செழியனுக்கு பாக்கியா சொன்ன அறிவுரை, இனியாவுக்கு ஈஸ்வரி போட்ட கண்டிஷன்- பாக்கியலட்சுமி

By subhashini · 27/9/2024

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபி தன் அம்மாவிடம் எவ்வளவோ பேசி மன்னிப்பு கேட்டார். ஆனால், ஈஸ்வரி மனம் மாறாமல் அப்படியே இருந்தார். இதனால் கோபப்பட்டு கோபி, உங்களை ரொம்ப வெறுக்கிறேன் என்று சொன்னவுடன், நான் வெறுப்பதற்கு கூட உன்னை ஒரு ஆளாக நினைக்கவில்லை என்று சொல்லிவிட்டு ஈஸ்வரி கிளம்பி இருந்தார். பின் கோபி, இதற்கெல்லாம் காரணம் பாக்கியா தான் என்று கோபப்பட்டார். இன்னொரு பக்கம், இனியா கல்லூரியில் நடந்த நடன போட்டியில் கலந்து கொண்டார்.

இந்த வாரம் பாக்கியா, சமையலுக்கு ஒரு ஆள் வேண்டும் என்று விளம்பரம் கொடுத்தார். இதை பார்த்த
கோபி, தன்னிடம் வேலை செய்யும் நபரை, பாக்யா ரெஸ்டாரண்டுக்கு வேலை செய்ய அனுப்பி இருந்தார். உடனே அவர் நண்பர் எதற்கு என்று கேட்க, பாக்கியாவை பழிவாங்க இதை செய்கிறேன் சென்று ஆக்ரோஷமாக கோபி பேசி இருந்தார். பின் அந்த நபர் பாக்கியாவின் ரெஸ்டாரண்டில் வேலைக்கு சேர்ந்தார். இதை அறிந்த கோபி ரொம்ப சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் இனியா கல்லூரியில் நடனம் போட்டி நடந்தது. அதில் இனியா நடனமாடி முடித்தார்.

பாக்கியலட்சுமி சீரியல்:

பின் இனியா தன்னுடைய நடன போட்டிக்காக வீட்டில் பிராக்டீஸ் செய்து கொண்டிருந்தார். ஆனால், நடன போட்டியில் சேர்ந்து இருக்கும் விஷயத்தை இனியா வீட்டில் யாரிடமும் சொல்லவே இல்லை. இதை பார்த்து ஈஸ்வரி, ஜெனி, பாக்கியா எல்லோருமே கேட்க, ஏதோ காரணத்தை சொல்லி இனியா சமாளித்தார். இன்னொரு பக்கம் கோபி, நான் ராதிகாவிற்காக இனி குடிக்க மாட்டேன் என்று தன் நண்பனிடம் சந்தோசமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது பாரில் தனியாக செழியன் குடித்துக் கொண்டிருப்பதை கோபி பார்த்துவிட்டு விசாரிக்க, ஆபீஸில் பிரச்சனை.

நேற்று எபிசோட்:

சீனியர் நபர்களை எல்லாம் வேலை விட்டு தூக்கி விட்டார்கள் என்று செழியன் சொல்ல, கோபி ஆறுதல் சொல்லி அவரை வீட்டுக்கு கொண்டு வந்து விட்டார். நேற்று எபிசோட்டில், செழியன் வந்ததை பார்த்து பாக்கியா சாப்பாடு எடுத்து வைக்க, அவர் வேணாம் என்று மறுத்து எதுவும் பேசாமல் தயங்கி நின்றார். அப்போது பாக்கியாவிற்கு செழியன் குடித்த விஷயம் தெரிந்து கோபப்பட்டு அறிவுரை சொன்னார். ஆனால், அவர் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அதற்குப்பின் செழியன் குடித்த விஷயம் தெரிந்து ஜெனி சண்டை போட்டார்.

இன்றைய எபிசோட்:

பின் செழியன் எழுந்து வந்து பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்டு ஆபீஸில் பிரச்சனை என்று சொன்னவுடன், இப்போ ப்ரச்சனை சரியாகி விட்டதா? என்று கோபமாக பேசுகிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் பாக்கியா, எனக்கும் நிறைய பிரச்சனை இருக்கிறது, குடிக்கட்டுமா? என்று கேட்க, எனக்கு தாத்தா, அப்பா,எழில் எல்லோருமே வீட்டை விட்டு போன பிறகு பொறுப்பு அதிகமானதால் டென்ஷனில் இப்படி எல்லாம் செய்துவிட்டேன் என்று சொன்னார். உடனே பாக்கியா, நீ எந்த பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள தேவையில்லை.

சீரியல் ட்ராக்:

உன்னுடைய குழந்தை, மனைவியை மட்டும் பாரு. வீட்டு பொறுப்பை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அறிவுரை சொல்லி அனுப்புகிறார். இன்னொரு பக்கம் கல்லூரியில் நடனப் போட்டியில் இனியா தேர்வாகி விடுகிறார். கோபி அனுப்பிய நபர் புதிதாக ஒரு டிஷ் செய்து பாக்யாவிற்கு கொடுக்கிறார். அதை சாப்பிட்டு நன்றாக இருக்குன்னு பாராட்டுகிறார். கடைசியில் வீட்டில் இனியா, நடன போட்டியில் தேர்வானதை பற்றி சொல்கிறார். எல்லோருமே பாராட்டுகிறார்கள். அப்போது டிவியில் வரும் நிகழ்ச்சியில் நான் நடனமாட போகிறேன் என்று சொன்னவுடன் ஈஸ்வரி வேணாம் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full