கண்ணாடி முன் நின்று தன் முழு Baby Bump-ஐ ரசிக்கும் ஜெனி - குயூட் புகைப்படம் இதோ.

By Rajkumar · 7/10/2021

முன்னாள் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனிபர் தன்னுடைய Baby Bump புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும் அவரது கணவராக சதீசும் நடித்து வருகிறார். அதே போல இந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ஜெனிபர்.

பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் அம்மன் சீரியலிலும் நடித்து வருகிறார். ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ பாக்கியலக்ஷ்மி தொடர் தான். இப்படி ஒரு நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து ஜெனி விலகி இருந்தார்.

இது குறித்து வீடியோ மூலம் விளக்கமளித்த ஜெனி தான் கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகி விட்டதாக கூறியுள்ளார். மேலும், இந்த சீரியலில் தன்னுடைய கதாபாத்திரம் செல்லும் போக்கு தனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறி இருந்தார். ஜெனிக்கு ஏற்கனவே இவருக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் இரண்டாம் குழந்தை குறித்து பேசிய ஜெனி, நான் கர்பமாக இருப்பது என் மகனுக்கு தான் அதிக சந்தோஷம்.

அவன் தான் என்னிடம் எனக்கு ஒரு தங்கச்சி பாப்பா வேண்டும் என்று கேட்பான். அவனுக்கு துணையாக யாராவது வேண்டும் என்பதற்காக இந்த முடிவெடுத்தேன்.மேலும் 13 வருடங்களாக இரண்டாம் குழந்தையை தள்ளிவைத்து வந்தேன் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய Baby Bump புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஜெனிபர்.

behindtalkies AMP · Quick view
View full