முடிந்தது இறுதி சடங்குகள், ராமமூர்த்தியின் நினைவில் வாடும் பாக்கியா குடும்பம்- சோகத்தில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தாத்தாவின் 80 ஆவது நாள் பிறந்தநாளை கோவிலில் தடபுடலாக கொண்டாடி இருந்தார்கள். கோவிலுக்கு வந்த கோபியை பார்த்தவுடன் மொத்த பேருமே அதிர்ச்சியாக, பின் ஈஸ்வரி- ராமமூர்த்தி எவ்வளவு திட்டியும், அசிங்கப்படுத்தியும் கோபி கிளம்பாமல் அங்கே இருந்தார். அதன் பின் கோபி ஆசிர்வாதம் வாங்க வந்தவுடன் ராமமூர்த்தி திட்டி ஆசீர்வாதம் பண்ணவில்லை. உடனே கோபி, தன் அம்மாவிடம் மன்னிப்பு கேட்க, ஈஸ்வரியும் கோபமாக திட்டி இருந்தார்.
பின் ராமமூர்த்தி, மனசுக்கு நிறைவாக இருக்கிறது என்று சொல்லி வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். கடந்த வாரம் ராமமூர்த்தி தூக்கம் வராமல் அவஸ்தைப் பட்டு இருந்தார். உடனே ஈஸ்வரி, அவரை சமாளித்து தூங்க வைத்தார். மறுநாள் ஈஸ்வரி, ராமமூர்த்தியை எழுப்பி இருந்தார். ஆனால், ராமமூர்த்தி எழவே இல்லை. பயத்தில் ஈஸ்வரி கத்த, மொத்த குடும்பமே வந்து ராமமூர்த்தியை எழுப்பி இருந்தார்கள். பின் மருத்துவரை வரவைத்து செக் பண்ண, அவர் இறந்துவிட்டார் என்று சொன்னவுடன் மொத்த குடும்பமும் நம்பவும் முடியாமல், ஏற்று கொள்ள முடியாமல் பரிதவித்து நிற்கிறது.
பாக்கியலட்சுமி சீரியல்:
தன்னுடைய தந்தை இறந்ததை அறிந்த கோபி ரொம்ப அழுகிறார். ஒவ்வொருவருமே தாத்தாவை நினைத்து புலம்பி அழுது கொண்டிருக்கிறார்கள். பழனிச்சாமி, இறுதி சடங்கிற்கு தேவையான வேலைகளை செய்கிறார். ஒவ்வொருவரும் ராமமூர்த்திக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறார்கள். அப்போது ராதிகாவின் அம்மா வந்து ஓவராக ட்ராமா செய்தார். இதை பார்த்து ஈஸ்வரிக்கு கோபம் வருகிறது. நேற்று எபிசோடில், இறுதி சடங்கு செய்ய கோபி தயாராகி இருந்தார். உடனே ஈஸ்வரி, நீ செய்யக்கூடாது. என்னுடைய புருசனின் கடைசி ஆசையே அதுதான் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தார்கள்.
சீரியல் கதை:
பின் கோபி, என்னுடைய அப்பாவிற்கு நான் தான் இறுதி சடங்கு செய்வேன் என்று அழுது கெஞ்சுகிறார். இருந்தாலுமே, ஈஸ்வரி ஏற்றுக் கொள்ளவில்லை. பின் வீட்டில் உள்ள எல்லோருமே ஈஸ்வரியை சமாதானம் செய்ய பார்க்கிறார்கள். ஆனால், அவர் ஒத்துக் கொள்ளவே இல்லை. மொத்த பேருமே கோபிக்கு ஆதரவாக நின்று பேசியும் மனம் மாறாமல் ஈஸ்வரி இருந்தார். எல்லோருமே, யார் செய்வார்கள்? என்று கேட்டதற்கு பாக்யா தான். மகள் இடத்தில் இருந்து எல்லாமே செய்வாள் என்று சொன்னவுடன் எல்லோருமே அதிர்ச்சியாகி இருந்தார்கள்.
நேற்று எபிசோட்:
கடைசியில் பாக்கியா தன்னுடைய மாமனாருக்கு இறுதி சடங்குகளை செய்தார். இதை பார்த்து கோபி அழுது புலம்பி கத்தினார். ராமமூர்த்தி இறுதி ஊர்வலம் நடந்தது. பாக்யா தான் எல்லாமே செய்தார். ராமமூர்த்தியை மயான பூமிக்கு எடுத்து சென்றார்கள். பாக்கியா தான் கடைசி சடங்குகளை எல்லாம் செய்து கதறி கதறி அழுதார். கோபி ஓரமாக நின்று எதுவும் செய்ய முடியவில்லை என்ற வருத்தத்தில் இருந்தார். இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், ராமமூர்த்தியின் உடைய இறுதி சடங்கிற்கான எல்லா வேலைகளையும் முடித்து விடுகிறார்கள்.
https://www.youtube.com/watch?v=d3GIVJbYosU
சீரியல் ப்ரோமோ:
பின் வீட்டில் சேரில் ராமமூர்த்தி உட்கார்ந்திருப்பது போல பாக்கியா பார்த்து அழுகிறார். ஈஸ்வரி, ராமமூர்த்தி நினைத்து வருத்தப்படுகிறார். அப்போது இனியா, பாட்டி நீங்கள் நெத்தியில் பொட்டு இல்லாமல் நல்லாவே இல்லை வையுங்கள் என்று சொன்னவுடன் ஈஸ்வரி அழுகிறார். உடனே பாக்கியா, பொட்டு எடுத்து வந்து, நீங்கள் இப்படி இருந்தால் தான் மாமாவுக்கு பிடிக்கும் தயவுசெய்து வையுங்கள் என்று பொட்டு வைத்து விடுகிறார். இருவருமே அழுகிறார்கள்.