ஹோட்டலில் தொல்லை கொடுக்கும் கவுன்சிலர், சமாளிப்பாரா பாக்கியா? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா நேரத்துடன் இருந்து வேலைக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் ஈஸ்வரி, பெரிய பஞ்சாயத்தை செய்து கொண்டிருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே எவ்வளவு எடுத்துச் சொல்லியுமே ஈஸ்வரி கேட்கவில்லை. ருத்ர தாண்டவம் ஆடி இருந்தார். இன்னொரு பக்கம் பாக்கியா, கவுன்சிலர் செய்த வேலையை கடையின் ஓனரிடம் சொன்னார். ஆனால், அவர் இதெல்லாம் நீங்கள்தான் பார்த்துக் கொள்ளணும். எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னவுடன் பாக்கியா ஷாக் ஆனார்.
பாக்கியா, கவுன்சிலர் விஷயத்தில் நம்ம தான் ஏதாவது செய்யணும் பார்த்துக் கொள்ளலாம் என்று செல்வி இடம் சொன்னார். அப்போது இனியா ஹோட்டலுக்கு வந்தார். அவரிடம் பாக்கியா, வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை தானே என்று கேட்டார். அதற்கு இனியா, நீ பணம் ஏதாவது வாங்கினீர்களா? என்று கேட்டார். உடனே செல்வி, அவர்கள் ஒன்னும் பெரிதாக தரவில்லை என்று நடந்ததை சொல்ல வர, பாக்கியா தடுத்து நிறுத்தி நீ இந்த விஷயத்தை விடு. அம்மாவுக்காக ஏதாவது செய்யணும் என்று நினைத்தால் அந்த ரெஸ்டாரண்டை நீ எடுத்து நடத்து என்று சொன்னார்.
பாக்கியலட்சுமி:
இன்னொரு பக்கம் வீட்டில் அமிர்தா, கிச்சனில் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த ஈஸ்வரி, ஒவ்வொரு வேலைகளையும் குறை சொல்லிக் கொண்டிருந்தார். இதை பார்த்த எழில், எதுக்கெடுத்தாலுமே அமிர்தாவை எதற்கு குறை சொல்கிறீர்கள். இந்த வீட்டில் அதிக வேலை அமிர்தா தான் செய்தார். இந்த வீட்டில் ஜெனியும் இருக்கிறார். அவர் எந்த வேலையுமே செய்யவில்லை என்று சொன்னார். இதை வெளியில் இருந்த செழியன் கேட்டு வருத்தப்பட்டார். அந்த சமயம் பார்த்து வந்த பாக்கியா, எனக்கு யார் கையும் நம்பி வேலை செய்ய விருப்பமில்லை.
கடந்த வாரம் எபிசோட்:
தேவையில்லாமல் பிரச்சினை செய்தாதீர்கள் என்று தன்னுடைய மாமியாரிடம் கோபமாக பேசி இருந்தார். அதற்கு பின் செழியன், நீ வேலை செய்யாததை பற்றி எழில் குறை சொல்கிறார் என்றார். இதை கேட்ட ஜெனி, னக்கும் இங்கு இருக்க பிடிக்கவில்லை. அம்மா வீட்டிலேயே இருக்கலாம் என்றார். அந்த சமயம் வந்த பாக்கியா, எனக்கு கடையில் நிறைய வேலை இருக்கிறது. நீ கொஞ்சம் அமிர்தாவிற்கு உதவி செய் என்று சொல்ல, ஜெனியும் எதுவும் பேச முடியாமல் சரி என்றார். பின் பாக்கியா ஹோட்டலுக்கு சாப்பிட கோபி வந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோபி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பாக்கியாவின் கஷ்டங்களை பற்றி ரொம்ப எமோஷனலாக பேசினார். பாக்கியாவும் அமைதியாக இருக்கிறார். அப்போது கோபி, உனக்கு ஏதாவது உதவி வேண்டும் என்றால் தயங்காமல் என்னிடம் கேள் என்கிறார். அதற்கு பாக்கியா, அத்தை தேவையில்லாமல் வீட்டில் பிரச்சனை செய்கிறார்கள். அதை மட்டும் கொஞ்சம் அவர்களிடம் எடுத்து சொல்லி புரிய வையுங்கள் என்றவுடன் கோபியும் சரி என்கிறார். அதற்கு பின் ஈஸ்வரி, கோபி இருவருமே இனியாவை பார்க்க அவருடைய மாமனார் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள். அவர்களை பார்த்தவுடன் இனியா ரொம்ப சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் மூவரும் தனியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஈஸ்வரி, பாக்கியா ரெஸ்டாரண்ட் விஷயமாக பேசுகிறார். அதற்கு இனியா, எனக்கு தெரியும் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.
சீரியல் ட்ராக்:
அம்மா எனக்காக எல்லாத்தையும் இழந்து விட்டார் என்று நினைத்தால் வருத்தமாக இருக்கிறது என்று எமோஷனலாக பேசுகிறார். அதற்கு ஈஸ்வரி, உன்னுடைய திருமண வாழ்க்கையை பற்றி மட்டும் யோசி என்று அறிவுரை சொல்கிறார். அதற்கு பின் ஈஸ்வரி- கோபி இருவரும் காரில் பேசிக்கொண்டு வருகிறார்கள். அப்போது கோபி, பாக்கியாவுக்கு சப்போர்ட் செய்து பேசினார். ஈஸ்வரி வழக்கம்போல் பாக்கியாவையும் அவருடைய தொழிலையும் ரொம்ப மோசமாக திட்டி பேசிக் கொண்டிருக்கிறார். கடைசியில் ஹோட்டலில் செல்வியின் மகன் ஆகாஷ், வேலை கேட்க, பாக்கியாவும் சம்மதிக்கிறார். பின் வேலை எல்லாம் முடித்துவிட்டு கிளம்பும் நேரத்தில் கவுன்சிலர் வருகிறார். பாக்கியா, நீங்கள் சொல்வதை எல்லாம் இங்கு சமைக்க முடியாது. தேவையில்லாமல் பிரச்சனை செய்யாதீர்கள் என்று சொல்கிறார். உடனே கவுன்சிலர், இப்படியெல்லாம் பேசாதே, கடைசி நடத்த முடியாது என்று அங்கேயே உட்காருகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.