13 ஆண்டுகளுக்கு பின் குழந்தை பெற்றுக்கொள்ள இது தான் காரணம். நடிகை ஜெனிபர் சொன்ன ரகசியம்.

By Rajkumar · 2/9/2021

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய ஜெனிபர் முதன் முறையாக தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும் அவரது கணவராக சதீசும் நடித்து வருகிறார். அதே போல இந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ஜெனிபர்.

பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் அம்மன் சீரியலிலும் நடித்து வருகிறார். ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ பாக்கியலக்ஷ்மி தொடர் தான். இப்படி ஒரு நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து ஜெனி விலகி இருந்தார்.

இதையும் பாருங்க : 17 வயதில் நடத்திய முதல் போட்டோ ஷூட், அதன் மூலம் வந்த மிஸ் பெமினா வாய்ப்பு. நமீதா பகிர்ந்த புகைப்படம்.

இது குறித்து வீடியோ மூலம் விளக்கமளித்த ஜெனி தான் கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகி விட்டதாக கூறியுள்ளார். ஜெனிக்கு ஏற்கனவே இவருக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் இரண்டாம் குழந்தை குறித்து பேசியுள்ள ஜெனி, நான் கர்பமாக இருப்பது என் மகனுக்கு தான் அதிக சந்தோஷம்.

அவன் தான் என்னிடம் எனக்கு ஒரு தங்கச்சி பாப்பா வேண்டும் என்று கேட்பான். அவனுக்கு துணையாக யாராவது வேண்டும் என்பதற்காக இந்த முடிவெடுத்தேன்.மேலும் 13 வருடங்களாக இரண்டாம் குழந்தையை தள்ளிவைத்து வந்தேன். அதற்கு பின் கொரோனாவில் என்ன நடக்கும்னு தெரியாது அப்போதுதான் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full