துரைக்கு வேலைக்காரி சோக்கு கேக்குதோ - மீண்டும் கேலிக்கு உள்ளான கோபி. வீடியோ இதோ.
தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆனால், விஜய் தொலைக்காட்சி படங்களில் தலைப்பில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வெற்றியை கண்டு வருகிறது. அந்த வகையில் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் கடந்த ஜூலை மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
https://twitter.com/chettyrajubhai/status/1403946931521396738
இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும் அவரது கணவராக சதீசும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சதிஷ், இந்த தொடரில் வேலைக்காரியாக வரும் நடிகையுடன் நடனமாடி இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவ, துரைக்கு வேலைக்காரி சோக்கு கேக்குதோ என்று கேலி செய்து இருக்கின்றனர்.
பாக்கியலட்சுமி சீரியலில் இவர் தனது முன்னாள் காதலியோடு தொடர்பில் இருப்பது போல தான் காண்பிக்கப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் சமூக வலைதளத்தில் பலரும் இவரை திட்டி தீர்த்து வருகின்றனர். அதில் ஒருவர் 'இந்த கோபி பையன பாத்தாதான் எரிச்சல் ஆகுது. நல்ல பொண்டாட்டி கிடெச்சி இருக்கு அதன் அவனுக்கு கொழுப்பு ' என்று கமன்ட் செய்து இருந்தார்.
இதற்கு பதில் அளித்த கோபி, சமூக வலைத்தளத்தில் இவரது கதாபாத்திரத்தால் பலரும் இவரை திட்டி தீர்த்து வரும் நிலையில் இதற்கு பதில் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார் சதீஷ். ஆனால், அப்போதும் இவரை பலரும் திட்டி தீர்த்து வந்தனர். இதனால் கடுப்பான கோபி, மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு தயவுசெய்து கேட்கிறேன், அது ஒரு சீரியல் என்பதை மறக்க வேண்டாம். என்னிடம் வந்து. மோசமாக பேசுவது எப்படி நியாயமாகும் தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள் என்று கூறி இருந்தார்.