தங்கராஜின் சகுனி வேலையால் ரொம்ப மோசமாக பேசும் சுரேஷ், மதி என்ன செய்ய போகிறார்? அழகே அழகு
தங்கராஜின் சகுனி வேலையால் ரொம்ப மோசமாக பேசும் சுரேஷ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியலில் மதி தன்னுடைய சுயமரியாதைக்காக தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். சுரேஷ், நீ எங்கேயாவது போ. என் வீட்டில் இருக்காதே. வேலையை முடித்து வரும்போது நீ இங்க இருக்க கூடாது. எங்கயாவது போய் தொலை. உன்னால்தான் என் வீட்டில் நிம்மதி இல்லை என்று ரொம்ப அவமரியாதையாக பேசி விட்டார். அதற்குப்பின் மதி தன்னை சுயமரியாதை இல்லாதவள் என்று பேசியதை நினைத்து மலர் வருத்தப்பட்டு கொண்டிருந்தார். பாக்கியராஜ் எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் மலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மதி வீட்டிற்கு வெளியே உட்கார்ந்து இருப்பதால் லட்சுமி கொதித்தார். அவளை வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். இதைப்பற்றி மாமனார், தங்கராஜ்க்கு போன் செய்து சொன்னார். கோபப்பட்ட தங்கராஜ், மதியின் அப்பா, அம்மாவிற்கு ஃபோன் செய்து சுரேஷ் வீட்டில் நடந்ததை எல்லாம் சொன்னார். அதோடு மதியை அங்கிருந்து வீட்டிற்கு அழைத்து வர சொன்னார். மதியின் அப்பாவுமே அங்கிருந்து கிளம்பினார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த சுரேஷ், மதி வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டிருப்பதை பார்த்து கோபப்பட்டார்.
அழகே அழகு:
அவளை வீட்டை விட்டு துரத்துங்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். பாக்யராஜ், மலர் இருவரும் எவ்வளவோ எடுத்து சொல்லி புரிய வைத்தார்கள். ஆனால், வீட்டில் யாருமே கேட்கவில்லை. மதியின் அப்பா வந்தவுடன் வீடு ருத்ரதாண்டவம் ஆடுகிறது. லட்சுமி பேசிய பேச்சைக் கேட்டு மதி அப்பா ரொம்பவே மனமடைந்து விட்டார். பின் தன் மகளை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தார். அங்கிருந்து மதி கிளம்பியதால் லட்சுமி ரொம்பவே சந்தோசப்பட்டார். பின் மதி, சுரேஷ் பேசிய வார்த்தைகள் எல்லாம் நினைத்து பார்த்து வேதனைப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மதியின் பெற்றோர்கள் எவ்வளவோ புகுந்த வீட்டை பற்றி எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறார்கள். ஆனால், மதி தன்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுப்பதாக இல்லை என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் தங்கராஜ், சுரேஷிற்கு ஃபோன் செய்து உன் அண்ணன் அவன் பொண்டாட்டியை கைக்குள் அடக்கி வைத்திருக்கிறான். நீ ஏன் இப்படி இருக்கிறாய்? உன் பொண்டாட்டியை உன் கட்டுப்பாட்டில் வை என்றெல்லாம் ஒன்னுக்கு ரெண்டாக்கி ஏற்றி விடுகிறார்.
இதனால் கொந்தளித்த சுரேஷ், மதிக்கு போன் செய்து ரொம்ப மோசமாக பேசுகிறார். அதற்குப்பின் லட்சுமி, சுரேஷுக்கு வேறொரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கணும். மதி வீட்டிற்கு வேண்டாம் என்றெல்லாம் சொல்கிறார். மலரால் எதுவும் பேச முடியவில்லை. அதற்குப்பின் சுரேஷ், வேலைக்கு கிளம்புவதாக வீட்டில் பொய் சொல்லி விட்டு சுரேஷின் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார்.