தங்கராஜை எதிர்த்து நிற்கும் பாக்யராஜ், ரேவதி எடுக்கும் முடிவு என்ன? அழகே அழகு

தங்கராஜை எதிர்த்து ரேவதி எடுக்கும் முடிவு என்ன?

By subhashini · 7/6/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியலில் பாக்கியராஜ்- அழகுமலர் இருவரும் தங்களுடைய குடும்பத்திற்காக ரொம்பவே கஷ்டப்படுகிறார்கள். இவர்கள் இருவருடைய உழைப்பையும் கஷ்டத்தையும் யாருமே புரிந்து கொள்வதில்லை. மலருடைய மாமியார், மாமனார் இருவருமே ரொம்பவே வேலை சொல்லி கஷ்டப்படுத்துகிறார்கள். பாக்யராஜால் எதுவுமே பேச முடியவில்லை. சுரேஷ் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். இவர் ரொம்பவே ஆண் ஆதிகத்துடன் நடந்து கொள்கிறார். இவர்களுடைய மொத்த குடும்பத்தையும் கட்டி ஆள்வது தங்கராஜ் தான்.

பாக்கியராஜின் தங்கை ரேவதியை தங்கராஜ் திருமணம் செய்திருக்கிறார். தங்கராஜ் சொல்வதை தான் மொத்த குடும்பமே கேட்டுக் கொள்கிறது. பாக்யராஜ் உடைய அப்பா, அம்மா இருவருமே தங்கராஜ் உடைய பேச்சுக்கு மறுபேச்சு இல்லை. தங்கராஜ் செய்த சதியால் சுரேஷ், அலகு மதியை திருமணம் செய்து கொள்கிறார். மதி- சுரேஷ் இருவருக்கும் இடையே ஒத்துப் போகவில்லை. மதி, ஒரு பெண் சுதந்திரமாக இருக்க வேண்டும். அவளுக்கு முடிவெடுக்கும் உரிமை உண்டு என்பது போல நடந்து கொள்கிறார். ஆனால், மதி உடைய கருத்துக்கு மாறாக சுரேஷ் வீட்டில் எல்லோருமே இருக்கிறார்கள்.

அழகே அழகு சீரியல்:

இதனால் மதிக்கும் அவருடைய மாமனார், மாமியார், சுரேஷ் ஆகிய மூவருக்குமே சண்டை நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, தங்கராஜிக்கும் மதிக்கும் சுத்தமாக செட்டாகவே இல்லை. இருந்தாலும் தன்னுடைய அப்பா, அம்மாவிற்காக மதி சகித்துக் கொண்டிருக்கிறார். கடந்த வாரம் சீரியலில்அழகு மலர் உடைய பிறந்தநாள் என்பதால் மதி சர்ப்ரைஸ் ஆக வீட்டில் கேக் வெட்டும் ஏற்பாடு செய்திருந்தார். மலருடைய மாமனார் மாமியாருக்கு பிடிக்கவில்லை என்றாலும் சகித்துக் கொண்டு அமைதியாக இருந்தார்கள்.

சீரியல் ட்ராக்:

ரேவதி தன்னுடைய கணவர் தங்கராஜ் இடம் பொய் சொல்லிவிட்டு பிறந்தநாள் கொண்டாடத்திற்கு சென்றார். இதை அறிந்த தங்கராஜ் பயங்கரமாக கோபப்பட்டார். பின் வீட்டிற்கு வந்த ரேவதி இடம் ரொம்பவே கடுமையாக தங்கராஜ் நடந்து கொண்டார். ரேவதி எவ்வளவோ மன்னிப்பு கேட்டுமே தங்கராஜ் ஏற்றுக்கொள்ளவே இல்லை. ஒரு கட்டத்தில் தங்கராஜ், ரேவதியை இரவு என்று கூட பார்க்காமல் வீட்டை விட்டு வெளியே நிற்க சொன்னார்.ரேவதியுமே வீட்டு வாசலிலேயே அழுது கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பாக்கியராஜ், தங்கராஜ் மெசேஜ் பார்க்கிறார். அதில் கோபமாக இருக்கிறது. பாக்யராஜுக்கு ரொம்பவே குழப்பமாக இருக்கிறது. பின் ரேவதியை பார்க்க பாக்யராஜ் கிளம்பி போகிறார். ரேவதி வீட்டு வாசலிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அதை பார்த்து பாக்கியராஜ் பதறி போய் நடந்ததை விசாரிக்கிறார். அப்போது தங்கராஜ், என் பேச்சைக் கேட்கவில்லை என்றால் இங்கு தான் இருக்கணும் என்று சொல்கிறார். பாக்யராஜ், நீ உடனே கிளம்பி வா நம்முடைய வீட்டிற்கு போகலாம் என்று ரேவதியை அழைக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full