ராமமூர்த்தி கதாபாத்திரத்தில் அவர் நடிக்கல வாழ்ந்தார் - பாக்கியலட்சுமி நடிகர் சதீஷின் உருக்கமான பதிவு

By subhashini · 7/9/2024

பாக்கியலட்சுமி ராமமூர்த்தி குறித்து நடிகர் சதீஸ் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் பாக்கியலட்சுமி ஒன்று. இந்த சீரியல் பெண்கள் தங்களின் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. இந்த சீரியலில் பாக்கியா என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா, அவரின் கணவனாக கோபி என்ற கதாபாத்திரத்தில் சதீஷ் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் நேகா, ரேஷ்மா,ரோசரி உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்த சீரியல் ஒளிப்பரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கின்றது. தற்போது சீரியலில் ஈஸ்வரி, குழந்தை இல்லை என்று அமிர்தாவிடம் கேட்க, எழில்- ஈஸ்வரிக்கு இடையே பயங்கர சண்டை நடந்தது. இதனால் எழில் வீட்டை விட்டு சென்று விட்டார். பின் தாத்தாவின் 80-வது பிறந்த நாளை கோயிலில் கோலாகலமாக பாக்கியா குடும்பம் கொண்டாடி இருந்தார்கள்.

பாக்கியலட்சுமி சீரியல்:

இந்த விழாவிற்கு எழில்- அமிர்தா வந்திருந்தார்கள். பின் கோபியும் இந்த விழாவிற்கு வந்தார். ஆனால், ஈஸ்வரி- ராமமூர்த்தி இருவருமே கோபியை திட்டி அனுப்பி விட்டார்கள். பின் ராமமூர்த்தி, மனநிறைவில் குடும்பத்தில் எல்லோரிடமும் பேசி விட்டு தூங்கினார். மறுநாள் காலையில் அவர் இறந்துவிட்டார். இவருடைய இறப்பு பாக்யா குடும்பத்தில் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இறுதி சடங்கை பாக்கியா தான் செய்ய வேண்டும் என்று ஈஸ்வரி சொல்கிறார்.

ராமமூர்த்தி கதாபாத்திரம்:

இதனால் இனி அடுத்து என்ன நடக்கும்? என்ற பரபரப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் ராமமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் எஸ்டிபி ரோசரி. இவர் இதற்கு முன்பே நிறைய சீரியல்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் படங்களிலும் கூட நடித்திருக்கிறார். இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கியது பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்த சீரியலின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது.

சதீஸ் போஸ்ட்:

சீரியலில் நடிகர் ரோசரி இறந்தது போல காட்சி காண்பித்திருக்கிறார்கள். இனி இவர் இந்த சீரியலில் நடிக்கப் போவதில்லை என்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது. இது தொடர்பாக நடிகர் ரோசரி பேட்டி ஒன்று அளித்து இருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கோபி என்கிற சதீஷ், எல்லாரும் நல்லா இருக்கணும், நல்லா இருக்க என்னுடைய நல்வாழ்த்துக்கள், நல்லாசிகள். ராமமூர்த்தி கதாபாத்திரம் முடிந்தது, 1500 எபிசோடு கடந்தது.

View this post on Instagram

A post shared by sathish kumar (@sathish_gopi_human_actor)

ராமமூர்த்தி குறித்து சொன்னது:

என்னுடைய அன்பு சகோதரர், நண்பர், மூத்த நடிகர் ரோசரி சார் அந்த கதாபாத்திரத்தில் நடித்தார் என்று சொல்லக்கூடாது, அப்படியே வாழ்ந்தார். அவர் வீட்டை விட்டு வந்து என் வீடுன்னு சொல்லக்கூடாது பாக்கியா வீட்டுக்கு வந்து ராமமூர்த்தியாக வாழ்ந்தார். எவ்வளவோ தருணங்களில் அவருடைய ஒழுக்கம், நடிப்பு எல்லாத்தையும் பார்த்து நான் வாயை பிளந்து இருக்கிறேன். உங்க அன்பு, ஆதரவு, பாசம், வாழ்த்துக்கள் எல்லாமே ரோசரி சாருக்கும் அவருடைய குடும்பத்துக்கும் கிடைக்கணும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன் என்று கூறி இருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full