பாக்கியலட்சுமி சீரியலை விட்டு கோபி விலகுகிறாரா? நடிகர் சதீஷ் போட்ட திடீர் பதிவு- என்ன ஆச்சு?

By subhashini · 28/9/2024

பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகுவதாக நடிகர் சதீஷ் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதனால் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள்.

இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது. பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது. மேலும், சீரியலில் ராமமூர்த்தி இறப்பினால் மொத்த குடும்பமே பரிதவித்திருந்தது. தற்போது ராமமூர்த்தி நினைவுகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது பாக்கியா குடும்பம் வந்து கொண்டிருக்கின்றது.

பாக்கியலட்சுமி சீரியல்:

இந்த சமயத்தில் தான் இனியா கல்லூரியில் நடன போட்டி நடந்தது. அதில் அவர் வெற்றியும் பெற்று விடுகிறார். பின் அடுத்த இரண்டு மாதத்திற்கு டிவி நிகழ்ச்சியில் இனியா கலந்து கொள்ள வேண்டும் என்று கல்லூரியில் சொல்கிறார்கள். இதை வீட்டில் இனியா சொன்னவுடன் பாக்கியா-ஈஸ்வரி ஒத்துக் கொள்ளவில்லை. பின் இதை இனியா தன்னுடைய அப்பாவிடம் சொல்ல, அவர் பாக்கியாவை பழி வாங்குவதற்கு இதுதான் சந்தர்ப்பம் என்று ஒத்துக் கொள்கிறார். பின் கோபியிடம் பேசுவதால் ஈஸ்வரி கோபப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:

உடனே இனியா, நீங்கள் சொல்லும் போது பார்க்கணும், இல்லையென்றால் பார்க்கக் கூடாதா? நான் என் அப்பாவிடம் பேசுவேன் என்று எதிர்த்து பேசிவிட்டு சென்று விடுகிறார். அதேபோல் செழியனும் இனியா சொன்னது சரி என்பது போல் பேசி இருக்கிறார். இதனால் மனமுடைந்த ஈஸ்வரி எதுவும் பேசாமல் அமைதியாக சென்று விடுகிறார். அடுத்து என்ன நடக்கும்? என்று விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த தொடரில் கோபி கேரக்டரில் நடித்து ரசிர்களிடைய அதிகம் ரீச் ஆனவர் சதீஷ்.

சதீஸ் பதிவு:

குடும்ப இல்லத்தரசிகள் பலரும் கோபி மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இதனால் இந்த தொடரின் மூலம் சதீஸ் மக்களின் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் கோபியாக நடிக்கும் சதிஷ் இந்த தொடரில் இருந்து விலகுவதாக பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில், பொய் முத்தமிடுவதை விட உண்மையிடம் அறை வாங்கிக் கொள்ளலாம் என்ற கேப்ஷனை போட்டு அவர், பாக்கியலட்சுமி தொடரை விட்டு நான் விலகும் தருணம் நெருங்கி விட்டது என்று குறிப்பிட்டு இருக்கிறார். இப்படி கோபி பட்டு இருக்கும் பதிவு தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

View this post on Instagram

A post shared by Hemalatha V (@tamilserialexpress)

நெட்டிசன்கள் கருத்து:

நீங்கள் இந்த தொடரை விட்டு விலகினால் நாங்களும் சீரியலை பார்க்க மாட்டோம். உங்களுக்காக தான் இந்த சீரியலையே நாங்கள் பார்க்கிறோம் என்றெல்லாம் அவருடைய ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள். ஏற்கனவே இந்த சீரியலை விட்டு விலகுவதாக நடிகர் சதீஷ் அறிவித்திருந்தார். ரசிகர்களின் மீதான அன்பின் காரணமாக இவர் மீண்டும் நடித்து வருகிறார். தற்போது இவர் சீரியலை விட்டு மீண்டும் விலகுவதாக அறிவித்திருக்கும் பதிவு தான் பலருக்குமே பேரதிர்ச்சி. சேனல் தரப்பில் இருந்து அறிவுப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full