சுதாகரின் முகத்திரையை கிழித்த பாக்கியா, கோபி என்ன செய்ய போகிறார்? பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா, நீங்கள் என்னிடம் ஒரு மாதிரி, என் வீட்டில் உள்ளவர்களிடம் வேறு மாதிரியும் நடிக்கிறீர்கள். உங்களை போல கேவலமான ஆளை நான் பார்க்கவே இல்லை என்று கோபப்பட்டு பேசி இருந்தார். இதனால் சுதாகருக்கு கோபம் இன்னும் அதிகமாகி பாக்யாவிடம் சண்டை போட்டார். அப்போது பாக்கியா, ரெஸ்டாரண்ட் விஷயத்தில் அமைதியாக இருக்கிறேன். ஆனால், என் மகள் விஷயத்தில் விளையாடனும் என்று நினைக்காதீர்கள். நான் சும்மா விட மாட்டேன் என்று எச்சரித்துவிட்டு வந்தார்.
இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோருமே பாக்கியா ரெஸ்டாரண்ட் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த எழில், ரெஸ்டாரண்டில் தாத்தா போட்டோவை தூக்கிப் போட்ட விஷயத்தை சொல்லி ரொம்ப வருத்தப்பட்டார். இருந்துமே ஈஸ்வரி, பாக்கியா மீது தான் கோபப்பட்டு திட்டி இருந்தார். இதனால் எழிலுக்கு கோபம் வந்து அந்த இடத்தை விட்டு கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் பாக்கியா, தன்னுடைய இன்னொரு ரெஸ்டாரண்டுக்கு சென்று ரொம்ப எமோஷனலாக ஃபீல் பண்ணிக் கொண்டிருந்தார். பின் சுதாகர், பாக்கியாவின் இன்னொரு ரெஸ்டாரன்ட் பற்றிய விவரத்தை அறிந்து அதை பறிக்க திட்டம் போட்டார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் பாக்கியாவிற்கு ஃபோன் செய்த இனியா, ரெஸ்டாரன்ட் பற்றி கேட்டார். ஆனால், பாக்கியா உண்மை சொல்லாமல் ஏதோ சொல்லி சமாளித்தார். அதற்குப்பின் வீட்டில் ரெஸ்டாரண்டை பற்றி பாக்கியா பேசிக் கொண்டிருந்தார். கோபி, நாங்கள் எல்லோரும் உனக்கு சப்போர்ட் செய்வோம். நீ தேவை இல்லாமல் குழப்பிக்கொள்ளாதே என்று உண்மை தெரியாமல் பேசி இருந்தார். ஆனால். ஈஸ்வரி வழக்கம்போல் பாக்கியாவை தான் திட்டிக் கொண்டிருந்தார். இதனால் பாக்கியா கடுப்பாகி எழுந்து சென்று விட்டார்.
நேற்று எபிசோட்:
அதற்கு பின் எழில், தன்னுடைய புது படத்திற்கு தயாரிப்பாளர் கிடைத்த விஷயத்தை சொன்னவுடன் பாக்யா சந்தோஷப்பட்டார். மறுநாள் ரெஸ்டாரண்டின் பழைய ஓனர் வந்தார். அவர், ரெஸ்டாரண்டை காலி செய்ய வேண்டும் என்று சொன்னவுடன் பாக்கியா ரொம்பவே வேதனைப்பட்டார். உடனே அவர், எனக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்தது. அதனால் ரெஸ்டாரண்டை விற்கிறேன் என்றார். பின் இதை வீட்டில் பாக்கியா சொன்னார். வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களை சொல்லிக் கொண்டிருந்தார்கள். பாக்கியாவுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரெஸ்டாரண்டுக்கு வந்த பழைய ஓனர், நீங்கள் இப்பவே காலி செய்தாக வேண்டும். மளிகை பொருளுக்கு நான் பணம் கொடுத்துவிடுகிறேன். இங்கிருந்து கிளம்புகள் என்று ரொம்ப கோபமாக பேசுகிறார். பாக்கியாவிற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. ரொம்ப வேதனைப்படுகிறார். பின் அந்த பழைய ஓனர், சுதாகரிடம் நின்று பேசுவதை பாக்கியா பார்த்து விடுகிறார். அதற்கு பின் சுதாகரிடம் பாக்கியா பேசுகிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது சுதாகர், நீங்கள் ரொம்ப ஆணவத்தில் ஆடிவிட்டீர்கள். அதற்கான தண்டனை தான் உங்களுக்கு இது என்று ரொம்ப ஏளனமாக பேசுகிறார். இதனால் பாக்கியாவிற்கு இன்னும் கோபம் அதிகமாகின்றது. பின் வீட்டில் பாக்கியா, சுதாகர் தன்னுடைய ரெஸ்டாரண்டை அபகரித்த விஷயத்தை சொல்கிறார். ஆனால், ஈஸ்வரி வழக்கம் போல பாக்கியா பேச்சை கேட்கவே இல்லை. இன்னொரு பக்கம் எழில், பழைய ரெஸ்டாரண்டின் ஓனரிடம் சுதாகர் வாங்கியதைப் பற்றி கேட்கிறார். அதற்கு அவர், என் கடன் தொல்லைக்காக தான் கொடுத்து விட்டேன் என்கிறார். பின் கோபி, சுதாகரிடம் பாக்கியா ரெஸ்டாரண்ட் வாங்கியதைப் பற்றி பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.