'இனி பாக்கியலட்சுமி சீரியல்ல இது கஷ்டம்' உண்மையை உடைத்து கோபி வெளியிட்ட வீடியோ- என்ன சொல்லி இருக்காரு தெரியுமா?
பாக்கியலட்சுமி சீரியல் குறித்த அப்டேட் தொடர்பாக கோபி வெளியில் இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இதனால் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
மேலும், இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். இந்த தொடர், குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு முன் உதாரணமாகவும், எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியல்:
பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது. தற்போது சீரியலில் ராதிகா கர்ப்பம் கலைந்துவிட்டது என்று அவருடைய அம்மா ஈஸ்வரி மீது போலீசில் புகார் கொடுத்திருந்தார். இதனால் போலீசும் ஈஸ்வரியை கைது செய்திருந்தார்கள். பின் விசாரணையில் வாக்குமூலம் ஈஸ்வரிக்கு எதிராக இருந்தது. இதனால் ஈஸ்வரி சிறைக்கு செல்வார் என்று கமலா நினைத்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து ராதிகாவின் மகள் மயூ சாட்சி சொன்னதால் நீதிமன்றமும் ஈஸ்வரியை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்து விட்டது.
கோபி குறித்த தகவல்:
இதற்குப் பிறகு கோபி- பாக்கியா இடையே சமையல் போட்டி நடந்து கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் இனியா பார்ட்டியில் ஆட்டம் பாட்டம் என்று உற்சாகத்தில் இருக்கிறார்கள். இனி அடுத்து என்ன? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த தொடரில் கோபி கேரக்டரில் நடித்து ரசிர்களிடைய அதிகம் ரீச் ஆனவர் சதீஷ். குடும்ப இல்லத்தரசிகள் பலரும் கோபி மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இந்த தொடரின் மூலம் சதீஸ் மக்களின் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.
கோபி பதிவிட்ட வீடியோ:
மேலும், கோபியை சோசியல் மீடியாவில் பயங்கரமாக திட்டி தீர்த்து வருகிறார்கள். இதனாலே இவர் மனவேதனையில் கடந்த ஆண்டு சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தார். இருந்தாலும் இவர் மீது பாசம் வைத்திருக்கும் ரசிகர்களுக்காக மீண்டும் இவர் நடிப்பதாக ஒத்துக் கொண்டார். இருந்தும் இவரை பயங்கரமாக திட்டிக் கொண்டுதான் வருகிறார்கள். அதுவும் கடந்த சில மாதங்களாக கோபியை மோசமான வார்த்தையால் பேசி ட்ரோல் செய்தும் இருக்கிறார்கள். இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் குறித்து நடிகர் கோபி வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.youtube.com/watch?v=NYLzZidfpzw
சீரியல் குறித்த அப்டேட்:
அந்த வீடியோவில் கோபி, இனிமேல் பாக்கியலட்சுமி சீரியலில் காமெடி சீன் வருவது ரொம்ப கஷ்டம். நீங்களே பார்க்கிறீர்கள் கோர்ட்டு, அது இது என்று ரொம்ப பரபரப்பாக சீரியல் போகுது. அதனால் காமெடி காட்சிகள் எல்லாம் வராது. இன்னும் ஒரு 50 எபிசோடுக்கு அழுகை சீன் தான். கோபி அழுகிற மாதிரி தான் பார்ப்பீர்கள். கோபிக்கு ஊத்தி கொடுத்து காமெடி பண்ணலாம் என்று நினைக்காதீர்கள். இனி எனக்கு தெரிந்தவரை சீரியல் விறுவிறுப்பாக தான் போகும் என்று கூறியிருக்கிறார். காமெடிக்கு வாய்ப்பில்லை என்று கூறி இருக்கிறார்.