தன் தந்தையின் புகைப்படத்தை திறக்கும் விழாவில் கோபி செய்தது, அதிர்ச்சியில் ஈஸ்வரி- பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராமமூர்த்தி இறந்துவிட்டார் என்று சொன்னவுடன் மொத்த குடும்பமும் பரிதவித்து இருந்தது. இறுதி சடங்கை கோபி செய்ய கூடாது என்று ஈஸ்வரி சொன்னவுடன் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. கடைசியில் பாக்கியா தன்னுடைய மாமனாருக்கு இறுதி சடங்குகளை எல்லாம் செய்தார். கோபி ஓரமாக நின்று எதுவும் செய்ய முடியவில்லை என்ற வருத்தத்தில் இருந்தார். மறுநாள் ராமமூர்த்தியின் அஸ்தியை கங்கையில் கரைத்தார்கள். ராமமூர்த்தியை நினைத்து ஈஸ்வரி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது பாக்கியா, ஈஸ்வரிக்கு நெத்தியில் பொட்டு வைத்து, நீங்கள் இப்படி இருந்தால் தான் மாமாவுக்கு பிடிக்கும் என்று சொல்கிறார். மறுநாள் ராமமூர்த்தியின் துணிகளை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர் கடிதம் எழுதி வைத்த விஷயம் தெரிந்து எல்லோரையுமே ஹாலில் வரவைத்த ஈஸ்வரி, செழியனிடம் உயிலை கொடுத்து படிக்க சொல்லி இருந்தார். அதைக் கேட்டு அனைவருமே அழுதார்கள். பின் ஒவ்வொருவருக்கும் தாத்தா எழுதிய கடிதத்தை படித்து அழுதார்கள். இதையெல்லாம் வாசலில் நின்று ராமமூர்த்தி பார்த்தார்.
பாக்கியலட்சுமி சீரியல்:
இன்னொரு பக்கம் கோபி, பாரில் நிலைமை தெரியாத அளவிற்கு குடித்து விட்டு உளறி இருக்க, ராதிகா வந்து கோபியை அழைத்துச் சென்றார். இன்னொரு பக்கம் வீட்டில் அமிர்தா- எழில் இருவரும் கிளம்புகிறோம் என்று சொன்னவுடன் எல்லோருமே வருத்தப்பட்டார்கள். அதற்கு எழில், தாத்தாவின் ஆசையை நிறைவேற்றி விட்டு வருகிறேன் என்று சமாதானம் செய்துவிட்டு சென்றார். நேற்று எபிசோடில், ரெஸ்டாரண்டில் பாக்கியா தன்னுடைய மாமனாரை நினைத்து வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருக்க, பழனிச்சாமி ஆறுதல் சொல்லி இருந்தார்.
சீரியல் கதை:
அப்போது பாக்கியா, என்னுடைய மாமனாருக்கு மரியாதை செலுத்தும் வகையில் சின்ன விசேஷம் நடத்த இருக்கிறேன் என்று சொல்லி இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் ஈஸ்வரி, தன்னுடைய கணவரின் 80 ஆவது பிறந்தநாள் வீடியோவை பார்த்து பார்த்து அழுது கொண்டிருந்தார். உடனே செழியன்- ஜெனி இருவருமே அவருக்கு சமாதானம் செய்தார்கள். பின் ராதிகா வீட்டில் கோபி தூங்கிக்கொண்டு இருக்க ராதிகா அவரை எழுப்பி சாப்பிட சொல்லி அன்பாக பேசி இருந்தார். அதன் பின் கோபி, செழியன் காபி குடிக்க போய் இருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில், கோபி- செழியன் இருவருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கோபி, செழியன் இடம் பாக்கியாவை பற்றி தவறாக திட்டி பேசிய உடன் செழியனுக்கு கோபம் வந்தது. பின் தாத்தா படத்தை திறக்கும் விழாவை பற்றி சொன்னவுடன் கோபி அமைதியாக இருக்கிறார். மறுநாள் ராமமூர்த்தியின் திருவுருவப்படத்தை கடையில் திறக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு எல்லோருமே வந்தார்கள்.
சீரியல் ட்ராக்:
அப்போது கோபியும் வந்து நின்றார். அதற்குப் பின் ராமமூர்த்தி திருவுருவப்படத்தை திறந்து வைத்தார் ஈஸ்வரி. எல்லோருமே அவரின் படத்திற்கு மரியாதை செலுத்தி இருந்தார்கள். பின் எல்லோரும் ராமமூர்த்தியை பற்றி பெருமையாக பேசிய இருந்தார்கள். கடைசியில் கோபி மைக்கை வாங்கி, ராமமூர்த்தியை பற்றி மோசமாகவும் திட்டியும் பேச எல்லோருமே கோபப்பட்டு அமைதியாக இருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிந்தது.