பாக்கியலட்சுமி நடிகை ஜெனிபர் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கும் சீரியல் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், அவரின் கணவராக சதீசும் நடித்து வருகிறார்கள். மேலும், இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாக இந்த தொடர் திகழ்கின்றது.

மேலும், குடும்ப பெண்கள் தங்கள் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்தி உருவாகி உள்ளது. இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. அதோடு ஆரம்பத்தில் இந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஜெனிபர். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் அம்மன் சீரியலிலும் நடித்து இருந்தார்.

Advertisement

ஜெனிபர் குறித்த தகவல்:

இருந்தாலும், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ பாக்கியலக்ஷ்மி தொடர் தான். மேலும், ஜெனிபர் சின்னத் திரைக்கு வருவதற்கு முன்பு வெள்ளித்திரையில் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் மிகச் சிறந்த டான்சரும் ஆவார். அதோடு பல நடன நிகழ்ச்சியில் ஜெனிபர் பங்கேற்று இருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கி சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்.

ஜெனிபர் குழந்தை:

இப்படி ஒரு நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதால் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து ஜெனிபர் விலகி இருந்தார். கடந்த ஆண்டு தான் ஜெனிபர்க்கு ஆண் குழந்தை பிறந்து இருந்தது. ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில் ஜெனிபருக்கு தற்போது இரண்டாவதும் மகன் பிறந்து இருக்கிறார். மேலும், இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். தான் கர்ப்பமாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து இருந்தார்.

Advertisement

கம்பேக் கொடுக்கும் ஜெனிபர்:

குழந்தை பிறந்த பிறகு ஜெனிபர் பிரேக் எடுத்துக்கொண்டார். தற்போது மீண்டும் இவர் சின்ன திரையில் ரி என்ட்ரி கொடுத்திருக்கிறார். அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடரில் ஒன்று கார்த்திகை தீபம். கார்த்திக், தீபாவை மையமாகக் கொண்டு இந்த சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த சீரியலும் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

ஜெனிபர் பதிவு:

இந்த சீரியலில் தான் புதிய கதாபாத்திரத்தில் ஜெனிபர் என்ரியாக இருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக ஜெனிபர், கார்த்திகை தீபம் சீரியலில் நான் வரப்போகிறேன். ராதிகா கதாபாத்திரத்திற்கு எப்படி லவ் அண்ட் சப்போர்ட் கொடுத்தீர்களோ, அதே மாதிரி இந்த ரம்யா கதாபாத்திரத்திற்கு உங்களுடைய லவ் அன்ட் சப்போர்ட் தேவை. உங்களுடைய அன்புக்கும் ஆசிர்வாதத்திற்கும் நன்றி. இந்த அழகான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த ஜீ தமிழுக்கு நன்றி என்று பதிவிட்டிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement