மோசமாக நடந்து கொள்ளும் மாமியாரை வெளுத்து வாங்கும் மதி, லட்சுமியின் நெஞ்சுவலி ட்ராமா-அழகே அழகு
மோசமாக நடந்து கொள்ளும் மாமியாரை வெளுத்து வாங்கும் மதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியலில் தங்கராஜிற்கு தெரிந்தவர் பாக்யராஜ் பேங்கில் லோனுக்கு ஏற்பாடு செய்து தர சொல்லி கேட்டார். உடனே தங்கராஜ், பாக்யராஜ் பேங்கிற்கு ஃபோன் செய்து விசாரித்தார். அப்போது பாக்யராஜுக்கு ப்ரோமோஷன் கொடுத்து அவருக்கு வேறொரு டிபார்ட்மெண்டில் அனுப்பி இருக்கும் விஷயத்தை எல்லாம் தங்கராஜ் தெரிந்து கொண்டார். வீட்டில் யாரிடமும் உண்மையை சொல்லாமல் பாக்கியராஜ் மறைத்திருப்பதை நினைத்து தங்கராஜ் கோபப்பட்டார். இன்னொரு பக்கம் மலர், வீட்டு வேலைகள் எல்லாம் செய்து கொண்டிருந்தார். எல்லோரும் கேட்பதையும் செய்தார்.
இது எல்லாம் பார்த்து மதிக்கு கோபம் தான் வருகிறது. மதி, மலரை வேலை செய்ய வேண்டாம் என்று திட்டினார். உடனே அங்கு வந்த மாமனார், மலரை திட்டி விட்டு மாமியார் ரூமுக்கு அனுப்பி வைத்தார். அங்கு சென்றால் பக்கத்தில் இருக்கும் தண்ணியை கூட எடுத்து குடிக்க முடியாமல் மலரை தான் மாமியார் வேலை வாங்கினார். இதையெல்லாம் பார்த்து மலரால் எதுவுமே பேச முடியல. ஆனால், மதிக்கு பயங்கர கோபம் வருகிறது. இவர்களைப் போலவே சுரேஷ் நடந்து கொள்வதால் மதி, சுரேஷிடம் சண்டை போட்டார். இன்னொரு பக்கம் தங்கராஜ், பாக்யராஜுக்கு ப்ரமோஷன் கிடைத்திருக்கும் விஷயத்தைப் பற்றி ரேவதி இடம் கேட்டார். ஆனால், ரேவதி தனக்கு எதுவும் தெரியாது போலவே நடித்தார்.
அழகே அழகு:
மாமியார், மாமனார் இருவரும் செய்யும் டார்ச்சர் தாங்க முடியாமல் மலர், பாக்யராஜிடம் புலம்பி கொண்டிருந்தார். பின் தங்கராஜ், பாக்கியராஜுக்கு ப்ரமோஷன் கிடைத்த விஷயத்தை வீட்டில் சொல்வதற்காக வந்தார். ரேவதி இதைப் பற்றி பாக்கியராஜ், மலரிடம் சொல்லிவிட்டார். அதற்குப்பின் தங்கராஜ் வீட்டில் உள்ள எல்லோரையும் அழைத்து பாக்கியராஜ் ப்ரமோஷன் கிடைத்த விஷயத்தை பற்றி சொன்னார். எல்லோருமே ஷாக் ஆனார்கள். பின் பாக்யராஜை திட்டி அவமானப்படுத்துவார்கள் என்று தங்கராஜ் திட்டம் போட்டார். ஆனால், யாரும் பாக்யராஜை திட்டாமல் வாழ்த்துக்கள் சொன்னார்கள். இதை பார்த்து தங்கராஜ்க்கு அதிர்ச்சி ஆக இருக்கிறது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மதி, மலர் இருவருமே வீட்டில் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். சுரேஷ் குடித்து வைத்த டீ டம்ளரை மதி எடுக்கவில்லை என்று மாமியார் லட்சுமி கோபமாக இருக்கிறார். மதி, என்ன செய்யணும் என்று கேட்கிறார். ஆனால், எதுவும் பேசாமல் லட்சுமி முறைக்கிறார். பின் மதி தன்னுடைய வேலையை செய்து கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் கொந்தளித்த லட்சுமி, உன் புருஷன் குடித்த டம்ளரை கூட எடுத்து வைக்க முடியாதா? இதுதான் உங்கள் வீட்டில் சொல்லிக் கொடுத்ததா? என்று திட்டுகிறார். மதி, உங்கள் பிள்ளைக்கு நீங்கள் ஒழுங்காக சொல்லிக் கொடுத்தீர்களா? சாப்பிட்ட தட்டை எடுத்து போடணும். துணியை ஒழுங்காக போடணும் என்று நீங்கள் சொல்லிக் கொடுத்தீர்களா? உங்களுடைய வளர்ப்புக்கு என்னுடைய அப்பா அம்மா என்னை நல்லாவே வளர்த்திருக்கிறார்கள் என்று எதிர்த்து பேசுகிறார்.
சீரியல் ட்ராக்:
மலர் எவ்வளவு தடுத்துமே மதி கேட்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமி நெஞ்சுவலி வந்தது போலவே நடிக்கிறார். மலரும் தன்னுடைய மாமியாருக்கு உதவி செய்கிறார். ஆனால், மதி அதை கண்டுகொள்ளவே இல்லை. லட்சுமி நடிக்கிறார் என்று மலருக்கும் தெரியும். இருந்தாலும் மலர் தண்ணி வேண்டுமா, மாத்திரை வேண்டுமா, ஹாஸ்பிடல் போகலாம் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து மாமனார் வந்து விடுகிறார். மதியை பற்றி ரொம்பவே தப்பு தப்பா லட்சுமி பொய் சொல்கிறார். உடனே கொந்தளித்த மாமனார், சுரேஷிற்கு ஃபோன் செய்து வீட்டிற்கு வர வைக்கிறார். ஆனால், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் மதி அமைதியாக தான் இருக்கிறார்.