தன் இலட்சியத்தை நோக்கி மனம் தளராமல் போராடும் பாக்கியா வெற்றி பெறுவாரா? பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபி, சுதாகரிடம் பாக்கியா ரெஸ்டாரண்ட் வாங்கியதைப் பற்றி பேசி இருந்தார். கோபி, சுதாகரிடம் ரெஸ்டாரன்ட் வாங்கிய விஷயத்தை பற்றி பேசி இருந்தார். அதற்கு சுதாகர், எனக்கு பாக்கியாவோட ரெஸ்டாரண்ட் எங்கு இருக்கு? என்று தெரியவில்லை. எனக்கும் அதுக்கும் சம்மந்தமில்லை. சம்மந்தி தேவையில்லாமல் என் மீது பின் பழி போடுகிறார் என்று அப்படியே மாற்றி பேசி இருந்தார். பின் இதைப் பற்றி கோபி, பாக்கியாவிடம் சொன்னார். ஆனால், பாக்கியா, நீங்கள் எல்லோரும் அவரை நம்புங்கள். நான் நம்ப மாட்டேன். இது அவருடைய வேலை தான் என்று சொன்னார்.
பின் கோபி, பாக்கியாவின் ரெஸ்டாரண்டுக்கு போனார். அங்கு சுதாகரும் பழைய ஒனரும் பேசி இருப்பதை பார்த்து அவருக்கு கோபம் வந்தது. உடனே சுதாகர், நான் இப்போது தான் இவரை பார்த்தேன். இவர் தான் இந்த ஓட்டலை வாங்கி இருக்கிறார் என்று வேறொருவரை கை காண்பித்து திருப்பவும் கோபியை ஏமாற்றி விட்டார். கோபியும் அதை நம்பி பாக்கியாவிடம் பேசி இருந்தார். ஆனால், பாக்கியா எதையுமே சொல்லாமல் அமைதியாக இருந்தார். பின் ரெஸ்டாரண்டை காலி செய்து மொத்த பெண்களுமே வேலை போனதை நினைத்து பாக்கியாவிடம் வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருந்தார்கள்.
பாக்கியலட்சுமி:
ரெஸ்டாரண்டுக்கு வந்த பழைய ஓனர் பாக்யாவிடம் செட்டில்மெண்ட் பணத்தை கொடுத்து விட்டு ரெஸ்டாரண்டை காலி செய்ய சொன்னார். அதற்கு பாக்கியா, இதை நீங்களாவே சொல்லி இருந்தால் எனக்கு கவலை இல்லை. சுதாகர் சொல்லி ரெஸ்டாரண்டை காலி செய்ய சொன்னது தான் கஷ்டமாக இருந்தது. இப்படி ஒரு நம்பிக்கை துரோகம் எனக்கு செய்ய வேண்டியது இல்லை என்று ரொம்ப பேச அவரால் எதுவுமே பேச முடியவில்லை. அதற்குப்பின் வங்கிக்கு சென்ற பாக்கியா ரெஸ்டாரன்ட் மீது இருக்கும் லோனை பற்றி விசாரித்தார். இன்னொரு பக்கம் வீட்டில் சுதாகர் எல்லோரிடமும் எதுவுமே நடக்காதது போல பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்தவுடன் பாக்கியாவுக்கு கோபம் அதிகமானது.
நேற்று எபிசோட்:
அப்போது சுதாகர், ரெஸ்டாரண்டை பற்றி பேசி இருந்தார். உடனே பாக்கியா, உங்கள் மனதிற்கு கஷ்டம் இல்லை என்றால் ரெஸ்டாரன்ட்டுக்கு தேவையான பணத்தை நீங்கள் கொடுத்துவிடுங்கள். உங்களுக்கு குற்ற உணர்ச்சி வேணாம் என்று சொன்னவுடன் சுதாகரால் எதுவும் பேசவில்லை. வீட்டில் உள்ள எல்லோருமே பணமெல்லாம் வேண்டாம் என்று சொன்னார்கள். அதற்கு பாக்கியா, அவருடைய வழியிலேயே போய் பதிலடி கொடுத்தார். சுதாகரால் எதுவும் பேச முடியாமல் நாளை வந்து பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று அங்கிருந்து கிளம்பி விட்டார். பின் கோபி, எதற்காக பணத்தை கேட்டாய் என்று கேட்டவுடன் பாக்கியா, ரெஸ்டாரண்டுக்கு வாங்கிய லோன் அப்படியே இருக்கு. எப்படி கட்டுவது என்றவுடன் வீட்டில் யாராலும் பேச முடியவில்லை.
சீரியல் ட்ராக்:
நேற்று எபிசோட்டில் பாக்கியா பணத்தைப் பற்றி டீலிங் பேசி இருந்தார். சுதாகர் 20 லட்சம் தான் தர முடியும் என்றார். அதற்கு பாக்கியா, முடியாது 60 லட்சம் தருணம் என்று கேட்கிறார். ஒரு வழியாக இருவருடைய பஞ்சாயத்து முடிந்து சுதாகர் நாற்பது லட்சம் தான் ஃபைனலாக கொடுக்க முடியும் என்று கொடுத்தார். இதனால் பாக்கியா, பணத்தை வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றார். ஆனால், சுதாகருக்கு கோபம் இன்னும் அதிகமானது. பின் வீட்டிற்கு வந்த பாக்கியா, தன்னை நம்பி இருந்தவர்களுக்கு கொஞ்சம் பணத்தை பிரித்துக் கொடுத்தார். இதையெல்லாம் பார்த்து ஈஸ்வரிக்கு கோபம் இன்னும் அதிகமானது. ஆனால், கோபி தான் பாக்கியாவிற்கு சப்போர்ட் செய்தார்.
https://www.youtube.com/watch?v=KxbemQ38iOY
சீரியல் ப்ரோமோ:
இப்படி இருக்கும் நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் பாக்கியா, புதிதாக ரெஸ்டாரண்டை துவங்குவதற்காக இடத்தைப் பார்த்து அலைத்துக் கொண்டிருக்கிறார். சிலர், பெண்களுக்கு எல்லாம் தனியாக கடை தர முடியாது என்று அனுப்பி விடுகிறார்கள். மனம் தளராமல் பாக்கியாவும் அலைந்து கொண்டிருக்கிறார். அப்போது செல்வி, நீ கீழே விழுந்தவுடன் எழ கொஞ்சம் நேரம் ஆகும் என்று எதிர்பார்த்தேன். நீ போராடுகிறாய் அக்கா என்று அவருக்கு சப்போர்ட்டாக பேசுகிறார். உடனே பாக்கியா, நான் நிறைய கஷ்டங்களை எல்லாம் சந்தித்துதான் வந்தேன். நான் என் லட்சியத்தை நோக்கி ஓடுகிறேன். என்றுமே துவண்டு விழமாட்டேன் என்று ரொம்ப உத்வேகமாக பேசுகிறார்.