சுயமரியாதைக்காக போராடும் மதி, சுரேஷ் குடும்பம் எடுக்க போகும் முடிவு என்ன? அழகே அழகு
சுயமரியாதைக்காக போராடும் மதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியலில் வீட்டில் பெரிய கலவரத்தையே லட்சுமி செய்து கொண்டிருந்தார். அதற்கு அவர் கணவரும் உடந்தையாக இருந்தார். லட்சுமி, மதியின் அப்பா அம்மாவிற்கு போன் செய்து வீட்டிற்கு வர வைத்தார்கள். மதியின் அப்பா-அம்மாவை பார்த்து ரொம்ப மோசமாகவும் அவமானப்படுத்தியும் பேசி இருந்தார்கள். மதியால் எதுவும் பேச முடியவில்லை. பின் மதியின் பெற்றோர்கள் அறிவுரை சொன்னார்கள். மதி சொல்வதை யாரும் கேட்கவே இல்லை.
மதியின் பெற்றோர்கள், இந்த வீட்டில் நீ அட்ஜஸ்ட் பண்ணி தான் வாழனும். எதிர்த்து பேசாதே. எங்களுடைய நிலைமையை யோசித்துப் பார் என்றெல்லாம் சொன்னார்கள். மதி, நீங்கள் என்னை மறந்து விடுங்கள். இங்கு யாரு கூப்பிட்டாலும் வராதீர்கள் என்று சொல்லி விட்டார். அதற்குப்பின் தங்கராஜ், இந்த பிரச்சனைக்குள் வந்துவிட்டார். அவர் மதியின் அப்பா-அம்மாவை அங்கிருந்து கிளம்ப சொன்னார். அதற்கு பின் மதியை தனியாக அழைத்து அறிவுரை எல்லாம் சொன்னார். ஆனால், மதி அதை பற்றி பெரிதாகவே கண்டு கொள்ளவில்லை.
அழகே அழகு:
பின் தங்கராஜ், தனக்கு வேலை இருப்பதாக சொல்லி அங்கிருந்து சென்றார். சுரேஷ், எது வேணாலும் நடந்திருக்கட்டும். நீ என்னுடைய அப்பா, அம்மாவிடம் மன்னிப்பு கேளு என்றார். மதி, நான் எந்த தவறும் செய்யவில்லை. யாரிடமும் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறார். பாக்யராஜ், மலர் எல்லோருமே மதியை மன்னிப்பு கேட்க சொன்னார்கள். ஆனால், மதி முடியாது என்றார். இதனால் கொந்தளித்த சுரேஷ், இனிமேல் நீ இந்த வீட்டில் இருக்க தேவையில்லை என்று மதியை பிடித்து வெளியே தள்ளுகிறார். மதியும் வீட்டிற்கு வெளியே சென்றார். வீட்டு திண்ணையில் தான் மதி உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மதி தன்னுடைய சுயமரியாதைக்காக தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறார். சுரேஷ், நீ எங்கேயாவது போ. என் வீட்டில் இருக்காதே. வேலையை முடித்து வரும்போது நீ இங்க இருக்க கூடாது. எங்கயாவது போய் தொலை. உன்னால்தான் என் வீட்டில் நிம்மதி இல்லை என்று ரொம்ப அவமரியாதையாக பேசி விடுகிறார். அதற்குப்பின் மதி தன்னை சுயமரியாதை இல்லாதவள் என்று பேசியதை நினைத்து மலர் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். பாக்கியராஜ் எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் மலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சீரியல் ட்ராக்:
இதையெல்லாம் கவனித்த லட்சுமி, இதுதான் சந்தர்ப்பம் என்று மலரை திட்டிக் கொண்டிருக்கிறார். பின் மதி வாசலில் உட்கார்ந்து கொண்டிருப்பதால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் பார்த்து லட்சுமி இடம் விசாரிக்கிறார்கள். லட்சுமி, மலர் இருவரும் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார்கள். பின் அவமானம் தாங்க முடியாமல் லட்சுமி, மதியை உள்ளே அழைக்கிறார். ஆனால், மதி முடியாது என்று சொல்லி விடுகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே என்ன செய்வதென்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மலரும் மதிக்குத் துணையாக வெளியே வாசலில் உட்காருகிறார்
.
.