மீடியாவில் நிதீஷ் குடும்பத்திற்கு பாடம் புகட்டும் இனியா, சுதாகர் என்ன செய்ய போகிறார்? பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் இனியாவின் விவாகரத்து கேஸ் கோர்ட்டுக்கு வந்தது. இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே தயாராகி கிளம்பி போனார்கள். ஈஸ்வரி தன்னுடைய பேத்தியை நினைத்து ரொம்ப எமோஷனலாக பேசி அழுதார். அப்போது கோபி- பாக்கியா இருவருமே ஆறுதல் சொன்னார்கள். அதற்கு பின் கோர்ட்டுக்கு கோபி, பாக்கியா, இனியா, எழில் நான்கு பேரும் போனார்கள். அங்கு நிதிஷ், சுதாகர் இருவருமே வந்திருந்தார்கள். சுதாகர், பாக்கியாவிடம் பேச வந்தார். உடனே அங்கிருந்து இனியா சென்று விட்டார்.
அப்போது இனியாவிடம் நிதீஷ், என்னை விவாகரத்து செய்துவிட்டு உன்னுடைய கள்ளக்காதலன் ஆகாசுடன் சேர்ந்து ஊர் சுற்ற நினைக்கிறாயா. அவனை தான் நீ கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாய் என்று ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இனியாவிற்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. அந்த சமயம் பார்த்து பாக்கியா- கோபி இருவரும் வந்ததால் நிதீஷ் சென்று விட்டார். அதற்குப்பின் வீட்டிற்கு கிளம்பி பாக்கியா குடும்பத்தினர் வந்தார்கள். அப்போது இனியா, நிதிஷ் தன்னிடம் மோசமாக பேசியதைப் பற்றி சொல்லி வருத்தப்பட்டார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் இனியாவின் வீட்டிற்கு நோட்டீஸ் வந்தது. அதில் நிதிஷ் உடைய குடும்பம், இனியா கேரக்டரை பற்றி ரொம்ப மோசமாக சொல்லி இருந்தார்கள். பின் இனியாவின் கள்ளக்காதலால் தான் தன் மகன் போதைப் பழக்கத்திற்கு அடிமையானான் என்பதுபோல புகார் கொடுத்திருந்தார்கள். இது எல்லாம் பார்த்து இனியாவிற்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. வீட்டில் எல்லோருமே கோபப்படுகிறார்கள். உடனே கோபி, கோர்ட்டில் கேஸ் நடக்கிறது. எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். நீ கவலைப்படாதே என்று இனியாவிற்கு ஆறுதல் சொன்னார்.
நேற்று எபிசோட்:
பின் இனியா சுதாகர் வீட்டிற்கு சென்று நிதீஷ் இடம் சண்டை போட்டார். நிதிஷ், நிதிஷ் அம்மா, இனியா மூவருமே மாற்றி மாற்றி வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் சுதாகர் வீடியோ எடுத்து கோபிக்கு அனுப்பி விட்டார். உடனே கோபி, பாக்கியாவிடம் தகவலை சொல்லிவிட்டு இனியாவை பார்க்க வந்தார். அப்போது இனியா, நான் இதை சும்மா விடப்போவதில்லை. என்னை பற்றி அசிங்கப்படுத்தியவர்களை என்ன செய்கிறேன் பார் என்றெல்லாம் கத்திக் கொண்டிருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சுதாகர், இனியா ரொம்ப நல்லவள், அமைதியானவள் என்றெல்லாம் சொன்னீர்கள். இவ்வளவு அராஜகம் செய்து கொண்டிருக்கிறார். அவளை உடனடியாக மனநல மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்று திமிராக பேசுகிறார். இதைக் கேட்ட கோபி, உங்கள் குடும்பத்தை தான் நான் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று திட்டி விடுகிறார். அதற்குப்பின் இனியா வேலைக்கு நேரம் ஆகிவிட்டது என்று கிளம்பி விடுகிறார். கோபி வேதனையில் பாக்கியாவின் கடைக்கு வருகிறார். அங்கு சுதாகர் வீட்டில் நடந்ததை எல்லாம் பாக்கியாவிடம் சொல்கிறார். இதைக் கேட்டு பாக்கியா ரொம்பவே மனமடைந்து அழுகிறார். அதற்கு கோபி, எப்படியாவது இனியாவின் வாழ்க்கையை மாற்றிவிடலாம். அதை பற்றி கவலைப்படாது என்று ஆறுதல் சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் தன்னுடைய மீடியா மூலம் சுதாகரின் குடும்பத்திற்கு பாடம் புகட்டஇனியா நினைக்கிறார். அப்போது டிவியில் இனியா, சுதாகர் உடைய பையன் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவன். அவனால் தான் என்னுடைய வாழ்க்கை சீரழிந்தது. ஆனால், அவர்களின் குடும்பம் என்னுடைய கேரக்டரை பற்றி தவறாக பேசுகிறார்கள். என்னுடைய குடும்பத்தை தொந்தரவு செய்கிறார்கள். இனி அவர்கள் என் குடும்பத்துக்கு எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என்றெல்லாம் சொல்கிறார். இது டிவியில் ஒளிபரப்பாகிறது. இதை பார்த்து சுதாகர் குடும்பத்தினர் பயங்கரமாக கோபப்படுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.