மனம் உடைந்து புலம்பும் பாக்கியா, சுதாகரின் சுயரூபத்தை அறிவாரா கோபி? பாக்கியலட்சுமி

By subhashini · 24/4/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் சுதாகர் சொன்னதை நம்பி வீட்டில் செழியன் பேசுகிறார். ஆனால், பாக்யாவிற்கு நம்பிக்கையே வரவில்லை. அவர் இன்னும் கோபம் தான் பட்டுக் கொண்டிருந்தார். அதுக்கு பின் ரெஸ்டாரண்டில் செல்வி இடம் பாக்கியா, இனியா திருமணத்தையும் ரெஸ்டாரன்ட் விஷயத்தையும் பற்றி ரொம்ப எமோஷனலாக பேசிக் கொண்டிருந்தார். செல்வியும் மனதுக்குள் வேதனை வைத்துக்கொண்டு வெளியில் காண்பிக்காமல் அமைதியாக இருந்தார். அப்போது வந்த எழிலிடம் பாக்கியா, ரெஸ்டாரண்ட் பற்றி பேசி இருந்தார்.

இனியா, ஒரு மாதம் டூர் செல்ல இருந்தார். இதை அறிந்த ஈஸ்வரி, செழியன் எல்லோருமே சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வீட்டிற்கு வந்த பாக்கியா எதைப் பற்றியும் கேட்காமல் வேதனையில் ரூமிற்கு சென்றார். இதை பார்த்த ஈஸ்வரி, பாக்கியாவை அழைத்து இனியா டூர் செல்வதை பற்றி சொன்னார். இருந்தாலுமே பாக்கியா எதுவும் சொல்லவில்லை. இதனால் ஈஸ்வரிக்கு இன்னும் கோபம் அதிகமாகி இருந்தது. மறுநாள் காலையில் பாக்கியா வீட்டிற்கு இனியா அவருடைய கணவருடன் வந்திருந்தார். பின் டூர் செல்வதை பற்றி பேச எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள்.

பாக்கியலட்சுமி:

இன்னொரு பக்கம் ரெஸ்டாரண்ட்க்கு சென்ற சுதாகர், இங்கு ரெஸ்டாரண்டை மாற்றும் வேலை நடைபெறுகிறது. எல்லோரும் வெளியே செல்லுங்கள் என்று சொன்னவுடன் ஷாக் ஆனார்கள். அப்போது வந்த
பாக்கியா, மேனேஜ்மென்ட் என்னுடைய பொறுப்பு தானே, எதற்கு இப்படி எல்லாம் சொல்கிறீர்கள் என்று கேட்டார். சுதாகர், நீ மேனேஜ்மென்ட் பொறுப்பு எனக்கு தான். நீங்கள் வெறும் மேனேஜர் தான். இங்கு எல்லா முடிவையும் நான் தான் எடுப்பேன். இல்லையென்றால் வெளியே செல்லுங்கள் என்று சொன்னார். அதற்கு பாக்கியா, எனக்கு ரெஸ்டாரண்டுக்கு நீங்கள் பணத்தை கொடுக்க வேண்டும் என்று சொன்னவுடன் நீங்கள் இனியாவிடம் தான் கேட்க வேண்டும் என்று ரொம்ப ஏளனமாக பேசி இருந்தார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் பாக்கியா, உங்கள் மகனை வைத்து என் ரெஸ்டாரன்ட்டை வாங்க நினைத்த உங்களை விட வேறு யாரும் கேவலம் கிடையாது என்று ஆக்ரோஷமாக கத்தி இருந்தார். உடனே சுதாகர், உறவினர் என்று தான் பொறுமையாக இருந்தேன். இனிமேல் யாரையும் விட்டு வைக்கப் போவதில்லை. எல்லோருமே ரெஸ்டாரன்ட்டை விட்டு வெளியே போங்கள். இது என்னுடைய ரெஸ்டாரன்ட் என்று ரொம்ப கடுமையாக நடந்து கொண்டார். பாக்கியாவும் சுதாகருக்கு பதிலடி கொடுத்து அங்கிருந்து கிளம்பி விட்டார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப் பின் வேதனையில் பாக்கியா-செல்வி இருவருமே ரொம்ப எமோஷனலாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பாக்கியா, எவ்ளோ பிரச்சனையை சமாளித்து விட்டோம். பார்த்து கொள்ளலாம் என்று நம்பிக்கையோடு இருந்தார். வேதனையில் வீட்டிற்கு வந்த பாக்கியாவிடம் ஈஸ்வரி, இனியாற்றிப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். ஆனால், அவர் அதைப் பற்றி கண்டுகொள்ளாமல் சமையல் செய்து சாப்பிட்டார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே பாக்கியாவிடம் பேச முயற்சித்தார்கள். மன வேதனையில் இருப்பதால் பாக்கியா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

இன்றைய எபிசோட் :

இந்நிலையில் இன்றைய எபிசொட்டில் வீட்டில் எல்லோருமே இனியா அனுப்பிய போட்டோக்களை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாக்கியா கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். உடனே எல்லோருமே பாக்யாவிடம் பேச, அவர் கோபத்தில் உங்கள் சம்மந்தி செய்த வேலை தெரியுமா? என்னை ரெஸ்டாரன்ட் விட்டு வெளியே அனுப்பி விட்டார் என்று நடந்ததை சொல்லி ரொம்ப வருத்தப்படுகிறார். இதனால் எல்லோரும் ஷாக் ஆகிறார்கள். பின் கோபி- செழியன் இருவருமே சுதாகரிடம் விசாரிக்கிறார்கள். ஆனால், சுதாகர் அப்படியே அந்த பல்டி அடித்து மாத்தி மாத்தி பேசுகிறார். கோபிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பின் ரெஸ்டாரண்டுக்கு வந்த பாக்கியாவிடம் சுதாகர் ஆட்கள், உள்ளே அனுமதிக்காமல் சண்டை போடுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full