ஈஸ்வரி கொடுத்த பிறந்தநாள் பரிசு, கோபத்தில் பாக்கியா சொன்னது - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

By subhashini · 26/2/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ஈஸ்வரி, இனியா திருமணமாகும் போது நீங்கள் இருவரும் சேர்ந்து இருந்தால் தானே நன்றாக இருக்கும் என்று சொன்னார். அதற்கு பாக்கியா, அது எல்லாம் முடியாது. உங்களுக்காக தான் அவர் இந்த வீட்டில் இருக்க அனுமதித்தேன். மற்றபடி எனக்கும் அவருக்கும் எந்த உறவும் கிடையாது என்று கடுமையாக பேசிவிட்டு சொன்னார். ஈஸ்வரி, எல்லோரும் அவர்கள் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நீயும் பாக்கியாவும் தான் தனியாக இருக்கிறீர்கள்.

நீங்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னவுடன் கோபி ஷாக் ஆனார். பின் அவர், இதற்கு பாக்கியா சம்மதிக்க மாட்டார் என்று சொன்னார். உடனே ஈஸ்வரி, பாக்கியாவை சம்மதிக்க வைப்பது என்னுடைய பொறுப்பு என்றார். பின் ஈஸ்வரி கோவிலுக்கு எழில்- செழியன் இருவரையும் வரவைத்தார். அப்போது அவர்களிடம் ஈஸ்வரி, கோபி- பாக்யா திருமணத்தை பற்றி சொன்னவுடன் இருவருமே ஷாக் ஆனார்கள். அதற்குப்பின் ஈஸ்வரி, நிலைமையை எடுத்து சொல்லி புரிய வைக்க, செழியன் சம்மதித்தார். ஆனால், எழில் மறுத்தார்.

பாக்கியலட்சுமி:

நேற்று எபிசோட்டில் பாக்கியா, ரெஸ்டாரண்டில் ரொம்ப பிசியாக வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது பேங்கில் இருந்து பாக்கியாவை பார்க்க சில நபர்கள் வந்திருந்தார்கள். அவர்களிடம் பாக்கியா, புது அக்கவுண்ட் ஓபன் பண்ணுவதை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது செல்வி, இன்னும் சில தினங்களில் உங்கள் பிறந்தநாள் வருகிறது என்று சொன்னவுடன் பாக்கியா ரொம்ப சந்தோஷப்பட்டார். ஒரு காலத்தில் தன்னுடைய பிறந்த நாளை யாருக்குமே தெரியவில்லை.

நேற்று எபிசோட்:

இந்த முறை தன்னுடைய பிறந்தநாளை பிரமாதமாக கொண்டாட வேண்டும் என்று பாக்கியா முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்தார். பின் இதைப் பற்றி இனியா, தன்னுடைய அப்பா கோபி, ஈஸ்வரியிடம் சொன்னார். இதனால் ஈஸ்வரிக்கு பயங்கர கோபம் வந்தது. பின் அவர், பிறந்தநாள் கொண்டாட பாக்கியா குழந்தையா? என்றெல்லாம் பேசி இருந்தார். அப்போது பாக்கியா, தான் வாங்கிய புது புடவையை ஈஸ்வரியிடம் கொடுத்தார். ஆனால், அவர் எதிலும் விருப்பம் இல்லாத போல் பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:

கோபி பாக்யாவிற்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பிறந்தநாள் விழா சிறப்பாக நடந்தது. விழாவிற்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்கிறார்கள். பாக்யாவின் பிறந்தநாளுக்காக இனியா, அவருடன் வேலை செய்தவர்கள்
பேசும் வீடியோவை ரெடி பண்ணி பிறந்தநாள் பரிசாக கொடுத்திருந்தார். இதை பார்த்தவுடன் பாக்கியா ரொம்ப எமோஷனலாக அழுதுவிட்டார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் ஈஸ்வரி, பிறந்தநாள் பரிசாக கோபி, பாக்கியாவிற்கு மீண்டும் திருமணம் செய்து வைக்க இருக்கிறேன். அதுதான் நான் அவருக்கு கொடுக்கும் பரிசு என்று சொன்னவுடன் பாக்கியா-கோபி இருவருமே அதிர்ச்சியாகிறார்கள். அதற்குப்பின் பாக்கியா, நீங்கள் எனக்கு கொடுத்த பரிசுக்கு நன்றி. ஆனால், நான் மீண்டும் அவரை திருமணம் செய்து கொள்வது என்பது நடக்காத ஒன்று. அந்த எண்ணத்தை விட்டு விடுங்கள்.
நான் என்னுடைய வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன் என்று சொன்னவுடன் ஈஸ்வரிக்கு பயங்கர கோபம் வருகிறது. இத்துடன் சீரியல் முடிவடைகிறது.

behindtalkies AMP · Quick view
View full