நிதிஷ் அம்மா கேட்ட கேள்வியால் வாயடைத்து போன பாக்கியா, இனியா கொடுத்த பதிலடி - பாக்கியலட்சுமி

By subhashini · 13/6/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபி, பாக்கியா, இனியா மூவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ஈஸ்வரி ரொம்ப சந்தோஷப்பட்டார். பின் பாக்யாவிடம் ஈஸ்வரி, நீ கோபியை மீண்டும் கல்யாணம் செய்து கொள். இரண்டு பேரும் சந்தோஷமாக இருங்கள். என்னுடைய ஆசையே அதுதான் என்று பேசி இருந்தார். அதற்கு பாக்கியா, ஏதேதோ சொல்லி சமாளித்தார். அதற்கு பின் பாக்கியா ஹோட்டலுக்கு வந்த கவுன்சிலர், எனக்கு பிடித்த சாப்பாட்டை சமைத்துக் கொடுங்கள் என்று பாக்கியாவிடம் சொன்னார். பாக்கியாவுமே எதுவும் பேசாமல் கவுன்சிலர் சொன்ன சமையலை சமைத்துக் கொடுத்தார்.

கவுன்சிலரும் சாப்பிட்டுவிட்டு எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். அப்போது பாக்கியா, நீங்கள் தினமும் வந்து சாப்பிடுங்கள். எந்த பிரச்சினையும் செய்ய வேண்டாம் என்று சொன்னார். அதற்குப்பின் பாக்கியாவின் ஓட்டலுக்கு வருபவர்கள் தங்களுக்கு பிடித்த உணவை கேட்பதால் அவர் மனம் கோளாமல் சமைத்து தந்தார். இதை அறிந்த இனியா, தன்னுடைய அப்பாவிடம் இதைப் பற்றி சொன்னார். அவரும் பாக்கியாவிடம் தனக்கு பிடித்த சமையலை சொல்ல, பாக்கியாவுமே அதை சமைத்துக் கொண்டு வந்து தந்தார். அதை சாப்பிட்டு பார்த்து கோபி ரொம்பவே புகழ்ந்து பேசி இருந்தார்.

பாக்கியலட்சுமி:

நேற்று எபிசோட்டில் இனியா, வேலை முடித்துவிட்டு சுதாகர் வீட்டின் கதவை தட்டுகிறார். ஆனால், யாருமே திறக்கவில்லை. நிதிஷுக்கு போன் செய்துமே அவர் எடுக்கவில்லை. இனியா வெளியில் இருப்பது தெரிந்தும் நிதிஷ் வேண்டும் என்று கதவை திறக்காமல் உள்ளே இருந்தார். இதனால் இனியா தன்னுடைய அம்மாவின் ஹோட்டலுக்கு சென்று விட்டார். அங்கு வேலையை முடித்துவிட்டு இனியாவும் அவருடைய அம்மாவும் வீட்டிற்கு போனார்கள். அப்போது ஈஸ்வரி, என்ன பிரச்சனை? இந்நேரத்திற்கு வந்திருக்கிறாய் என்று கேட்டார். இனியா, ஒன்றுமில்லை சும்மாதான் வந்தேன். உங்களை எல்லாம் பார்க்கணும் போல் இருந்தது என்று ஏதோ சொல்லி சமாளித்துவிட்டார்.

நேற்று எபிசோட்:

அப்போது கோபிக்கு போன் செய்த சுதாகர், இனியா அங்கு இருக்கிறாளா? இன்னும் வீட்டிற்கு வரவில்லை என்று சொன்னார். உடனே கோபி, இனியா இங்குதான் இருக்கிறார். உங்களிடம் சொல்லவில்லையா? என்று கேட்க, எங்களிடம் எதுவுமே சொல்லாமல் அங்கு வந்து விட்டார். எதுவாக இருந்தாலும் சொல்லிட்டு செய்யணும் என்று சுதாகர் கோபப்பட்டார். பின் கோபி, அதைப் பற்றி இனியாவிடம் கேட்க ரூமிற்கு போனார். ஆனால், அங்கு பாக்கியா- இனியா இருவருமே நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார்கள். மறுநாள் காலையில் கோபி, இனியா யாரிடமும் சொல்லாமல் வீட்டிற்கு வந்ததை பற்றி ஈஸ்வரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய இன்றைய எபிசோடில் கோபி, வீட்டில் சொல்லாத வந்ததை பற்றி விசாரிக்கிறார்.
அதற்கு இனியா, நான் நிதீஷுக்கு போன் செய்தேன். அவர் எடுக்கவில்லை. இதை சொன்னால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் தான் நான் சொல்லவில்லை என்று சொல்கிறார். அதற்குப்பின் இனியாவை அழைத்துக் கொண்டு பாக்கியா, கோபி, ஈஸ்வரி மூவருமே சுதாகரின் வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு ஈஸ்வரி, கோபி இருவருமே இனியா செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கிறார்கள். சுதாகர், அதெல்லாம் தேவையில்லை.
இனிமேல் எங்கு சென்றாலும் சொல்லிட்டு போகட்டும் என்று சொல்கிறார். அப்போது நிதிஷின் அம்மா, உங்கள் இருவருடைய உறவு பற்றி எனக்கு புரியவே இல்லை.

சீரியல் ட்ராக்:

விவாகரத்து ஆகியும் எப்படி இருவரும் ஒரே வீட்டில் இருக்கிறீர்கள் என்று கேட்கிறார். உடனே பாக்கியா, நாங்கள் தனி தனி வீட்டில் தான் இருக்கிறோம். எங்கள் இருவருக்கும் இடையே ஒன்றும் இல்லை. நீங்கள் தேவையில்லாத யோசிக்க வேண்டாம் என்று சொல்கிறார். அதற்குப்பின் இனியாவிடம் சுதாகர், ஏன் இப்படி செய்தாய்? என்று கேட்கிறார். அதற்கு இனியா, நான் வீட்டிற்கு தான் வந்தேன். காலிங் பெல் அடித்தும் யாரும் திறக்கவில்லை. போன் செய்தும் நிதிஷ் எடுக்கவில்லை. அதனால் தான் நான் எங்கள் வீட்டிற்கு போனேன் என்று சொல்கிறார். இதனால் நிதிஷ்க்கு பயங்கர கோபம் வருகிறது. இன்னொரு பக்கம் ஈஸ்வரி, பாக்கியா- கோபி இருவரிடமே மீண்டும் திருமணம் செய்து கொள்வதை பற்றி பேசுகிறார். கோபி முடியாது என்று அங்கு இருந்து கிளம்பி வருகிறார். பாக்கியா, முடிந்துபோன விஷயத்தை பேசாதீர்கள். உங்கள் மகனுக்கு நீங்கள் வேறு ஒரு கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full