தன் மாமனாருக்காக விழா நடத்த இருக்கும் பாக்கியா, ராதிகாவுடன் சந்தோசத்தில் கோபி- விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

By subhashini · 16/9/2024

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராமமூர்த்தி இறந்துவிட்டார் என்று சொன்னவுடன் மொத்த குடும்பமும் பரிதவித்து இருந்தது. ஒவ்வொருவருமே தாத்தாவை நினைத்து புலம்பி அழுது இருந்தார்கள். கடந்த வாரம், இறுதி சடங்கு செய்ய கோபி தயாராகி இருந்தார். ஆனால் ஈஸ்வரி, நீ செய்யக்கூடாது என்று சொன்னவுடன் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. கடைசியில் பாக்கியா தன்னுடைய மாமனாருக்கு இறுதி சடங்குகளை எல்லாம் செய்தார். கோபி ஓரமாக நின்று எதுவும் செய்ய முடியவில்லை என்ற வருத்தத்தில் இருந்தார்.

மறுநாள் ராமமூர்த்தியின் அஸ்தியை செழியன்,எழில் வாங்கி வந்து கங்கையில் கரைத்தார்கள். கோபி, ராதிகாவும் மயானத்திற்கு போயி அஸ்தியை வாங்கி கரைத்தார். எல்லா சடங்குகளையும் எழில், செழியன் முடித்து விட்டு வீட்டிற்கு வந்தார்கள். மேலும் , ராமமூர்த்தியை நினைத்து ஈஸ்வரி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். அதன் பின் எல்லோருமே வீட்டில் தங்களுடைய அடுத்த வேலைகளை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே பாக்கியா, ஈஸ்வரிக்கு நெத்தியில் பொட்டு வைத்து, நீங்கள் இப்படி இருந்தால் தான் மாமாவுக்கு பிடிக்கும் என்று சொல்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியல்:

மறுநாள் ராமமூர்த்தியின் துணிகளை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர் கடிதம் எழுதி வைத்த விஷயம் தெரிந்தது. பின் எல்லோரையுமே ஹாலில் வரவைத்த ஈஸ்வரி, செழியனிடம் உயிலை கொடுத்து படிக்க சொல்லி, அதைக் கேட்டு அனைவருமே கண் கலங்குகிறார்கள். பின் ஒவ்வொருவருக்கும் எழுதிய கடிதத்தை எடுத்துப் படித்தார்கள். ஈஸ்வரி, ராமமூர்த்தியின் கடிதத்தை படித்து மனம் உடைந்து அழுதார். அதன் பின் பாக்கியாவும் கடிதத்தை படித்து தேம்பி தேம்பி அழுதார்.

சீரியல் கதை:

அதனை அடுத்து ஒவ்வொருவரும் ராமமூர்த்தி எழுதிய கடிதத்தை படித்து முடித்து வருத்தப்பட, இதையெல்லாம் வாசலில் நின்று ராமமூர்த்தி பார்த்தார். இன்னொரு பக்கம் கோபி, பாரில் நிலைமை தெரியாத அளவிற்கு குடித்து விட்டு உளறி இருந்தார். அப்போது ராதிகா வந்து கோபியை அழைத்துச் சென்றார். இன்னொரு பக்கம் வீட்டில் அமிர்தா- எழில் இருவரும் கிளம்புகிறோம் என்று சொன்னவுடன் எல்லோருமே வருத்தப்பட்டார்கள். அதற்கு எழில், தாத்தாவின் ஆசையை நிறைவேற்றி விட்டு நான் வருகிறேன் என்று சமாதானம் செய்துவிட்டு சென்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில், ரெஸ்டாரண்டில் பாக்கியா தன்னுடைய மாமனாரை நினைத்து வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருக்கிறார். அந்த சமயம் வந்த பழனிச்சாமி பாக்கியாவுக்கு ஆறுதல் சொல்கிறார். அப்போது பாக்கியா, என்னுடைய மாமனாருக்கு மரியாதை செலுத்தும் வகையில் உறவினர்களை மட்டும் அழைத்து சின்ன விசேஷம் நடத்த இருக்கிறேன் என்று சொன்னவுடன் பழனிச்சாமி நல்ல ஐடியா செய்யுங்கள். எல்லோரும் துணையாக இருக்கிறோம் என்று ஆறுதல் சொல்லி இருந்தார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் வீட்டில் ஈஸ்வரி, தன்னுடைய கணவரின் 80 ஆவது பிறந்தநாள் வீடியோவை பார்த்து பார்த்து அழுது கொண்டிருக்கிறார். செழியன்- ஜெனி இருவருமே அவருக்கு சமாதானம் செய்கிறார்கள். பின் ராதிகா வீட்டில் கோபி தூங்கிக்கொண்டு இருக்க ராதிகா அவரை எழுப்பி சாப்பிட சொல்லி அன்பாக பேசுகிறார். இதை பார்த்த கோபி சந்தோசப்பட்டு, என்னை விட்டு போகாதே என்று சொல்லி வருத்தப்படுகிறார். அதற்கு ராதிகா, நீங்கள் குடிப்பதை குறைத்து கொல்லுங்கள் என்று சொல்லி இருவருமே சந்தோசமாக பேசிக்கொண்டு இருந்தார்கள். கடைசியில் கோபி, செழியனை பார்த்து காபி சாப்பிட போகலாம் என்று கேட்க, செழியன் தயங்கி நிற்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full