பாண்டியன் மீது வன்மத்தை கொட்டும் வானதி, சோழன் செய்த வேலையால் கொந்தளித்த நிலா - அய்யனார் துணை

By subhashini · 5/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பல்லவன் பின்னாடியே நடேசன் பின் தொடர்ந்து சென்று ஓரமாக ஒரு கடையில் பல்லவனை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து காயத்ரி, பல்லவனை பார்த்து பேசி இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோருமே பல்லவன் வரவில்லை என்று வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள். அப்போது பல்லவனுக்கு போன் செய்த நிலா, இன்னும் அரை மணி நேரத்தில் வீட்டிற்கு வரவேண்டும் என்று சொல்லி போனை வைத்து விட்டார். பின் பல்லவனும் அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்தார். நடேசன், பல்லவன் பின்னாடியே வீட்டிற்கு வந்து விட்டார்.

பல்லவன் வீட்டிற்கு வந்ததால் எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். நிலா, இனிமேல் நீ என்னை அண்ணி என்று அழைக்காதே. நீயும் நானும் பேசிக்கொள்ள வேண்டாம். உரிமையில் தான் அடித்தேன். நீ வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு போ வேண்டாம் என்றார். பல்லவன், நிலாவிடம் மன்னிப்பு கேட்டார். அதற்குப் பின் வீட்டில் உள்ள எல்லோருமே தங்களுடைய வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது நடேசன், பல்லவனை எதற்காக அடித்தாய்? என்றார். அதற்கு நிலா, அவ்வளவு மகன் பாசம் பொங்குதா? அவன் வீட்டை விட்டு கிளம்பியுடன் நீங்கள் போனதை நான் பார்த்தேன் என்றார்.

அய்யனார் துணை:

அதற்குப் பின் பாண்டியன் தன்னுடைய கடை திறப்பு பற்றி பேசி இருந்தார். நிலா, நடேசன் இடம் பாண்டியன் கடைக்கு பூஜை போட அழைக்கிறார். வழக்கம் போல நடேசன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நீங்களே பண்ணுங்கள் என்றார். நிலா, நீங்கள் கண்டிப்பாக வரணும் என்றார். அதற்குப்பின் நிலா, பல்லவனை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு போனார். அங்கு நிலா, உன்னை விட்டு போனவர்களை நினைத்து கவலைப்படாதே. உனக்காக இருக்கும் அண்ணன்களை நினைத்து பார் என்றெல்லாம் பேசி இருந்தார். பல்லவன் அமைதியாகவே இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பல்லவன், நிலா சொன்ன அறிவுரையை கேட்டு மனம் மாறி கல்லூரிக்கு செல்கிறார். அப்போது அங்கு வந்து சோழனிடம் பல்லவன், நிலா சொன்ன விஷயத்தை எல்லாம் சொல்லி சந்தோஷப்படுகிறார். சோழன், நிலா தன் குடும்பத்தின் மீது அக்கரையாக இருப்பதை நினைத்து சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் பாண்டியன் தன் கடைக்கு டெகரேஷன் செய்யும் விஷயத்தைப் பற்றி வானதியிடம் சொல்லி பேசுகிறார். வானதி, நிலா பணம் கொடுத்தார். நிலா சொல்லித்தான் இதெல்லாம் செய்கிறாயா? என்றெல்லாம் கோபத்திலும் வன்மத்திலும் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், பாண்டியன் அதைப்பற்றி எல்லாம் யோசிக்காமல் தன்னுடைய அண்ணியை பெருமையாக பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:

தன்னை பற்றி ஒரு கவலையும் படாமல் தன் குடும்பத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கும் பாண்டியனை திட்டிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார் வானதி. இன்னொரு பக்கம் சோழன், சவாரிக்கு அழைத்து வரும் நபரிடம் கடலை போட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நபர் பயங்கர கடுப்பாகி சோழனை திட்டி விட்டு வண்டியை ஓட்ட சொல்கிறார். இதையெல்லாம் போனில் நிலா கேட்டுவிட்டு சோழன் மீது கோபப்படுகிறார். அதற்குப்பின் சோழனை ஆபீஸ்க்கு சோழன் வர சொல்கிறார். சோழனும் நிலாவை பார்க்க போகிறார். அப்போது நிலா, வெட்கப்பட்டு ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல வருகிறார்.

behindtalkies AMP · Quick view
View full