ராமமூர்த்திக்கு இறுதி சடங்குகளை செய்தது யார்? வேதனையில் வாடும் மொத்த குடும்பம்- பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தாத்தாவின் 80 ஆவது பிறந்தநாளை கோவிலில் தடபுடலாக கொண்டாடி இருந்தார்கள். தாத்தாவின் பிறந்தநாளுக்கு எழில் வந்தார். பின் உண்மை அறிந்த கோபி கோவிலுக்கு வந்தார். கோபியை பார்த்தவுடன் மொத்த பேருமே அதிர்ச்சியாக, ராமமூர்த்தி கோபப்பட்டு பேசி இருந்தார். பின் ஈஸ்வரி- ராமமூர்த்தி எவ்வளவு திட்டியும், அசிங்கப்படுத்தியும் கோபி கிளம்பாமல் அங்கே இருந்தார். அதன் பின் கோபி ஆசிர்வாதம் வாங்க வந்தவுடன் ராமமூர்த்தி திட்டி ஆசீர்வாதம் பண்ணவில்லை.
உடனே கோபி, தன் அம்மாவிடம் மன்னிப்பு கேட்க, ஈஸ்வரியும் கோபமாக திட்டி இருந்தார். பின் ராமமூர்த்தி, மனசுக்கு நிறைவாக இருக்கிறது என்று சொல்லி வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். கடந்த வாரம் ராமமூர்த்தி தூக்கம் வராமல் அவஸ்தைப் பட்டு இருந்தார். உடனே ஈஸ்வரி, அவரை சமாளித்து தூங்க வைத்தார். மறுநாள் ஈஸ்வரி, ராமமூர்த்தியை எழுப்பி இருந்தார். ஆனால், ராமமூர்த்தி எழவே இல்லை. பயத்தில் ஈஸ்வரி கத்த, மொத்த குடும்பமே வந்து ராமமூர்த்தியை எழுப்பி இருந்தார்கள். ஆனால், அவர் எழவே இல்லை. பின் மருத்துவரை வரவைத்து செக் பண்ண, அவர் இறந்துவிட்டார் என்று சொன்னவுடன் மொத்த குடும்பமும் நம்பவும் முடியாமல், ஏற்று கொள்ள முடியாமல் பரிதவித்து நிற்கிறது.
பாக்கியலட்சுமி சீரியல்:
தன்னுடைய தந்தை இறந்ததை அறிந்த கோபி ரொம்ப அழுகிறார். ஒவ்வொருவருமே தாத்தாவை நினைத்து புலம்பி அழுது கொண்டிருக்கிறார்கள். அப்போது பழனிசாமி வீட்டிற்கு வந்து கோபிக்கு ஆறுதல் சொல்லி, ராமமூர்த்தி பார்த்து வருத்தப்பட்டு அழ, பாக்கியாவும் ரொம்பவே மனம் உடைந்து அழுகிறார். பழனிச்சாமி, இறுதி சடங்கிற்கு தேவையான வேலைகளை செய்கிறார். ஒவ்வொருவரும் ராமமூர்த்திக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறார்கள். அப்போது ராதிகாவின் அம்மா வந்து ஓவராக ட்ராமா செய்தார். இதை பார்த்து ஈஸ்வரிக்கு கோபம் வருகிறது. பின் ராதிகா, தன்னுடைய அம்மாவை இழுத்து சென்று விடுகிறார்.
சீரியல் கதை:
பழனிசாமி எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்வதை பார்த்து கோபி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், இறுதி சடங்கு செய்ய கோபி தயாராகி வருகிறார். உடனே ஈஸ்வரி, தடுத்து நீ செய்யக்கூடாது. என்னுடைய புருசனின் கடைசி ஆசையே அதுதான் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. கோபி, என்னுடைய அப்பாவிற்கு நான் தான் இறுதி சடங்கு செய்வேன் என்று அழுது கெஞ்சுகிறார். இருந்தாலுமே, ஈஸ்வரி ஏற்றுக் கொள்ளவில்லை. பின் வீட்டில் உள்ள எல்லோருமே ஈஸ்வரியை சமாதானம் செய்ய பார்க்கிறார்கள். ஆனால், அவர் ஒத்துக் கொள்ளவே இல்லை. இதனால் ராதிகாவின் அம்மா ஈஸ்வரிடம் சண்டை போடுகிறார்.
நேற்று எபிசோட்:
ராதிகா-ஈஸ்வரி இடையே வாக்குவாதம் ஆகிறது. மொத்த பேருமே கோபிக்கு ஆதரவாக நின்று பேசியும் மனம் மாறாமல் ஈஸ்வரி இருக்கிறார். நேற்று எபிசோடில், கோபி இறுதி சடங்குகளை செய்யக்கூடாது என்று ஈஸ்வரி பிடிவாதம் பிடிக்கிறார். பின் எல்லோருமே, யார் செய்வார்கள்? என்று கேட்டதற்கு பாக்யா தான். மகள் இடத்தில் இருந்து எல்லாமே செய்வாள் என்று சொன்னவுடன் எல்லோருமே அதிர்ச்சியாகி இருக்கிறார்கள். உடனே, பாக்கியாவை கோபி திட்டுகிறார். ஆனால், ஈஸ்வரி தன்னுடைய முடிவிலிருந்து மாறவே இல்லை. பின் எல்லோருமே ஈஸ்வரிக்கு எதிராக பேசியும், சமாதானப்படுத்தியும் பார்த்தார்கள்.
இன்றைய எபிசோட்:
கடைசியில் பாக்கியா தன்னுடைய மாமனாருக்கு இறுதி சடங்குகளை செய்கிறார். இதை பார்த்து கோபி அழுது புலம்பி கத்துகிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தி இறுதி ஊர்வலம் நடந்து கொண்டிருக்கின்றது. பாக்யா தான் எல்லாமே செய்கிறார். கோபி எவ்வளவு தடுத்தும் ஈஸ்வரி ஒத்துக்கொள்ளவில்லை. ராமமூர்த்தியை மயான பூமிக்கு எடுத்து செல்கிறார்கள். கூடவே பாக்கியா போய் கடைசி சடங்குகளை எல்லாம் செய்து கதறி கதறி அழுகிறார். கோபி ஓரமாக நின்று எதுவும் செய்ய முடியவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறார். பாக்கியா தன்னுடைய மாமனாருக்கு கொல்லி வைத்து கதறி அழுது மயங்கி விழுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது