படு ரோமன்ஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டு தனது காதலரை அறிமுகம் செய்த அழகு சீரியல் நடிகை (லவ்வரா இருந்தாலும் ஒரு அளவு வேணாமா )

By Rajkumar · 1/8/2021

அழகு சீரியல் நடிகை சஹானா காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது காதல் பற்றி வெளியுலகிற்கு அறிவித்துள்ளார். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவிடுகிறது. அதிலும் சன் தொலைக்காட்சி தான் சீரியல்களின் அரசனாக இருந்து வருகிறது. தொலைக்காட்சி சீரியல்கள் பொறுத்த வரை சன் டிவி தான் இல்லத் தரசிகளின் ஒரே சாய்ஸ்.

அந்த வகையில் சமீபத்தில் நிறைவடைந்த 'அழகு' சீரியல் இல்லத் தரசிகள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த தொடரில் ரேவதி, தலைவாசல் விஜய், ஸ்ருதி ராஜ், ஐஸ்வர்யா உல்ட்டா பலர் நடித்தனர். இந்த தொடரில் ரேவதியின் மகளாக நடித்து வந்தார் சஹானா. ஆனால், இவர் பாதியில் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

இதையும் பாருங்க : பாஷா ரஜினி மாதிரி பண்ணுங்க - வெறும் ஓவர் கோட்டில் பீஸ்ட் பட நடிகை வெளியிட்ட போஸிற்கு நெட்டிசன் செய்த கமன்ட்.

இதுகுறித்து தெரிவித்த அவர், இந்த சீரியலில் முதலில் இயக்குனர்கள் என்னிடம் நடிகை ரேவதிக்கு லீடு கொடுக்கும் கதையில் நடிக்க உள்ளீர்கள் என்று சொல்லிதான் கூப்பிட்டார்கள்.உங்கள் கேரக்டருக்கு தான் ரொம்ப முக்கியத்துவம் இருக்குன்னு சொன்னார்கள்.ஆனால், எபிசோடுகள் செல்ல செல்ல என் கேரக்டர் எனக்கே ரொம்ப போரடிக்கிற மாதிரி தோன்றியதால் இந்த சீரியலில் இருந்து விலகியதாக கூறி இருந்தார்.

https://twitter.com/chettyrajubhai/status/1421705362097377280

இப்படி ஒரு நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள சஹானா இவர் தான் எனது காதலர் அபிஷேக் என அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனையடுத்து சஹானாவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.மேலும், சஹானா தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் என்னதான் காதலராக இருந்தாலும் இப்படியா என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

behindtalkies AMP · Quick view
View full