சந்திரமுகி போல் புலம்பி தள்ளும் மலர், பாக்கியராஜ் நிலை என்ன ? அழகே அழகு
சந்திரமுகி போல் புலம்பி தள்ளும் மலர், பாக்கியராஜ் நிலை என்ன ?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியலில் மதி தன்னுடைய சுயமரியாதைக்காக தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். சுரேஷ், நீ எங்கேயாவது போ. என் வீட்டில் இருக்காதே. வேலையை முடித்து வரும்போது நீ இங்க இருக்க கூடாது. எங்கயாவது போய் தொலை. உன்னால்தான் என் வீட்டில் நிம்மதி இல்லை என்று ரொம்ப அவமரியாதையாக பேசி விட்டார். அதற்குப்பின் மதி தன்னை சுயமரியாதை இல்லாதவள் என்று பேசியதை நினைத்து மலர் வருத்தப்பட்டு கொண்டிருந்தார். பாக்கியராஜ் எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் மலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மதி வீட்டிற்கு வெளியே உட்கார்ந்து இருப்பதால் லட்சுமி கொதிக்கிறார். அவளை வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். இதைப்பற்றி மாமனார், தங்கராஜ்க்கு போன் செய்து சொன்னார். கோபப்பட்ட தங்கராஜ், மதியின் அப்பா, அம்மாவிற்கு ஃபோன் செய்து சுரேஷ் வீட்டில் நடந்ததை எல்லாம் சொன்னார். அதோடு மதியை அங்கிருந்து வீட்டிற்கு அழைத்து வர சொன்னார். மதியின் அப்பாவுமே அங்கிருந்து கிளம்பினார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த சுரேஷ், மதி வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டிருப்பதை பார்த்து கோபப்பட்டார்.
அழகே அழகு:
அவளை வீட்டை விட்டு துரத்துங்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். பாக்யராஜ், மலர் இருவரும் எவ்வளவோ எடுத்து சொல்லி புரிய வைத்தார்கள். ஆனால், வீட்டில் யாருமே கேட்கவில்லை. மதியின் அப்பா வந்தவுடன் வீடு ருத்ரதாண்டவம் ஆடுகிறது. லட்சுமி பேசிய பேச்சைக் கேட்டு மதி அப்பா ரொம்பவே மனமடைந்து விட்டார். பின் தன் மகளை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தார். அங்கிருந்து மதி கிளம்பியதால் லட்சுமி ரொம்பவே சந்தோசப்பட்டார். பின் மதி, சுரேஷ் பேசிய வார்த்தைகள் எல்லாம் நினைத்து பார்த்து வேதனைப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் மதியை வீட்டிற்கு அவருடைய அப்பா அழைத்து வந்து விடுகிறார். மதியை நினைத்து அவருடைய அம்மா ரொம்பவே கவலைப்படுகிறார். மதி எதுவும் பேசாமல் அமைதியாக உள்ளே சென்று விடுகிறார். அப்போது மதியின் அப்பா, நாம் தவறு செய்து விட்டோம். மதியின் வாழ்க்கையை நாம் யோசித்து இருக்கலாம். அவளால் அங்கு சந்தோசமாக இருக்க முடியவில்லை. அவர்கள் ரொம்பவே டார்ச்சர் செய்து இருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லி வேதனைப்படுகிறார். இன்னொரு பக்கம் லட்சுமி அவருடைய கணவரும் சேர்ந்து சுரேஷ் இடம் பேசுகிறார்கள். அப்போது மாமனார், இனிமேல் அவள் இந்த வீட்டுக்கு வரவேண்டும் என்றால் உன் பேச்சைக் கேட்கணும்.
சீரியல் ட்ராக்:
வீட்டில் எல்லோருடைய பேச்சையும் கேட்கணும். இல்லையென்றால் அவள் இங்கு வரவே கூடாது என்று சொல்கிறார். சுரேஷ் தன் பெற்றோர்கள் சொல்வதை ஒத்துக்கொள்கிறார். அதற்குப்பின் மலர் தன்னுடைய சுயமரியாதையை இழந்து இந்த வீட்டில் வாழ்வதை நினைத்து ரொம்பவே வேதனைப்படுகிறார். மதி தன்னுடைய உரிமைக்காக போராடுவதும், தான் இந்த வீட்டில் படும் கஷ்டத்தை எல்லாம் சொல்லி வருத்தப்படுகிறார். பாக்யராஜ் ஆறுதல் சொல்லி புரிய வைக்கிறார். ஆனால், மலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன்னுடைய நிலைமையை நினைத்து நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.