பாண்டியனை அசிங்கப்படுத்தும் வசந்த், உண்மையை போட்டு உடைத்த வானதி - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொன்னார்கள். இதைக் கேட்டு சேரன் ஷாக் ஆகி பாண்டியனை அடித்தார். வீட்டில் உள்ள எல்லோருக்குமே ஒன்றுமே புரியவில்லை. பாண்டியனுக்குமே என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்தார். அதற்குப்பின் பாண்டியன் வானதிக்கு போன் செய்து, நீ கர்ப்பமாக இருக்கிறாயா? நமக்குள் ஒன்னும் நடக்கவில்லையே? என்று விசாரித்தார். ஆனால் வானதி உண்மை சொல்லாமல் சிரித்தார்.
வானதி உண்மையை சொல்லாமல் பாண்டியனை வெறுப்பேற்றி கொண்டிருந்தார். பாண்டியன், வானதி எப்படி கர்ப்பமானால் என்று யோசித்துக் கொண்டிருந்தார். சோழன், வழக்கம் போல பாண்டியனை வம்பு இழுத்துக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் நடேசன் மனைவியின் அண்ணனை காண்பித்தார்கள். நடேசன் குடும்பம் ஊருக்குள் வந்திருப்பது அறிந்து கோபப்பட்டார். பின் நடேசன் குடும்பம் தங்கி இருக்கும் வீட்டிற்கு வந்த தாய்மாமன், என் தங்கையை கொன்றுவிட்டு நீ ஊருக்குள்ளே வந்திருக்கிறாயா? என்றெல்லாம் ஆவேசப்பட்டு கத்தி சண்டை போட்டார்.
அய்யனார் துணை:
அவர், நடேசனை அடிப்பதால் அவருடைய சோழன் கோபப்பட்டு அடிக்கப் போனார். இதனால் இருவருக்கும் இடையே கலவரம் நடக்கிறது. பின் ஒரு வழியாக அந்த கலவரத்தை நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நிலா, முடிந்த கதையை பற்றி பேச வேண்டாம் என்றார். பின் நடேசன் அமைதியாக இருந்தார். பின் சோழன் குடும்பம் அங்கிருந்து கிளம்ப தயாரானார்கள். அதற்கு பின் இந்த சண்டையில் சோழன் கையில் அடிபட்டு இருப்பதால் நிலா அதை பார்த்து மருந்தெல்லாம் போட்டு விட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேரன் குடும்பத்தில் எல்லோருமே ஒரு வழியாக சென்னை வந்து விடுகிறார்கள். அப்போது பாண்டியன், சோழன் இருவரும் வானதியை பார்ப்பதற்காக அவர் வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அங்கு வானதியின் அண்ணன் பாண்டியனை அடிக்கிறார். பின் சோழனும் பதிலுக்கு அடிக்கிறார். இருவரும் இடையே கலவரம் வெடிக்கிறது. வானதியை பார்த்து பாண்டியன், எப்படி கர்ப்பம் ஆனாய்? என்ன நடக்கிறது? என்று கேட்கிறார். இதை கேட்டு வானதின் அம்மா பயங்கரமாக கோபப்பட்டு சண்டை போடுகிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது வானதி, நான் கர்ப்பமாகவே இல்லை. இவர்கள் எனக்கு கல்யாண ஏற்பாடுகள் செய்தார்கள். அதனால் தான் பொய் சொன்னேன் என்று உண்மையை சொல்லிவிடுகிறார். இதைக் கேட்டு வானதியின் அப்பா, அம்மா, அண்ணன் மூவருமே கோபப்படுகிறார்கள். பாண்டியனுக்கு அப்போது தான் உயிர் வந்தது. பின் பாண்டியன், அவர்களுக்கு வார்னிங் கொடுத்துவிட்டு வருகிறார். பின் பாண்டியன், சோழன் இருவரும் வானதி வீட்டில் நடந்ததை பற்றி பேசி கொண்டு இருக்கிறார்கள்.