வேறு ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பெற்ற நிலையில். பிரபல மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட ஐயப்பனும் கோசியும் இயக்குனர்.

By Rajkumar · 16/6/2020

மோலிவுட் திரையுலகில் மிகப் பிரபலமான இயக்குனர் சாச்சி. சமீபத்தில் சாச்சி இயக்கத்தில் பிரிதிவிராஜ், பிஜுமேனன் நடிப்பில் வெளிவந்த ஐயப்பனும் கோஷியும் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இயக்குனர் சாச்சி அவர்கள் திடீரென்று இதய நோயால் பாதிக்கப்பட்டு திரிஸுர்ஸ் ஜூப்ளி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சாச்சியின் நண்பரும் திரைக்கதை எழுத்தாளருமான சேது அவர்கள் கூறியிருப்பது, இயக்குனர் சாச்சியுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளேன்.

இயக்குனர் சாச்சிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் ஜூன் 15ம் தேதியன்று இருதய மாற்று சிகிச்சை செய்யப்பட்டது என்று கூறி உள்ளார். பிறகு ஜூபிலி மிஷன் மருத்துவமனை அதிகாரி இது குறித்துக் கூறியது, தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. வென்டிலேட்டர் மூலம் தான் சாச்சி உயிர் வாழ்ந்து வருகிறார்.

ஏற்கனவே அவருக்கு மற்றொரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதோடு இவருக்கு மூளையிலும் சேதம் ஏற்பட்டுள்ளது. மூளையில் வேறு ஏதும் பிரச்சினை இருப்பதற்காக சிடி ஸ்கேன் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான முடிவுகள் வந்தவுடன் மருத்துவர்கள் அறிவுரையின்படி அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இயக்குனர் சாச்சியை பார்க்க பிரித்திவிராஜ், பிஜுமேனன் உட்பட பல பிரபலங்கள் மருத்துவமனைக்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது.

covid -19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில் மருத்துவமனையில் கூட்டம் சேர கூடாது என்பதால் பிரபலங்களை அனுமதிக்க இயலாது என்று அறிவித்துள்ளனர். சாச்சி இயக்கத்தில் பிரித்திவிராஜ், பிஜுமேனன் இருவரும் அனார்கலி மற்றும் ஐயப்பனும் கோஷியும் ஆகிய இரண்டு படங்களில் நடித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சாச்சி அவர்கள் டிரைவிங் லைசென்ஸ், ராமலீலா, சீனியர்ஸ் போன்ற பல படங்களுக்கு ஸ்க்ரிப்ட் எழுதி உள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full