அவன் என் மேல எங்க கை வச்சான் தெரியுமா? தனலட்சுமியிடம் அத்துமீறிய அசீம்- கொந்தளிப்பில் ரசிகர்கள்

By subhashini · 27/10/2022

பிக் பாஸ் வீட்டில் தனலட்சுமி இடம் அசீம் அத்துமீறி நடந்திருக்கும் செயல் குறித்து ரசிகர்கள் கண்டித்து வரும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்களை கடந்து மூன்றாவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார்.

பொம்மை டாஸ்க்:

இது பலருக்குமே அதிர்ச்சியை தந்திருந்தது. இவரை தொடர்ந்து கடந்த வாரம் முதல் எவிக்சன் நடந்தது. அதில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார். இந்த வாரம் பொம்மை டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த டாஸ்க் கொடுத்தவுடன் போட்டியாளர்கள் மத்தியில் கலவரம் தொடங்கி இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டும், மோதியும் விளையாடி வருகிறார்கள். மேலும், இந்த டாஸ்க் கொடுத்ததில் இருந்து அசீம் ஏற்கனவே இருந்ததை விட இன்னும் ஓவராக நடந்து கொண்டு வருகிறார்.

https://twitter.com/twistiee28/status/1585521046815649794

தனலட்சுமி-அசீம் விவகாரம்:

பொம்மையை உள்ளே வைக்க போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டு விளையாடி வருகின்றனர். அந்த வகையில் ஷெரினா கீழே விழுந்து தலையில் அடிபட்டது என்று கூறியவுடன் ஆண் போட்டியாளர்கள் சிலர் ஷெரினாவை காப்பாற்ற போட்ட காட்சிகள் எல்லாம் வேற லெவலில் இருந்தது.
இதற்கு காரணம் தனலட்சுமி தான் என்று அசீம், தனலட்சுமியை பயங்கரமாக திட்டி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் தனலட்சுமி இடம் மிக மோசமான வார்த்தைகளால் பயன்படுத்தி அசீம் திட்டி இருந்தார்.

https://twitter.com/twistiee28/status/1585312675978182656

தனலட்சுமி அளித்த புகார்:

ஆனால், தனலட்சுமி நான் தள்ளிவிடவில்லை என்று எனக்கு தெரியும். குறும்படம் வரட்டும். யார் மீது தவறு என்று தெரிந்து விடும்? நான் தவறு செய்திருந்தால் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன். இல்லையென்றால் எல்லோரும் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றெல்லாம் கூறி இருந்தார். அதோடு தனலட்சுமி பிற போட்டியாளர்களிடம் அவன் என் மீது எங்கே கை வைத்தான் தெரியுமா? என்று பேசி இருந்தார். இதை கேட்டு விக்ரமன் கோபம் அடைந்து அசிமிடம் கடுமையாக வாக்குவாதம் செய்திருக்கிறார்.

https://twitter.com/peppyr7/status/1585484926702747649

கண்டனம் தெரிவிக்கும் ரசிகர்கள்:

தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. கடந்த வாரம் ஆயிஷா விவகாரத்தில் அசீம் தப்பித்து இருந்தாலும் இந்த வார சம்பவத்தில் வசமாக சீக்கியிருக்கிறார். இந்த முறை கமலஹாசன் கண்டிப்பாக அசீமை கண்டிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர். என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full