சுதாகர் வழியிலேயே பதிலடி கொடுக்கும் பாக்கியா, அடுத்து என்ன? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

By subhashini · 1/5/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ரெஸ்டாரண்டுக்கு வந்த பழைய ஓனர், நீங்கள் இப்பவே காலி செய்தாக வேண்டும். மளிகை பொருளுக்கு நான் பணம் கொடுத்துவிடுகிறேன். இங்கிருந்து கிளம்புகள் என்று ரொம்ப கோபமாக பேசி இருந்தார். பாக்கியாவிற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. ரொம்ப வேதனைப்பட்டார். பின் அந்த பழைய ஓனர், சுதாகரிடம் நின்று பேசுவதை பாக்கியா பார்த்து விட்டார். அதற்கு பின் சுதாகரிடம் பாக்கியா பேசி இருந்தார். அப்போது சுதாகர், நீங்கள் ரொம்ப ஆணவத்தில் ஆடிவிட்டீர்கள்.

அதற்கான தண்டனை தான் உங்களுக்கு இது என்று ரொம்ப ஏளனமாக பேசி இருந்தார். இதனால் பாக்கியாவிற்கு இன்னும் கோபம் அதிகமானது. பின் வீட்டில் பாக்கியா, சுதாகர் தன்னுடைய ரெஸ்டாரண்டை அபகரித்த விஷயத்தை சொன்னார். ஆனால், ஈஸ்வரி வழக்கம் போல பாக்கியா பேச்சை கேட்கவே இல்லை. இன்னொரு பக்கம் எழில், பழைய ரெஸ்டாரண்டின் ஓனரிடம் சுதாகர் வாங்கியதைப் பற்றி கேட்டார். அதற்கு அவர், என் கடன் தொல்லைக்காக தான் கொடுத்து விட்டேன் என்றார். பின் கோபி, சுதாகரிடம் பாக்கியா ரெஸ்டாரண்ட் வாங்கியதைப் பற்றி பேசி இருந்தார்.

பாக்கியலட்சுமி:

நேற்று எபிசோட்டில் கோபி, சுதாகரிடம் ரெஸ்டாரன்ட் வாங்கிய விஷயத்தை பற்றி பேசி இருந்தார். அதற்கு சுதாகர், எனக்கு பாக்கியாவோட ரெஸ்டாரண்ட் எங்கு இருக்கு? என்று தெரியவில்லை. எனக்கும் அதுக்கும் சம்மந்தமில்லை. சம்மந்தி தேவையில்லாமல் என் மீது பின் பழி போடுகிறார் என்று அப்படியே மாற்றி பேசி இருந்தார். பின் இதைப் பற்றி கோபி, பாக்கியாவிடம் சொன்னார். ஆனால், பாக்கியா, நீங்கள் எல்லோரும் அவரை நம்புங்கள். நான் நம்ப மாட்டேன். இது அவருடைய வேலை தான் என்று சொன்னார்.

நேற்று எபிசோட்:

பின் கோபி, பாக்கியாவின் ரெஸ்டாரண்டுக்கு போனார். அங்கு சுதாகரும் பழைய ஒனரும் பேசி இருப்பதை பார்த்து அவருக்கு கோபம் வந்தது. உடனே சுதாகர், நான் இப்போது தான் இவரை பார்த்தேன். இவர் தான் இந்த ஓட்டலை வாங்கி இருக்கிறார் என்று வேறொருவரை கை காண்பித்து திருப்பவும் கோபியை ஏமாற்றி விட்டார். கோபியும் அதை நம்பி பாக்கியாவிடம் பேசி இருந்தார். ஆனால், பாக்கியா எதையுமே சொல்லாமல் அமைதியாக இருந்தார். பின் ரெஸ்டாரண்டை காலி செய்து மொத்த பெண்களுமே வேலை போனதை நினைத்து பாக்கியாவிடம் வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரெஸ்டாரண்டுக்கு வந்த பழைய ஓனர் பாக்யாவிடம் செட்டில்மெண்ட் பணத்தை கொடுத்து விட்டு ரெஸ்டாரண்டை காலி செய்ய சொல்கிறார். அதற்கு பாக்கியா, இதை நீங்களாவே சொல்லி இருந்தால் எனக்கு கவலை இல்லை. சுதாகர் சொல்லி ரெஸ்டாரண்டை காலி செய்ய சொன்னது தான் கஷ்டமாக இருக்கிறது. இப்படி ஒரு நம்பிக்கை துரோகம் எனக்கு செய்ய வேண்டியது இல்லை என்று ரொம்ப பேச அவரால் எதுவுமே பேச முடியவில்லை. அதற்குப்பின் வங்கிக்கு சென்ற பாக்கியா ரெஸ்டாரன்ட் மீது இருக்கும் லோனை பற்றி விசாரிக்கிறார். இன்னொரு பக்கம் வீட்டில் சுதாகர் எல்லோரிடமும் எதுவுமே நடக்காதது போல பேசிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்தவுடன் பாக்கியாவுக்கு கோபம் அதிகமாகிறது.

சீரியல் ட்ராக்:

அப்போது சுதாகர், ரெஸ்டாரண்டை பற்றி பேசுகிறார். உடனே பாக்கியா, உங்கள் மனதிற்கு கஷ்டம் இல்லை என்றால் ரெஸ்டாரன்ட்டுக்கு தேவையான பணத்தை நீங்கள் கொடுத்துவிடுங்கள். உங்களுக்கு குற்ற உணர்ச்சி வேணாம் என்று சொன்னவுடன் சுதாகரால் எதுவும் பேசவில்லை. வீட்டில் உள்ள எல்லோருமே பணமெல்லாம் வேண்டாம் என்று சொல்கிறார்கள். அதற்கு பாக்கியா, அவருடைய வழியிலேயே போய் பதிலடி கொடுக்கிறார். சுதாகரால் எதுவும் பேச முடியாமல் நாளை வந்து பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பின் கோபி, எதற்காக பணத்தை கேட்டாய் என்று கேட்டவுடன் பாக்கியா, ரெஸ்டாரண்டுக்கு வாங்கிய லோன் அப்படியே இருக்கிறது. எப்படி கட்டுவது என்றவுடன் வீட்டில் யாராலும் பேச முடியவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full