இனியாவை வைத்து சுதாகர் வைத்த செக், பாக்கியா என்ன செய்ய போகிறார்? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் இனியா, திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள சொல்லி அப்பா, பாட்டி இருவருமே ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார்கள். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்று தன்னுடைய அம்மாவிடம் புலம்பி இருந்தார். உடனே பாக்கியா, எதுவாக இருந்தாலும் நீ முடிவு எடு. யாருடைய பேச்சையும் கேட்காதே. என்னுடைய திருமணத்திலும் இப்படித்தான் என்னுடைய பெற்றோர்கள் அவசர அவசரமாக முடிவெடுத்தார்கள் என்று அவருக்கு சப்போர்ட்டாக பேசி இருந்தார். அதற்குப்பின் இனியாவை வீட்டிற்கு வரவைத்து, ரொம்ப நல்ல பையன் .
உன்னுடைய வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று மாற்றி மாற்றி ஈஸ்வரி- கோபி இருவருமே பேசி இருந்தார்கள். இனியாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் சுதாகர் வீட்டில் அவருடைய மனைவிக்கு இந்த திருமணத்தில் விருப்பமே இல்லை. உடனே சுதாகரின் மகன், ரெஸ்டாரன்ட் வாங்குவதற்காக தான் இந்த திருமணமே என்று சொன்னார். மறுநாள் காபி ஷாப்புக்கு இனியாவை கோபி அழைத்துக் கொண்டு வந்தார். அப்போது சுதாகரின் மகனும் வந்தார். இருவருமே தனியாக பேச வைத்து கோபி சென்று விட்டார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோடில் ரெஸ்டாரண்டில் பாக்கியா, இனியா திருமணத்தை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அப்போது செல்வி, இனியா நன்றாக இருக்க வேண்டும். வசதியான மாப்பிள்ளை பார்த்து இருக்கிறீர்கள். அங்கேயே கல்யாணம் செய்து விடுங்கள் என்று தன் மனதுக்குள் இருக்கும் ஆசையை அடக்கிக் கொண்டு சொன்னார். பாக்கியாவால் எதுவும் பேச முடியாமல் அழுதார். இன்னொரு பக்கம் கோபி, இனியாவை அழைத்துக் கொண்டு ஆகாஷ் வீட்டுக்கு சென்றார். அங்கு ஆகாசிடம் கோபி, இனியாவிற்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறோம். ரொம்ப வசதியானவன், பணக்காரவன் என்றெல்லாம் புகழ்ந்து பேசி இருந்தார். அதைக் கேட்டு ஆகாசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.
நேற்று எபிசோட்:
பின் கோபி, நீயே உன்னுடைய பிரண்டை திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள சொல் என்றவுடன் ஆகாசும் மனதுக்குள் வலியை வைத்துக்கொண்டு, நீ அந்த பையனை திருமணம் செய்து கொள் என்று சொன்னார். அதற்கு பின் தன்னுடைய அம்மாவிடம் இனியா, ஆகாஷ் வீட்டில் நடந்ததை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது பாக்கியா, உன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. உன் அப்பா பேச்சை கேட்காதே என்று அறிவுரை சொன்னார். அடுத்த நாள் சுதாகர் வீட்டில் எல்லோருமே திருமணத்திற்கு துணிகளை எடுக்க சென்றார்கள். திருமண வேலைகளும் நடந்து கொண்டிருக்க, பாக்யாவால் எதுவும் தடுக்க முடியவில்லை.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா வீட்டில் எல்லோருமே இனியாவின் திருமணத்தை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் வேலையை பிரித்து செய்வதை பற்றி பேசினார்கள். அதோடு இனியாவிற்கு யார் யார்? என்னென்ன செய்வது என்றெல்லாம் பேசுகிறார்கள். ஆனால், இதைப் பற்றி எல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. பாக்கியாவுமே அரை மனதோடு கல்யாண வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். பின் ரெஸ்டாரண்டில் பாக்கியா வேலை செய்து கொண்டிருக்கிறார். அங்கு வந்த சுதாகர், நாளை நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது. இதுநாள் வரைக்கும் நான் உங்களிடம் ஏதும் கேட்கவில்லை.
சீரியல் ட்ராக்:
வரதட்சணையாக உங்கள் மகள் பெயரில் இந்த ரெஸ்டாரண்டை எழுதி வையுங்கள் என்று சொல்கிறார். இதைக் கேட்டவுடன் பாக்கியா ரொம்ப ஷாக் ஆனார். இந்த ரெஸ்டாரண்டின் பெயரை மட்டும் மாற்றி என்னுடைய கம்பெனியின் பெயரை வையுங்கள். மற்றபடி இந்த பொறுப்பை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்கிறார். பாக்கியா, யாருக்காகவும் எதற்காகவும் இந்த ரெஸ்டாரண்டை கொடுக்க மாட்டேன் என்று இருக்கிறார். உடனே சுதாகர், நாளை உங்கள் மகள் நிச்சயதார்த்தம் நடக்க வேண்டுமா? இல்லையா? என்று முடிவு செய்யுங்கள் என்று அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.