வானதி சொன்ன வார்த்தையால் கொந்தளிக்கும் குடும்பம், பாண்டியன் நிலை என்ன? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், வழியை மறைத்து நிலாவின் காலில் விழுந்து கெஞ்சி கதறுகிறார். சேரன், நடேசன் எல்லோருமே சோழனை திட்டிக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் நிலா, உனக்கு ஆறு மாதம்தான் அவகாசம். நீ மீண்டும் பொய் சொல்லி ஏமாற்றி இருந்தாய் நான் உன்னை விட்டு சென்று விடுவேன் என்று ஒரு வாய்ப்பு கொடுத்தார். இதனால் சோழன் ரொம்பவே சந்தோஷப்பட்டார். இருந்தாலும் சேரன், நடேசன் எல்லோருமே சோழன் செய்த தவறை மன்னிக்காமல் திட்டிக் கொண்டிருந்தார்கள். அதற்கு பின் எல்லோருமே கிளம்பி வீட்டிற்கு வந்தார்கள்.
நிலா மீண்டும் வீட்டுக்கு வந்ததை நினைத்து சோழன் சந்தோஷப்பட்டார். வழக்கம் போல தன்னுடைய திமிராக பேசிக் கொண்டிருந்தார். சேரன், ஒழுங்காக நடந்து கொள் என்று அறிவுரை சொன்னார். அதற்கு பின் சேரன், பாண்டியன் இருவரும் வெளியே சென்றார்கள். அப்போது அங்கு பாண்டியனை சந்தித்த வானதியின் அப்பா, வானதிக்கு சீக்கிரமாகவே திருமணம் நடக்க இருக்கிறது. அதற்கான வேலைகள் செய்து கொண்டிருக்கிறோம். தயவு செய்து என் மகளின் வாழ்க்கையில் தலையிடாதே. கல்யாணத்தை நிறுத்த பார்க்காதே என்றார்.
அய்யனார் துணை:
அதைக் கேட்டு பாண்டியனும் சரி என்று அமைதியாக இருந்தார். வானதியின் அப்பா சொன்னதையே நினைத்து பார்த்து பாண்டியன் ரொம்பவே கவலையில் இருந்தார். இதையெல்லாம் கவனித்த நிலா, சேரன் எல்லோருமே விசாரித்தார்கள். ஆனால், பாண்டியன் எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டார். அதற்குப்பின் நிலா சொல்லும் வேலைகள் எல்லாம் சோழன் செய்தார். ஆனால், நிலா அதை எதையுமே ஏற்று கொள்ளவில்லை. சேரன், பல்லவனிடம் தான் நிலா உதவி கேட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வானதியின் பெற்றோர்கள் திருமணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். வானதி, எதற்காக அவசரமாக செய்கிரீர்கள். பொறுமையாக இருங்கள். எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று சொல்கிறார். இதனால் வானதின் அம்மா பயங்கரமாக
கோபப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் நிலா, தன்னுடைய தோழிகளிடம் சோழன் செய்த வேலை எல்லாம் சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார். அதோடு சோழனை பிடிக்கும் பிடிக்காது என்பது போல இரண்டு மனநிலையிலேயே நிலா பேசிக் கொண்டிருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் பாண்டியன் கடைக்கு வந்த வானதி, எதற்காக இப்படி செய்கிறாய்? என்னை விட்டுட்டு போயிடுவியா என்றெல்லாம் கேட்கிறார். பாண்டியன், நீ தானே என்னை வேண்டாம் என்று சொல்லிப் போனாய். கல்யாண ஏற்பாடுகள் செய்ய சொன்னாய்? என்னை என்ன பண்ண சொல்கிறாய் என்று கேட்கிறார். பின் பாண்டியனை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்ற வானதி, இந்த கல்யாணம் வேண்டாம். பாண்டியனுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. நான் பாண்டியனை தான் கல்யாணம் செய்வேன் என்று சொல்கிறார். இதைக் கேட்டு வானதி பெற்றோர்கள் கோபப்படுகிறார்கள்.