மா அடித்தார் உடனே பாண்டியன், அவளுக்கு ஏதாவது ஒன்று என்றால் நான் சும்மா இருக்க மாட்டேன் என்று மிரட்டினார். இதைக் கேட்டு வானதி ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் வீட்டில் சேரன், இனிமேல் நிலா தனியாக போக வேண்டாம் என்றார். உடனே சோழன், அவங்க சுதந்திரமாக வாழனும் நினைத்தார்கள். ஊரில் பேசுவதற்கெல்லாம் இப்படி பயப்படக்கூடாது என்றார்.
இதையெல்லாம் கேட்டு நிலா சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் வானதியின் வீட்டில் அவருடைய அம்மா பயங்கரமாக போட்டு அடித்தார். பின் வானதி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று வீட்டையும் பூட்டி போனை எல்லாம் பிடுங்கி வைத்துக் கொண்டார்கள். இன்னொரு பக்கம் சோழன், நிலா பேசியதையும் பாண்டியன், வானதி பேசியதையும் நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார்கள். அந்த சமயம் போன் செய்த வானதி, பாண்டியன் இடம் ஆறுதல் சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார்.
அய்யனார் துணை:
நேற்று எபிசோட்டில் நிலா, எதற்காக இந்த முடிவு எடுத்தீர்கள். அதுவும் சோழனுடன் என்னால் இங்கு இருக்க முடியாது. ஊர் பேசுவதற்காக நம் வாழ்க்கை வாழ முடியாது என்றெல்லாம் சொல்வதால் சேரன் தன் முடிவை மாற்றி கொண்டார். பின் சோழன், இதை தான் நான் எதிர்பார்த்தேன். நான் அசிங்கப்பட்டது சந்தோஷம் தானே என்று தன்னுடைய அண்ணனிடம் சொன்னார். அதற்குப்பின் பாண்டியன், வானதி நியாபகமாக இருப்பதாக சொன்னார். உடனே சோழன், பாண்டியனை அழைத்துக் கொண்டு வானதி வீட்டிற்கு போனார். அங்கு வானதியை எப்படியோ வரவைத்து பாண்டியன் இடம் பேச வைத்தார் சோழன்.
நேற்று எபிசோட்:
வானதி- பாண்டியன் இருவரும் பேசுவதை பார்த்து வானதி அண்ணன் அடித்து வானதியை இழுத்துக்கொண்டு வீட்டுக்குப் போனார். வீட்டில் அவருடைய அம்மா, அப்பா எல்லோருமே வானதியிடம் சண்டை போட்டார்கள். வானதி, நான் பாண்டியனை தான் திருமணம் செய்து கொள்வேன். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார். இருந்தாலும் வானதியை அவர் அம்மா அடித்துக் கொண்டிருந்தார். அவர் அப்பா எவ்வளவு சொல்லியுமே கேட்கவில்லை.
https://youtu.be/sztZsiiS1P0?si=fvLinXvjs-TNL8rj
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் தன்னுடைய வீட்டில் சண்டை போட்ட வானதி, பாண்டியன் வீட்டிற்கு வந்து விடுகிறார். அப்போது சோழன், பாண்டியன்- வானதிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்கிறார். உடனே நிலா, வானதியும் சின்ன பொண்ணு பாண்டியனுக்கும் திருமண வயசு ஆகவில்லை. கல்யாணம் வேண்டாம் என்கிறார். பாண்டியன் எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.