சீரியல் கல்யாணம் எல்லாம் இப்படித்தான் நடக்குமா - ரித்விகாவிற்கு நிஜத்தில் தாலி கட்டியது யார் பாருங்க. இதோ வீடியோ.

By Rajkumar · 14/2/2023

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் சூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது. அந்த வகையில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா, லட்சுமணன், நேகா மேனன்,ரேஷ்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த சீரியலை இயக்குநர் டேவிட் என்பவர் இயக்கி வருகிறார். மேலும், இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாக பாக்கியலட்சுமி திகழ்கின்றது.

பாக்கியலட்சுமி சீரியல்:

இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் உள்ள பெண்களுக்கு ஒரு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது. பெண்கள் குடும்பத்தை பார்த்துக் கொண்டாலும் தனக்கு என்று ஒரு வேலை இருக்க வேண்டும். பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது.

தற்போது கதைப்படி பாக்கியாவின் இளைய மகன் அமிர்தா என்கிற விதவை பெண்ணை காதலித்து வருகிறார். ஆனால் அதற்கு பாட்டி தடையாக நின்று பணக்கார வீட்டு பெண் ஈவரியைத்தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று குறியாக இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் எழிலுக்கு வர்ஷினியுடன் கட்டாயத்திருமணம் நடைபெற இருந்தது. இதனை அறிந்த பாக்கிய இந்த திருமணத்திற்கு எதிராக போராடினார்.

தனக்கும் தனது கணவர் கோபிக்கும் இதுபோலத்தான் கட்டாயத் திருமணம் செய்து வைத்து எங்கள் வாழ்க்கை இப்படி நாசமாகிவிட்டது. அதேபோல மீண்டும் ஒரு கட்டாயத் திருமணத்தால் என் மகன் வாழ்க்கையும் நாசமாவதை பார்க்க தனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி கல்யாணத்தை நிறுத்தி, எழில் காதலித்த அமிர்தா உடனே அவருக்கு திருமணத்தை முடித்து வைத்தார் பாக்யா. இ

View this post on Instagram

A post shared by Rithika Tamilselvi (@tamil_rithika)

ந்தப் பிரச்சனையை பூதாகரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த எபிசொட் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் ஒளிபரப்பானது. உண்மையான திருமணம் என்றால் மாப்பிள்ளை தான் பெண் கழுத்தில் தாலி காட்டுவார். ஆனால் சீரியல் கல்யாணத்தில் தாலியை யார் கட்டினார்கள் என்பதை நீங்களே வீடியோவில் பாருங்க. அமிர்தாவாக நடித்து வரும் ரித்திகா தான் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். சீரியல் கல்யாணம் என்றால் இப்படித்தான் போல.. 

Tamil Behind Talkies AMP · Quick view
View full