ஈஸ்வரி சொன்ன வார்த்தையால் பாக்கியாவை அழிக்க கோபி போட்ட திட்டம், அடுத்து என்ன? பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராமமூர்த்தி இறந்ததால் மொத்த குடும்பமும் வேதனையில் இருக்கிறது. பின் ராமமூர்த்தி எழுதிய கடிதத்தை படித்து எல்லோரும் வருத்தப்பட்ட, இதையெல்லாம் வாசலில் நின்று ராமமூர்த்தி ஆத்மா பார்த்தது. இந்த வாரம் ராமமூர்த்தியின் திருவுருவப்படத்தை கடையில் திறக்கும் விழா நடைபெற்றது. அப்போது கோபி, தான் நல்ல அப்பா என்றும், ராமமூர்த்தியை பற்றி திட்டி மோசமாக பேச எல்லோருமே கோபப்பட்டார்கள். இந்த வாரம் எழில் புது வீட்டிற்கு பாக்கியா தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி கொண்டு போய் இருந்தார்.
அதற்கு பின் பாக்கியா, எழில் சாதித்து வருவான். அங்கிருந்தால் தேவையில்லாத பிரச்சினை என்பதால் நான் வெளியில் போக சொன்னேன். கண்டிப்பாக ஒருநாள் என் மகன் சாதிப்பான் என்று பேசுவதை வெளியில் இருந்து எழில் கேட்டு கண் கலங்கி இருந்தார். பின் எழிலை பார்க்க செழியன் புது வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது செழியன், புது டிவி வாங்கி தந்தார். அந்த சமயம் பார்த்து கோபி, வீட்டிற்கு வந்து எழிலை நலம் விசாரித்தார். இன்னொரு பக்கம் பாக்யா வீட்டில் எல்லோருமே சந்தோஷமாக பேசி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். மறுநாள் கல்லூரிக்கு இனியாவை ஈஸ்வரி அழைத்துப் போனார்.
பாக்கியலட்சுமி சீரியல்:
அதை பார்த்த கோபி தன்னோட அம்மாவிடம் எவ்வளவோ பேசி மன்னிப்பு கேட்டார். ஆனால், ஈஸ்வரி மனம் மாறாமல் அப்படியே இருந்தார். இதனால் கோபப்பட்டு கோபி, நான் மனமுடைந்து சொல்கிறேன், உங்களை ரொம்ப வெறுக்கிறேன் என்று சொன்னவுடன், நான் வெறுப்பதற்கு கூட உன்னை ஒரு ஆளாக நினைக்கவில்லை என்று சொல்லிவிட்டு ஈஸ்வரி கிளம்பி இருந்தார். நேற்று எபிசோடில், வீட்டிற்கு வந்த கோபி, தன் அம்மா சொன்னதை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு இதற்கெல்லாம் காரணம் பாக்கியா தான். அவளை அடையாளம் தெரியாமல் அழிக்க போகிறேன் என்று சொன்னார்.
நேற்று எபிசோட்:
உடனே ராதிகா, எல்லோரைப் பற்றியும் தெரிந்த வரை போதும். நமக்கென்று ஒரு குடும்பம், வாழ்க்கை இருக்கிறது. நாம் வாழலாம் என்று சொல்ல, பாக்யாவை பழிவாங்குவதைப் பற்றி தான் கோபி யோசித்துக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் ரெஸ்டாரண்டில் பாக்யா, பம்பரமாக சுற்றி வேலை செய்து கொண்டிருக்க, இது எல்லாம் பார்த்த பழனிசாமி, நீங்கள் சமைப்பதற்கு ஆள் வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்ல, பாக்யா யோசித்தார். இனியா, கல்லூரியில் நடன போட்டி நடைபெறுகிறது. ஆனால், இனியா நண்பர்கள் எல்லோருமே பெயர் கொடுக்க, அவர் யோசித்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில், இனியா, நடன போட்டியில் சேருவதற்கு தனது பேரை கொடுத்தார். பின் இந்த விஷயத்தை தன்னுடைய அண்ணன் எழில் இடம் சொல்றார். உடனே அவர் வாழ்த்துக்கள் சொல்லி இருவரும் பேசிக்கொண்டிருக்கிறார். அந்த சமயம் பற்றி ஈஸ்வரி, இனியாவை கூட்டிக்கொண்டு போக வருகிறார். பின் எழில், ஈஸ்வரி, இனியா மூவருமே ஒரு காபி ஷாப்பில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு பின் ஈஸ்வரி, வீட்டிற்கு வந்து ராமமூர்த்தி-எழில் நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு பேசி இருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
உடனே பாக்கியா, சமையலுக்கு ஒரு ஆளை எடுக்கிறேன். வீட்டிற்கு வருவதற்கு நேரம் போதவில்லை என்றவுடன் ஈஸ்வரியும் சரி என்று ஒத்துக் கொள்கிறார். பின் பாக்கியா கொடுத்த விளம்பரத்தை பார்த்து கோபி தன்னிடம் வேலை செய்யும் நபரை பாக்யாவிடம் வேலை செய்ய அனுப்புகிறார். காரணம், பாக்கியவை பழிவாங்க புது திட்டம் போடுகிறார் கோபி. இது எல்லாம் பார்த்து கோபியின் நண்பன் தேவையில்லாத வேலைன்னு சொல்ல, நான் அப்படி தான் செய்வேன், பாக்யாவை அழிப்பேன் என்று ஆக்ரோஷமாக கோபி பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது .