15 வயசுல கல்யாணம், விவாகரத்து, அம்மா இழப்பு - பாக்கியலட்சுமி சீரியல் நடிகை கம்பம் மீனா எமோஷனல்

By subhashini · 16/8/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. இதனால் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த தொடர், குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்கள் எல்லோருக்கும் உதாரணமாகவும், எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது. இந்த சீரியல் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது.

மேலும், இந்த சீரியலில் செல்வி என்ற கதாபாத்திரத்தில் பாக்கியாவின் தோழியாக நடித்திருந்தவர் கம்பம் மீனா. இவர் வட்டார மொழி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் கம்பம் மீனா. சின்ன கிராமத்திலிருந்து வந்த இவர் இன்று தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார். இவர் முதன் முதலாக தெற்கத்தி பொண்ணு என்ற சீரியலில் தான் நடிக்க தொடங்கினார். இவருடைய சினிமா பயணத்தை தொடங்கி வைத்தவர் இயக்குனர் பாரதிராஜா தான்.

பாக்கியலட்சுமி:

இதுவரை கிட்டத்தட்ட 75 படங்களுக்கு மேல் கம்பம் மீனா நடித்து உள்ளார். ஆனால், அவரைப் பற்றி பலருக்கும் பெரியதாக தெரியாது. பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கஸ்தூரி அத்தாச்சியாக நடித்து மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பின் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் ஆனார். இது தவிர இவர் பிற சீரியல்களிலும் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொண்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் கம்பம் மீனா, பாக்கியலட்சுமி சீரியல் 6 வருடம் ஆக சென்றது நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. நாங்கள் ஒரு குடும்பமாகத்தான் இணைந்து நடித்தோம். இந்த சீரியல் முடிந்தது என்று நினைக்கும் போது எங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.

கம்பம் மீனா குறித்த தகவல்:

சீரியலில் வந்த செல்வி கதாபாத்திரம் இவ்வளவு பெரிய பெயரை வாங்கி தரும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. எந்த இடத்திற்கு போனாலும் செல்வி என்று மக்கள் என்னை அழைக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியலில் எப்படி தனி ஆளாக இருந்து என்னுடைய மகனை வளர்த்தேனோ அதேபோல் தான் நான் என்னுடைய நிஜ வாழ்க்கையிலும் தனி ஆளாக இருந்து என்னுடைய இரண்டு மகன்களை வளர்த்து வருகிறேன். எனக்கு 15 வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. என்னுடைய தாய் மாமனை தான் திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நாங்கள் இருவருமே பிரிந்து விட்டோம்.

https://www.youtube.com/watch?v=M4WhBMQMaoc

குடும்ப வாழ்க்கை பற்றி சொன்னது:

அவர் வேறொரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டார். நான் நடிக்க வந்துருவதற்கு முன்பே என்னுடைய அம்மா கேன்சரால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார் அவர்களுடைய பெரிய கவலை நான் தான். காரணம், அம்மாவிற்கும் 15 வயதில் தான் திருமணம் நடந்தது. 22 வயதிலேயே அப்பா இறந்துவிட்டார். அதற்கு பிறகு அம்மா தன்னந்தனியாக இருந்து ரொம்ப கஷ்டப்பட்டு என்னையும் என்னுடைய அக்காவையும் வளர்த்தார். எனக்கும் அதே மாதிரி ஒரு வாழ்க்கை அமைந்து விட்டதே என்று நினைத்து அம்மா ரொம்பவே கவலைப்பட்டார்.

லட்சியம் பற்றி சொன்னது:

அதற்கு பிறகு தான் நான் வேறு வழியில்லாமல் 2009 ஆம் ஆண்டு சீரியல் நடிக்க வந்தேன். எனக்கும் சினிமாவிற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை.
என்னுடைய ஒரே லட்சியம் என்னுடைய இரண்டு மகன்களையும் எப்படியாவது நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும். இதற்காகத்தான் நான் வெறிகொண்டு உழைத்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய இரண்டு மகன்களுமே ஆஸ்டலில் தங்கி தான் படித்தார்கள். என் மகன்களுக்கு சொல்லி தான் வளர்த்தேன். அதை அவர்கள் இருவருமே புரிந்துகொண்டு எனக்கு பக்கபலமாக இருக்கிறார்கள் என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full