மாமியாரின் சூழ்ச்சியால் வீட்டை விட்டு போக சொல்லும் சுரேஷ், மதி எடுக்கும் முடிவு என்ன? அழகே அழகு

வீட்டை விட்டு வெளியேறும் மதி

By subhashini · 14/6/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியலில் ரேவதிக்கு போன் செய்து பாக்கியராஜ் விசாரித்தார். ரேவதி உண்மையை சொல்ல முடியாமல் அழுது கொண்டே ஒன்றும் இல்லை என்றார். இருந்தாலும் ரேவதி கஷ்டத்தில் இருப்பதை புரிந்து கொண்டு பாக்யராஜும் ரொம்பவே கஷ்டப்பட்டார். அதற்குப்பின் வீட்டில் மதி, ஆன்லைனில் மாணவர்களுக்கு கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தார். இதை கவனித்த மாமியார் வழக்கம் போல மதியை திட்டிக் கொண்டிருந்தார். மலர் எடுத்துச் சொல்லி புரிய வைத்தார். ஆனால், மாமியார் கேட்ட பாடு இல்லை. கோபத்தில் மாமியார், மதி லேப்டாப்பை மூடி வைத்து விட்டார்.

அதோடு மாமனார் கணவர் வீட்டில் இருந்தார்கள். அவர்களுக்கு வேலை செய் என்றெல்லாம் கண்டிஷன் போட்டார். இதையெல்லாம் கேட்டு மதிக்கு கோபம் வருகிறது. அதோடு அந்த இடத்தில் இருந்த சுரேஷ், இதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையை செய்து கொண்டிருந்தார். இதனால் மதி, உங்கள் வீட்டில் இவ்வளவு கண்டிஷன் போட்டார்கள். எதுவுமே பேசாமல் இருக்கிறீர்கள் நியாயமா? என்றார். சுரேஷ், எல்லாத்துக்கும் குறை சொல்லாதே. என் அம்மா அப்பா சொல்வதை மட்டும் கேளு. அதுதான் உன் வேலை என்று திட்டி விட்டு சென்றார்.

அழகே அழகு:

தங்கராஜிற்கு தெரிந்தவர் பாக்யராஜ் பேங்கில் லோனுக்கு ஏற்பாடு செய்து தர சொல்லி கேட்டார். உடனே தங்கராஜ், பாக்யராஜ் பேங்கிற்கு ஃபோன் செய்து விசாரித்தார். அப்போது பாக்யராஜுக்கு ப்ரோமோஷன் கொடுத்து அவருக்கு வேறொரு டிபார்ட்மெண்டில் அனுப்பி இருக்கும் விஷயத்தை எல்லாம் தங்கராஜ் தெரிந்து கொண்டார். வீட்டில் யாரிடமும் உண்மையை சொல்லாமல் பாக்கியராஜ் மறைத்திருப்பதை நினைத்து தங்கராஜ் கோபப்பட்டார். இன்னொரு பக்கம் மலர், வீட்டு வேலைகள் எல்லாம் செய்து கொண்டிருந்தார். எல்லோரும் கேட்பதையும் செய்தார்.

சீரியல் ட்ராக்:

இது எல்லாம் பார்த்து மதிக்கு கோபம் தான் வருகிறது. மதி, மலரை வேலை செய்ய வேண்டாம் என்று திட்டினார். உடனே அங்கு வந்த மாமனார், மலரை திட்டி விட்டு மாமியார் ரூமுக்கு அனுப்பி வைத்தார். அங்கு சென்றால் பக்கத்தில் இருக்கும் தண்ணியை கூட எடுத்து குடிக்க முடியாமல் மலரை தான் மாமியார் வேலை வாங்கினார். இதையெல்லாம் பார்த்து மலரால் எதுவுமே பேச முடியல. ஆனால், மதிக்கு பயங்கர கோபம் வருகிறது. இவர்களைப் போலவே சுரேஷ் நடந்து கொள்வதால் மதி, சுரேஷிடம் சண்டை போட்டார்.

இன்னொரு பக்கம் தங்கராஜ், பாக்யராஜுக்கு ப்ரமோஷன் கிடைத்திருக்கும் விஷயத்தைப் பற்றி ரேவதி இடம் கேட்டார். ஆனால், ரேவதி தனக்கு எதுவும் தெரியாது போலவே நடித்தார்.

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் மாமியார், உன் புருஷன் கொடுத்த டீ டம்ளரை கூட எடுத்து போட முடியாதா? என்கிறார். அது அவரே செய்ய மாட்டாரா? என்று கேட்கிறார். இதனால் கோபப்பட்டு மாமியார் கத்துகிறார். மதி, நீங்கள் உங்கள் பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்திருக்கிறார்களா என்று பதிலுக்கு பதில் பேசுகிறார். இதனால் வீட்டில் பஞ்சாயத்து நடக்கிறது. சுரேஷ், என்ன நடந்தது என்று கூட விசாரிக்காமல் தன்னுடைய அம்மாவிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறார். மதி முடியாது என்று சொன்னதால் சுரேஷ் வீட்டை விட்டு வெளியே போ என்று தள்ளுகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full