மாமியாரிடம் வசமாக சிக்கிய மலரை காப்பாற்றினாரா மதி? விறுவிறுப்பில் அழகே அழகு
மாமியாரிடம் சிக்கிய மலரை காப்பாற்றும் மதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியலில் மதி உடைய கருத்துக்கு மாறாக சுரேஷ் வீட்டில் எல்லோருமே இருக்கிறார்கள். இதனால் மதிக்கும் அவருடைய மாமனார், மாமியார், சுரேஷ் ஆகிய மூவருக்குமே சண்டை நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, தங்கராஜிக்கும் மதிக்கும் சுத்தமாக செட்டாகவே இல்லை. இருந்தாலும் தன்னுடைய அப்பா, அம்மாவிற்காக மதி சகித்துக் கொண்டிருக்கிறார். கடந்த வாரம் சீரியலில் அழகு மலர் உடைய பிறந்தநாள் என்பதால் மதி சர்ப்ரைஸ் ஆக வீட்டில் கேக் வெட்டும் ஏற்பாடு செய்திருந்தார்.
மலருடைய மாமனார் மாமியாருக்கு பிடிக்கவில்லை என்றாலும் சகித்துக் கொண்டு அமைதியாக இருந்தார்கள். ரேவதி தன்னுடைய கணவர் தங்கராஜ் இடம் பொய் சொல்லிவிட்டு பிறந்தநாள் கொண்டாடத்திற்கு சென்றார். இதை அறிந்த தங்கராஜ் பயங்கரமாக கோபப்பட்டார். பின் வீட்டிற்கு வந்த ரேவதி இடம் ரொம்பவே கடுமையாக தங்கராஜ் நடந்து கொண்டார். ரேவதி எவ்வளவோ மன்னிப்பு கேட்டுமே தங்கராஜ் ஏற்றுக்கொள்ளவே இல்லை. ஒரு கட்டத்தில் தங்கராஜ், ரேவதியை இரவு என்று கூட பார்க்காமல் வீட்டை விட்டு வெளியே நிற்க சொன்னார்.ரேவதியுமே வீட்டு வாசலிலேயே அழுது கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.
அழகே அழகு:
மலர் ரொம்ப சந்தோஷமாக பாக்கியராஜ் உடன் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். பாக்யராஜ், மலருக்கு தேவையான அனைத்துமே வாங்கிக் கொடுத்தார். இன்னொரு பக்கம் தங்கராஜ் கொடுத்த தண்டனைக்காக ரேவதி வெளியே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார். தங்கராஜ் கொஞ்சம் கூட ஈவிறக்கம் இல்லாமல் உள்ளயே பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த சுரேஷ், மதியிடம் மலரை பற்றி விசாரித்தார். மதி, அவர்கள் இருவரும் வெளியே சென்று இருக்கிறார்கள். வீட்டில் யாருக்கும் தெரியாது. குழந்தை நம்முடன் தான் தூங்க போகிறார் என்றார். இதனால் சுரேஷும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோட்டில் சந்தோசமாக ஊர் சுற்றி முடித்து பாக்கியராஜ், மலர் இருவரும் வீட்டிற்கு வருகிறார்கள். மலர் சந்தோஷமாக மதியிடம் நடந்ததை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து மலரின் மாமியார் வந்து விடுகிறார். அப்போது அவர், என்ன நடக்கிறது? எங்கேயே வெளியே போன மாதிரி இருக்கிறது? என்று எல்லாம் கேட்கிறார். பயத்தில் மலரால் எதுவுமே பேச முடியவில்லை. மதி, அவர்கள் எங்கும் போகவில்லை. அவங்க அம்மா கொடுத்த சுடிதரை போட்டு பார்த்தார். அவ்வளவு தான் என்று ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். மலரின் மாமியாரும் அதை நம்பி விட்டு உள்ளே சென்று விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் மதி செய்த விஷயத்தை பாராட்டி சுரேஷ் பேசுகிறார். மதி, மலர் இந்த வீட்டிற்காக ரொம்பவே கஷ்டப்படுகிறார். அதனால் தான் இப்படி செய்தேன் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் பாக்கியராஜ் ஃபோனில் தங்கராஜ் வைத்த மெசேஜ் எல்லாம் கேட்கிறார். ரேவதிக்கு ஏதாவது பிரச்சனை இருக்குமோ? என்று பயப்படுகிறார். பின் யாருக்கும் தெரியாமல் பாக்யராஜ் கிளம்பி ரேவதி வீட்டிற்கு போகிறார். அங்கு வாசலில் ரேவதி உட்கார்ந்திருப்பதை பார்த்து பாக்கியராஜ் பதறிப் போகிறார். என்ன நடந்தது? என்று பாக்கியராஜ் விசாரிக்கிறார். ரேவதி எதுவும் பேசாமல் அழுகிறார். அந்த சமயம் பார்த்து தங்கராஜ் வெளியே வந்து ரொம்ப திமிராக பேசுகிறார். பாக்யராஜ், ரேவதிக்காக சப்போர்ட் செய்து பேசுகிறார். தங்கராஜ், என்னை மீறி உன் அண்ணனுடன் சென்று விடுவாயா? என்று மிரட்டுகிறார். ரேவதி என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கிறார்.