சந்தோஷத்தில் இருந்த பாக்கியா வீட்டில் நடந்த சோகம், வேதனையில் மொத்த குடும்பம்- விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

By subhashini · 31/8/2024

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ஜெனி கர்ப்பமாக இருந்ததால் ஈஸ்வரி, அமிர்தாவை மோசமாக திட்டி இருந்தார். இதனால் எழில் கோபப்பட்டு ஈஸ்வரியிடம் பேச, இருவருக்கும் இடையே சண்டை நடந்து கடைசியில் எழில் வீட்டை விட்டு வெளியே போனார். கடந்த வாரம் வீட்டில் தாத்தாவின் 80 ஆவது நாள் பிறந்தநாளை கொண்டாட ஈஸ்வரி, எழிலை கூப்பிட்டார். ஆனால், எழில் வர மறுத்தார். இதனால் ஈஸ்வரி வருத்தப்பட்டு இருந்தார். பின் ராமமூர்த்தியின் 80 ஆவது பிறந்தநாளை கொண்டாட எல்லோருமே கோவிலுக்கு போய் இருந்தார்கள்.

இதை வெளியில் இருந்து பார்த்த கோபி, என்ன வீட்டில் விசேஷம்? என்று குழப்பத்தில் செழியனுக்கு கால் செய்தார். செழியன் போன் எடுக்கவே இல்லை. கோவிலில் தடபுடலாக தாத்தாவின் பிறந்த நாள் நடந்தது. தாத்தாவின் பிறந்தநாளுக்கு உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் வந்து இருந்தார்கள். பின் தாத்தா- பாட்டி இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் போது எழில் வந்து நின்றார். இதை பார்த்தவுடன் மொத்த குடும்பமே சந்தோஷப்பட்டது. இன்னொரு பக்கம் கோபி, செழியனுக்கு கால் பண்ணி எல்லா விஷயத்தையும் தெரிந்து கொண்டார். இதை கோபி, ராதிகாவிடம் சொல்ல இருவருக்கும் சண்டை வந்தது.

பாக்கியலட்சுமி சீரியல்:

கோபி கோவிலுக்கு சென்றார். கோபியை பார்த்தவுடன் மொத்த பேருமே அதிர்ச்சியாக, ராமமூர்த்தி கோபப்பட்டு பேசி இருந்தார். பின் ஈஸ்வரி- ராமமூர்த்தி எவ்வளவு திட்டியும், அசிங்கப்படுத்தியும் கோபி கிளம்பாமல் அங்கே இருந்தார். அதன் பின் எல்லோருமே ஈஸ்வரி- ராமமூர்த்தி இடம் ஆசிர்வாதம் வாங்கி இருந்தார்கள். கடைசியில் கோபி ஆசிர்வாதம் வாங்க வந்தவுடன் ராமமூர்த்தி திட்டி ஆசீர்வாதம் பண்ணாமல் விட்டார். கோபி கிஃப்ட் கொடுத்ததற்கு, ராமமூர்த்தி தூக்கி வீசிவிட்டு சென்று விட்டார். உடனே கோபி, தன் அம்மாவிடம் மன்னிப்பு கேட்க, ஈஸ்வரி கோபமாக திட்டி இருந்தார்.

சீரியல் கதை:

பின் எல்லோருமே உட்கார்ந்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பாக்கியவை பார்த்து கோபி, என் குடும்பம் என்னை விட்டு பிரிந்து இருக்கிறது. அதற்கு காரணம் நீ தான் என்று வழக்கம் போல் பழி போட, பாக்கியா பதிலுக்கு பதில் பேசி இருந்தார். நேற்று எபிசோடில், வீட்டில் கோபி, குடித்துவிட்டு வந்து ராதிகாவிடம் கோவில் நடந்ததை சொல்லி புலம்ப, ராதிகாவிற்கு கோபம் வந்து கத்துகிறார். இன்னொரு பக்கம், பாக்கியா வீட்டில் எல்லோரும் சந்தோசமாக பேசி இருக்கிறார்கள். ஈஸ்வரி, நேரம் ஆகிவிட்டது எல்லோரும் போய் தூங்குங்கள் என்று சொன்னவுடன் ராமமூர்த்தி, நான் பேசணும். மனசுக்கு நிறைவாக இருக்கிறது என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார்.

நேற்று எபிசோட்:

கடைசியில் பாக்கியாவிடம் மனது விட்டு ராமமூர்த்தி சந்தோசமாக பேச, அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று சமாதானம் சொல்லி அனுப்பி வைக்கிறார் பாக்கியா. இந்நிலையில் இன்றைய எபிசோடில், ராமமூர்த்தி தூக்கம் வராமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஈஸ்வரி, ஏன் தூங்கவில்லையா? என்று கேட்டதற்கு இல்லை, நீ தூங்கு என்று சொல்லிவிட்டு நெஞ்சு, கழுத்து வலிப்பது போல ரொம்ப சிரமப்பட்டார். பின் வெளியில் வந்து ஹாலில் சுத்தி எல்லாத்தையும் பார்த்து வேதனை படுவது போல் இருந்தார். அதன் பின் ஈஸ்வரி, நீங்கள் தூங்குங்க, உங்களுக்கு மாத்திரை ஏதாவது வேண்டுமா? என்று கேட்டதற்கு, சந்தோஷத்தில் தூக்கம் வரவில்லை என்று சொல்கிறார் ராமமூர்த்தி.

இன்றைய எபிசோட்:

பின் இருவரும் தூங்க போகிறார்கள். ஆனால், ராமமூர்த்தி கஷ்டப்பட்டு தான் தூங்குகிறார். காலையில் வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்க, மாமாவை எழுப்புங்கள் காபி குடிக்கட்டும் என்று பாக்கியா சொன்னவுடன் ஈஸ்வரி எழுப்ப பார்க்கிறார். ஆனால், ராமமூர்த்தி எழவே இல்லை. பயத்தில் ஈஸ்வரி கத்த மொத்த குடும்பமே வந்து ராமமூர்த்தியை எழுப்ப பார்க்கிறார்கள். ஆனால், அவர் எழவே இல்லை. உடம்பெல்லாம் ஐஸ் மாதிரி ஆகி அவருக்கு நாடி மூச்சு துடிப்பும் இல்லாமல் இருந்ததால் பயத்தில் மருத்துவரை வரவைத்து செக் பண்ணுகிறார்கள். அப்போது அவர் இறந்துவிட்டார் என்று சொன்னவுடன் மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி அழுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full