மதி கொடுத்த புகாரால் ஆடிப்போன சுரேஷ், இனி நடக்கப்போவது என்ன? அழகே அழகு

மதி கொடுத்த புகாரால் ஆடிப்போன சுரேஷ், அழகே அழகு

By subhashini · 25/6/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியலில் பாக்யராஜ், மலர் இருவரும் எவ்வளவோ எடுத்து சொல்லி புரிய வைத்தார்கள். ஆனால், வீட்டில் யாருமே கேட்கவில்லை. மதியின் அப்பா வந்தவுடன் வீடு ருத்ரதாண்டவம் ஆடுகிறது. லட்சுமி பேசிய பேச்சைக் கேட்டு மதி அப்பா ரொம்பவே மனமடைந்து விட்டார். பின் தன் மகளை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தார். அங்கிருந்து மதி கிளம்பியதால் லட்சுமி ரொம்பவே சந்தோசப்பட்டார். பின் மதி, சுரேஷ் பேசிய வார்த்தைகள் எல்லாம் நினைத்து பார்த்து வேதனைப்பட்டார்.

மதியின் பெற்றோர்கள் எவ்வளவோ புகுந்த வீட்டை பற்றி எடுத்துச் சொல்லி புரிய வைத்தார்கள். ஆனால், மதி தன்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுப்பதாக இல்லை என்றார். இன்னொரு பக்கம் தங்கராஜ், சுரேஷிற்கு ஃபோன் செய்து உன் அண்ணன் அவன் பொண்டாட்டியை கைக்குள் அடக்கி வைத்திருக்கிறான். நீ ஏன் இப்படி இருக்கிறாய்? உன் பொண்டாட்டியை உன் கட்டுப்பாட்டில் வை என்றெல்லாம் ஒன்னுக்கு ரெண்டாக்கி ஏற்றி விட்டார்.

அழகே அழகு:

இதனால் கொந்தளித்த சுரேஷ், மதிக்கு போன் செய்து ரொம்ப மோசமாக பேசி இருந்தார். அதற்குப்பின் லட்சுமி, சுரேஷுக்கு வேறொரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கணும். மதி வீட்டிற்கு வேண்டாம் என்றெல்லாம் சொன்னார். மலரால் எதுவும் பேச முடியவில்லை. அதற்குப்பின் சுரேஷ், வேலைக்கு கிளம்புவதாக வீட்டில் பொய் சொல்லி விட்டு சுரேஷின் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மதி, என்னுடைய கணவர் என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டார். ரொம்ப அவமரியாதையாக பேசுகிறார் என்றெல்லாம் மதி புகார் கொடுக்கிறார். சுரேஷிற்கு கோபம் இன்னும் அதிகமாகிறது. போலீஸ் ஸ்டேஷன் என்று கூட பார்க்காமல் மதியை திட்டுகிறார். அந்த இடத்திற்கு இன்ஸ்பெக்டர் வந்து விடுகிறார். பின் சுரேஷ் மீது மதி மீண்டும் புகார் கொடுத்திருக்கும் விஷயத்தை அறிந்த இன்ஸ்பெக்டர், சுரேஷ் வீட்டில் எல்லோரையும் வரவைத்து பிரச்சனைஉயை முடிக்க சொல்கிறார். பின் சுரேஷ், தங்கராஜ் போன் செய்து போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததை எல்லாம் சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

தங்கராஜ் உடனே தன்னுடைய மாமனார், மாமியார் இடம் நடந்ததை சொல்கிறார். இதனால் லட்சுமி, இவளால் என் மகனுடைய வாழ்க்கை என்னாகப் போகுதோ? அவள் இந்த வீட்டுக்கு வரக்கூடாது என்று வழக்கம்போல ருத்ரதாண்டவம் ஆடுகிறார். தங்கராஜ், எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் இந்த பிரச்சனையை முடித்து விடலாம் வாருங்கள் என்று அழைத்து செல்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full