ராதிகாவிற்காக பாதாம் தேடும் கோபி, அங்கள் வயதில் Handsome என்று நினைத்து பாக்கியாவை சுற்றும் பழனிச்சாமி - திசை மாறி செல்லும் பாக்கியலட்சுமி

By Arun · 1/5/2024

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா, விஷால் என பலர் நடித்து வருகிறார்கள். ஒரு காலத்தில் பிரசாந்த்துக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்ததால் ஒரு சில படங்கள் பண்ண முடியாமல் போனது.

View this post on Instagram

A post shared by Vijay Television (@vijaytelevision)

சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி என்று பிசியாக சுற்றி கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் செழியனின் உண்மை முகத்தை அறிந்து ஜெனி வீட்டை விட்டு வெளியேறி விவாகரத்து கொடுக்கிறார். பின் செழியன் மனம் மாறி ஜெனி உடன் சேர்ந்து வாழ நினைக்கிறார். இன்னொரு பக்கம், அமிர்தாவின் முதல் கணவர் உயிருடன் வருகிறார். அமிர்தாவையும் தன் குழந்தையும் கையோடு அழைத்துச் செல்ல கணேஷ் முயற்சிக்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியல்:

ஒருவழியாக ஜெனி-செழியன், அமிர்தா-எழில் வாழ்க்கையில் வந்த பிரச்சனைகள் முடிகிறது. பின் பாக்கியா ரெஸ்டாரண்ட் திறக்கிறார். இதை பார்த்து கோபி வயிறு எரிகிறார். பின் கோபியும் பாக்கியாவிற்கு போட்டியாக ரெஸ்ட்ராண்ட் திறக்கிறார். கோபி ஹோட்டலில் வியாபாரம் நன்றாக நடக்கிறது. ஆனால், பாக்கியா ஹோட்டலில் எதிர்பார்த்த அளவிற்கு வியபாரம் நடக்கவில்லை. மேலும், கடந்த வாரம் எபிசோடில் பழனிசாமிக்கு பிறந்தநாள் என்பதால் அவருடைய வீட்டிற்கு பாக்கிய குடும்பத்தினர் அனைவருமே வருகிறார்கள்.

சீரியல் கதை:

அப்போது பழனிசாமிக்கு பாக்யா மீது காதல் ஏற்படுகிறது. அதேபோல, பழனிசாமியின் அக்கா மகன் இனியாவுடன் கடந்த தினங்களாக வழிந்து வருகிறார். இப்படி காலம்போன வயதில் ஒரு காதல், கல்லூரி வயதில் ஒரு காதல் என்று சென்று கொண்டு இருக்கும் இந்த தொடரை பலரும் கலாய்த்து வருகின்றனர். இப்படி சீரியலே கொஞ்சம் Cringe தனமாக சென்று கொண்டு இருக்க தற்போது ராதிகா கர்ப்பமாக இருப்பதாக புதிய ட்ராக்கை ஆரம்பித்து இருக்கின்றனர்.

சீரியல் ட்ராக்:

கோபிக்கு பேரன், பேத்தி இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் தந்தையாகி இருக்கிறார் கோபி. அதுவும் இந்த வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள போகிறோம் என்ற கூச்சம் இல்லாமல் ராதிகா கர்ப்பமாக இருப்பதை சொன்னதும் அவரை தூக்கி கொண்டாடி இருக்கிறார் கோபி. இன்னொரு பக்கம், பழனி சாமிக்கு பாக்கியாவின் மீது காதல் வந்ததால் கலர் கலராக ஆடை அணிந்தும், இளைஞர் போல மாஸ் காட்டியும் கொண்டிருக்கிறார். ஆனால், அதை எல்லாம் பாக்யா கண்டு கொள்ளவில்லை.

நெட்டிசன்கள் கிண்டல்:

இதை பார்ப்பதற்கு காமெடியாக இருக்கிறது என்று சொல்லலாம். இன்னொரு பக்கம், ராதிகா கர்ப்பமாக இருப்பதை வீட்டில் சொல்ல கோபி தயங்குகிறார். ஆனால், இந்த உண்மையை பாக்யா கண்டுபிடித்து ராதிகாவிற்கு வாழ்த்துக்கள் சொல்கிறார். பின் சமையல் கட்டிற்கு வந்த கோபி, பாதாம்- பிஸ்தா எங்கே என்று கேட்டவுடன் பயங்கரமாக கோபப்பட்டு பாக்கியா பேசுகிறார். சீரியலை எப்படி எப்படியோ கொண்டு சென்று இருக்கிறார்கள். இதை பார்த்து நெட்டிசன்கள், காலம் போன பிறகு தான் எல்லாம் நடக்கும் என்று விமர்சித்தும் கிண்டல் அடித்தும் வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full