என்னது, பாக்கியலட்சுமி ரித்திகாவிற்கு திருமணமாம் ? - மாப்பிள்ளை விஜய் டிவியை சேர்ந்த இவர் தானா ?

By Arun · 12/11/2022

ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்யலட்சிமி சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சிரியலில் கதாபத்திரங்களாக நடிக்கும் நடிகர்கள் அனைவருமே பிரமாதமாக தங்களின் நடிப்பை வெளிபடுத்தி வருகின்றனர். அப்படி அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ரித்திகா. இவர் இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கும் மேலாக பின் தொடர்பவர்களை வைத்து செலிபிரிட்டியாக சின்னத்திரையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தனது தொடக்க காலத்தில் குடும்ப கஷ்டத்தால் நடிக்க வந்த நடிகை ரித்திகா "ராஜா ராணி" என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையுல் அறிமுகமாக்கினார். அதன் பின்னர் சிவா மனசுல சக்தி, சாக்கோலேட், திருமகள் என்று 2018ஆம் ஆண்டில் இருந்து நடித்து வந்த ரித்திகா தற்போது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்யலட்சிமி என்ற சிரியலில் மூலம் தான் ரித்திகா பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.

அதுமட்டுமில்லாமல் தொகுப்பாளினி, நடனம், பாடகர், ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் குக்கிங் ஷோ என கலக்கிவரும் ரித்திகா 4ஜி என்ற குறும்படத்தில் நடித்திருக்கிறார்.அதுமட்டுமில்லாமல் தனியாக ஒரு யூடுயூப் சேனலையின் நடத்திவரும் நடிகை ரித்திகா அதில் தனது அன்றாட வாழ்கை, தன்னுடைய கடந்த கால வாழ்க்கை மற்றும் நடிக்கும் சீரியல் மாற்றிய தகவல்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தான் இவரைப்பற்றிய செய்தி ஓன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அது என்னவென்றால் ரித்திகாவிற்கு கூடிய விரைவில் திருமணமாக இருக்கிறது என்பதுதான். இதனை தொடர்ந்துதான் தனக்கு திருமணம் அகவிருக்கிறது என்று சோஷியல் மீடியாவில் தெரிவித்திருந்தார் நடிகை ரித்திகா.மேலும் ரித்திகா திருமணம் செய்து கொள்ளும் நபர் அதே விஜய் டிவியில் பணியாற்றி வரும் வினு என்பவரைதான். இவர்களின் திருமண பத்திரிகை சோஷியல் மீடியாவில் வெளியாய் வைரலாகி வருகிறது.

வரும் நவம்பர் மாதம் 27ஆம் தேதி மாலை இவர்களது இருவரின் குடுப்பதினார் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணமாக விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இப்படிப்பட்ட நிலையில் தான் ரித்திகா திருமணம் செய்யவிருக்கும் வினு என்பவர் கிரியேட்டிவ் டைரக்டர் ஆக பணியாற்றி வருகிறாராம். இருவரும் விஜய் டிவியில் பணியாற்றி வருவதால் இருவரும் காதலித்து வந்த பின்னர்தான் திருமணம் செய்துகொள்ள விருக்கின்றனர் என்று நெட்டிசன்கள் மத்தியில் கூறப்படுகிறது.

மேலும் இவர் பல சின்னத்திரை பிரபலங்களை நேரில் சந்தித்து திருமணத்திற்கு அழைத்து வருகிறார் என்று கூறப்படு நிலையில் சமீபத்தில் கூட விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளனியான டிடியை அவர் வீட்டிற்கே நேரில் சென்று சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான் திருமணம் செய்து கொள்ளும் ரித்திகா திருமணத்திற்கு பிறகு சிரியலில் நடிப்பாரா? மாட்டாரா? என்று ரசிகர்கள் கேளிவி எழுப்பி வருகிறன்றனர்

Tamil Behind Talkies AMP · Quick view
View full