அழகு சீரியலில் களமிறங்கும் 90ஸ் நடிகை - ரேவதிக்கு பதில் இவங்களா ?

By Rajkumar · 19/6/2020

கொரோனா பிரச்சனை காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் எல்லாம் ரத்தாகி இருந்தது. இருப்பினும் இடையில் சினிமாவின் போஸ்ட ப்ரொடக்சன் பணிகள் மட்டும் அனுமதிப்பட்டிருந்த நிலையில் சின்னத்திரை தொடர்களை பல கட்டுப்பாடுகளுடன் 60 பேர் மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் சின்னத்திரை ஷூட்டிங் அனைத்தும் துவங்கப்பட்டது.

ஆனால், சென்னையில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமானதால் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. சினிமா ஷூட்டிங் இல்லாததால் தற்போது ரிலீஸ் ஆக இருந்த படங்கள் அனைத்தும் OTTயில் வருகிறது. இப்படி ஒரு நிலையில் ன் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அழகு சீரியலில் அதிரடி மாற்றம் ஒன்று நடைபெற்றுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அழகு தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்ற ஒரு தொடராக இருந்து வந்தது இந்த தொடர் கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது 700 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் ரேவதி தலைவாசல் விஜய் தென்றல் தொடர்புகள் சுருதி காயத்ரி ஜெயராம் என்று பலர் நடித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CBiXE5jFuhW/

இந்தநிலையில் இந்த தொடரில் நடிகை ஊர்வசி கமிட்டாகி இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது இதனை உறுதி செய்யும் விதமாக இந்த தொடரில் நடித்து வரும் அபினாஷ் சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஊர்வசியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, அழகு சீரியலில் விரைவில் ஒரு சஸ்பென்ஸ் வர இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ரேவதிக்கு பதிலாகத்தான் ஊர்வசி நடிக்க உள்ளார் என்றும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full