மீண்டும் வீட்டிற்கு வந்த மதிக்கு நியாயம் கிடைத்ததா? சுரேஷ் நிலை என்ன? அழகே அழகு
மீண்டும் வீட்டிற்கு வந்த மதிக்கு நியாயம் கிடைத்ததா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியலில் சுரேஷ், மதிக்கு போன் செய்து ரொம்ப மோசமாக பேசி இருந்தார். அதற்குப்பின் லட்சுமி, சுரேஷுக்கு வேறொரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கணும். மதி வீட்டிற்கு வேண்டாம் என்றெல்லாம் சொன்னார். மலரால் எதுவும் பேச முடியவில்லை. அதற்குப்பின் சுரேஷ், வேலைக்கு கிளம்புவதாக வீட்டில் பொய் சொல்லி விட்டு சுரேஷின் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார். மதி, என்னுடைய கணவர் என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டார்.
சுரேஷ் ரொம்ப அவமரியாதையாக பேசுகிறார் என்றெல்லாம் மதி புகார் கொடுத்தார். சுரேஷிற்கு கோபம் இன்னும் அதிகமாகிறது. போலீஸ் ஸ்டேஷன் என்று கூட பார்க்காமல் மதியை திட்டுகிறார். அந்த இடத்திற்கு இன்ஸ்பெக்டர் வந்து விட்டார். பின் சுரேஷ் மீது மதி மீண்டும் புகார் கொடுத்திருக்கும் விஷயத்தை அறிந்த இன்ஸ்பெக்டர், சுரேஷ் வீட்டில் எல்லோரையும் வரவைத்து பிரச்சனைஉயை முடிக்க சொன்னார். பின் சுரேஷ், தங்கராஜ் போன் செய்து போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததை எல்லாம் சொன்னார்.
அழகே அழகு:
தங்கராஜ் உடனே தன்னுடைய மாமனார், மாமியார் இடம் நடந்ததை சொன்னார். இதனால் லட்சுமி, இவளால் என் மகனுடைய வாழ்க்கை என்னாகப் போகுதோ? அவள் இந்த வீட்டுக்கு வரக்கூடாது என்று வழக்கம்போல ருத்ரதாண்டவம் ஆடினார். தங்கராஜ், எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் இந்த பிரச்சனையை முடித்து விடலாம் வாருங்கள் என்று அழைத்து சென்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சுரேஷின் பெற்றோர்கள் வந்து விடுகிறார்கள். அப்போது இன்ஸ்பெக்டர், நடந்தது என்ன என்று விசாரிக்கிறார். லட்சுமி, டம்ளர் எடுத்து வைக்க சொன்னதற்கு அவ ரொம்ப மோசமாக பேசிவிட்டாள். அவளாக தான் வீட்டை விட்டுப் போனாள். என் பையன் ரொம்பவே கஷ்டப்படுகிறான் என்று ஒன்றுக்கு இரண்டாக பொய் சொல்கிறார். பின் மதி உள்ளே வருகிறார். மதியை பார்த்தவுடன் போலீஸ் ஸ்டேஷன் என்று கூட தெரியாமல் லட்சுமி, அவருடைய கணவரும் கோவமாக பேசுகிறார்கள். இதையெல்லாம் இன்ஸ்பெக்டர் கவனிக்கிறார். சுரேஷ், தங்கராஜ் இருவரும் லக்ஷ்யை அமைதியாக இருக்க சொல்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அப்போது இன்ஸ்பெக்டர், என் எதிரிலே நீங்க இப்படி நடந்து கொள்கிறார்கள். வீட்டில் என்னென்ன எல்லாம் பேசி இருப்பீர்கள். இந்த பிரச்சனையை நீங்களே பேசி முடித்து விட்டால் நல்லது. இல்லை என்றால் சுரேஷின் வேலைக்கு தான் பிரச்சனை என்று சொல்கிறார். தங்கராஜ், நான் பார்த்துக்கொள்கிறேன். மதியை நாங்கள் வீட்டிற்கு அழைத்து செல்கிறோம் என்று சொல்கிறார். இன்ஸ்பெக்டர், அவர்கள் மரியாதை இல்லாமல் நடத்தினால் எனக்கு போன் பண்ணுங்கள் என்றெல்லாம் சொல்லி அனுப்பினார். சுரேஷ் எதுவுமே பேச முடியவில்லை. அதற்குப்பின் மதியை வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள். தங்கராஜ், மதி மூன்று நாட்கள் என்னுடைய வீட்டில் இருக்கட்டும் என்று சொல்லி தன்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்கிறார். மதி, மலரிடம் பேச போகிறார். ஆனால், மலர் கோபத்தில் மதியை அவாய்ட் செய்கிறார்