மேலும் ஒரு சோகம் : ஐயப்பனும் கோஷியும் இயக்குனர் காலமானார்.

By Rajkumar · 19/6/2020

மலையாளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தின் இயக்குனர் காலமாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மோலிவுட் திரையுலகில் மிகப் பிரபலமான இயக்குனர் சாச்சி. சமீபத்தில் சாச்சி இயக்கத்தில் பிரிதிவிராஜ், பிஜுமேனன் நடிப்பில் வெளிவந்த ஐயப்பனும் கோஷியும் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இயக்குனர் சாச்சி அவர்கள் திடீரென்று இதய நோயால் பாதிக்கப்பட்டு திரிஸுர்ஸ் ஜூப்ளி மிஷன் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்தார்.

https://twitter.com/NivinOfficial/status/1273661351156539393

இதுகுறித்து சாச்சியின் நண்பரும் திரைக்கதை எழுத்தாளருமான சேது அவர்கள் கூறிய போது , இயக்குனர் சாச்சியுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளேன். இயக்குனர் சாச்சிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் ஜூன் 15ம் தேதியன்று இருதய மாற்று சிகிச்சை செய்யப்பட்டது என்று கூறிஇருந்தார் . பிறகு ஜூபிலி மிஷன் மருத்துவமனை அதிகாரி இது குறித்துக் கூறியது, சாச்சுனுக்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. வென்டிலேட்டர் மூலம் தான் சாச்சி உயிர் வாழ்ந்து வருகிறார்.

ஏற்கனவே அவருக்கு மற்றொரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதோடு இவருக்கு மூளையிலும் சேதம் ஏற்பட்டுள்ளது. மூளையில் வேறு ஏதும் பிரச்சினை இருப்பதற்காக சிடி ஸ்கேன் செய்யப்பட்டு உள்ளது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சாச்சுனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலமானார்.

ஏற்கனவே இவருக்கு இடுப்பில் அருவரை சிகிச்சை செய்யப்பட்டு இருந்த நிலையில் மாரடைப்பு வந்ததால் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், இவருக்கு மூளையிலும் பாதிப்பு ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சாச்சியின் மறைவால் மலையாள திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full