இனியாவின் வாழ்கைக்காக போராடும் கோபி-பாக்கியா, சுதாகர் முடிவு என்ன? பாக்கியலட்சுமி

By subhashini · 8/6/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ஆகாசிடம் இனியா நலம் விசாரித்தார். அந்த சமயம் பார்த்து நிதிஷ் வந்து விட்டார். நிதிஷ் எதுவும் சொல்லாமல் இனியாவை அங்கிருந்து அழைத்து வந்து விட்டார். அதற்குப்பின் பாக்கியாவின் ஓட்டலுக்கு வழக்கம் போல் வம்பு இழுக்க கவுன்சிலர் வந்தார். உடனே பாக்கியா, அமைச்சர் இடம் பேசுவது போல் போனில் டிராமா செய்தார். இதைக் கேட்டவுடன் கவுன்சிலர் அங்கிருந்து தலைதெறிக்க ஓடி விட்டார். கடைசியில் இனியா, நிதிஷ் இருவரும் ரூமில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது நிதிஷ், ஆகாஷை பற்றி கேட்டார்ர். இனியாவால் எதுவும் சொல்ல முடியாமல் தவித்தார். நிதிஷ், அவன் உன்னுடைய எக்ஸ் தானே என்று சொன்னவுடன் இனியா ஷாக் ஆனார்.

நிதீஷ், அவன் உன்னுடைய எக்ஸ் தான் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். உனக்கு என்ன அவனோட பேச்சு? நீங்கள் வெளியே எல்லாம் சுத்தி இருக்கீங்களா? என்று ரொம்ப மோசமாக கேள்வி கேட்டார். இனியா, அப்படி எல்லாம் எதுவும் இல்லை. நான் இனி அவனுடன் பேசவும் இல்லை என்று சொன்னார். இருந்தாலுமே விடாமல் நிதிஷ், இனியாவை நோண்டி நோண்டி கேள்விப்பட்டு கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் இனியா தூங்கி விட்டார். ஆனால், நிதிஷ் ஒரு சைக்கோ மாதிரி இரவு முழுவதும் விழித்துக் கொண்டு இனியா காதல் விஷயத்தைப் பற்றியே புலம்பிக் கொண்டு இருந்தார்.

பாக்கியலட்சுமி:

மறுநாள் காலையில் இந்த விஷயத்தை வீட்டில் உள்ள எல்லோரிடமும் நிதிஷ் சொல்லி விட்டார். வீட்டில் யாருமே இனியாவிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லை. இனியாவும் அவர்களுடன் சகஜமாக பேசப்போனார். ஆனால், யாருமே பேசவில்லை. அவளுக்கு சாப்பாடும் போடவில்லை. ஒரு கட்டத்தில் நிதிஷின் அம்மா, நீ நல்ல பொண்ணு என்று நினைத்து தான் உன்னை திருமணம் செய்து வைத்தோம். ஆனால். நீ இப்படி செய்வாய் என்று நான் நினைக்கவில்லை. உங்கள் குடும்பம் எங்களை மொத்தமாக ஏமாற்றி விட்டது என்று கோபப்பட்டார். உடனே சுதாகர், தன் மனைவியை அமைதியாக இருக்க சொன்னார். பின் இனியா அங்கிருந்து கிளம்பி விட்டார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் எபிசோட்டில் இனியா, தன்னுடைய அம்மாவை பார்க்க ஹோட்டலுக்கு வந்தார். இனியாவின் முகம் வாடி போய் இருந்தது. இதை பார்த்து பாக்கியா, இனியாவிடம் விசாரித்தார். ஆனால், இனியாவால் எதுவுமே சொல்ல முடியவில்லை. கண்கலங்கி அழுதார். பின் இனியா, உண்மையை சொல்லாமல் ரெஸ்டாரன்ட் விஷயத்தால் தான் கஷ்டமாக இருக்கிறேன் என்று பொய் சொன்னார். பின் பாக்கியா, இனியாவிற்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார். வீட்டிற்கு வந்த இனியாவிடம் நிதிஷ், ஆகாஷை பார்க்க போனாயா? எதற்காக உங்க அம்மா ஓட்டலுக்கு போகிறாய்? என்று ரொம்ப மோசமாக அவரிடம் சந்தேகப்பட்டு சண்டை வாங்கினார்.

சீரியல் ட்ராக்:

இதனால் இனியா ரொம்பவே மனமடைந்து விட்டார். பின் தன்னுடைய அப்பாவிற்கு ஃபோன் செய்து பேச வேண்டும் என்று கூப்பிட்டார். மறுநாள் காலையில் சுதாகர் வீட்டில் யாருமே இனியாவிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லை. அந்த சமயம் பார்த்து வந்த கோபி, இனியாவை அழைத்து போனார். அப்போது இனியா,
எதற்கு இந்த திருமணம் எனக்கு செய்து வைத்தீர்கள். ஆகாஷை காதலிக்கும் விஷயம் தெரிந்த உடனே நிதிஷ் என்னிடம் நடந்து கொள்ளும் விதமே சரியில்லை. வீட்டில் எல்லோரிடமே சொல்லிவிட்டார். யாரும் என்னிடம் சரியாக பேசுவதில்லை. என்னை நடத்தும் விதமும் வேறு மாதிரி இருக்கிறது என்று நடந்ததை எல்லாம் சொன்னார். இதை கேட்டு கோபி ஷாக் ஆனார். பின் கோபி, எப்படியாவது உன்னுடைய வாழ்க்கையை சரி செய்கிறேன் என்று இனியாவிற்கு ஆறுதல் சொன்னார்.

https://www.youtube.com/watch?v=rr7hzIYCXs0

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கோபி, இனியா வீட்டில் நிதிஷ் நடந்து கொள்வதை எல்லாம் சொல்கிறார். இதை கேட்டவுடன் பாக்கியா அதிர்ச்சியாகிறார். பின் கோபி, பாக்கியா இருவருமே சுதாகரின் வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு இனியாவை பற்றி சுதாகர், நிதிஷ் இடம் பேசுகிறார்கள். உடனே நிதிஷ், உங்கள் ஓட்டலுக்கு இனியா எதற்காக வருகிறார் எனக்கு தெரியும் என்று மோசமாக பேசுகிறார். பாக்கியா, என் மகளை பற்றி குறை சொல்ல தேவையில்லை. நான் என்னுடைய ரெஸ்டாரன்ட் விஷயத்தில் அமைதியாக இருந்தேன். என் மகள் வாழ்க்கையில் அமைதியாக இருக்க மாட்டேன் என்று கோபப்படுகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full