ஈஸ்வரி செய்த வேலையால் ஆத்திரமடைந்த பாக்கியா, கொந்தளித்த ராதிகா அம்மா - பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபியின் நிலை அறிந்து ஹாஸ்பிடலுக்கு வந்த ராதிகாவை ஈஸ்வரி உள்ளே விடாமல் தடுத்தார். எழில், பாக்கியா இருவருமே ஈஸ்வரியை சமாதானம் செய்தும் அவர் கேட்கவில்லை. கோபத்தில் ஈஸ்வரி, ராதிகாவை ரொம்ப தகாத வார்த்தையால் திட்டியதால் அவர் மனம் உடைந்து வெளியே வந்து விட்டார். அதன் பின் எப்படியோ போராடி ராதிகா உள்ளே சென்று கோபியை பார்த்தார். ஆனால், கோபி கண்ணிற்கு ராதிகா, பாக்யா போல் தெரிந்ததால் ரொம்ப நன்றி என்று சொல்ல, ராதிகா ரொம்பவே வருத்தப்பட்டார். அதன் பின் பாக்கியா-ராதிகா இருவருமே உட்கார்ந்து பேசி இருந்தார்கள்.
அப்போது ராதிகா, நான் கோபியை திருமணமே செய்து இருக்க கூடாது என்று ரொம்ப எமோஷனலாக பாக்கியா தோள் மீது சாய்ந்து அழுது இருந்தார். உடனே பாக்யா அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி இருந்தார். பின் கோபியை பார்த்து கொள்ளும் விஷயத்தில் ஈஸ்வரி- பாக்கியா இடையே வாக்குவாதம் அதிகமாகி இருந்தது. மறுநாள் ஈஸ்வரி, கோபியை பார்க்க போக சொன்னார். உடனே பாக்கியா, முடியாது. அது என்னுடைய வேலை இல்லை. ராதிகா தான் பார்க்கணும் என்று சொல்ல, ஈஸ்வரி இன்னும் கோபப்பட்டு திட்டி இருந்தார்.
பாக்கியலட்சுமி:
பின் ஈஸ்வரி, ஹாஸ்பிடலில் இருந்து என்னுடைய மகனை இந்த வீட்டிற்கு தான் அழைத்து வருவேன் என்று சொல்ல, பாக்யா முடியாது என்றார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை வந்தது. அதன் பின் ஈஸ்வரி, ஹாஸ்பிடலுக்கு போனார். அதற்கு முன்பே ராதிகா, கோபியை பார்த்து பேசி இருந்தார். கோபி, இப்போதான் என்னை பார்க்க நேரம் வந்ததா? என்னுடைய குடும்பம் தான் எனக்கு உதவியது என்று ரொம்ப எமோஷனலாக பேச, ராதிகா வருத்தப்பட்டார்.
நேற்று எபிசோட்:
அந்த சமயம் வந்த ஈஸ்வரி, ராதிகாவை திட்டி வெளியே போக சொன்னார். நேற்று எபிசோடில் ஈஸ்வரி, கோபியை என்னுடைய வீட்டிற்கு தான் அழைத்து செல்வேன் என்றார். உடனே பாக்யா, அதெல்லாம் முடியாது. ராதிகா தான் அழைத்து செல்வார். அவருக்கு தான் உரிமை இருக்கிறது என்று சொல்ல, ராதிகாவும் அவர் என்னுடன் தான் வருவார். அதை கோபி சொல்லட்டும் என்று சொன்னவுடன், நீயே கோபியிடம் போய் கேள் என்று ஈஸ்வரி சொன்னார்.
இன்றைய எபிசோட்:
பின் ராதிகா, நம்ம வீட்டுக்கு போகலாம். நான் சண்டை போட மாட்டேன் என்றார். அப்போது ஈஸ்வரி, அழுது கொண்டே நீ என்னுடன் வந்துவிடு என்று சொல்கிறார். முதலில் தடுமாறிய கோபி, தன் அம்மா வீட்டிற்கு போவதாக சொன்னார். இந்நிலையில் இன்று எபிசோட்டில், கோபி சொன்ன பதிலால் ராதிகா அதிர்ச்சியாகி எதுவும் பேச முடியாமல் இருந்தார். பாக்கியா தடுத்துமே ஈஸ்வரி கேட்கவே இல்லை. பின் ராதிகா, இதெல்லாம் நீங்கள் செய்த வேலை தானே, நடிக்காதீர்கள் என்றெல்லாம் பேசி இருந்தார். கோபத்தில் பாக்கியா, உங்களிடம் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று திட்டி விட்டு செல்கிறார்.
சீரியல் ட்ராக்:
பின் வீட்டில் ஈஸ்வரி, கோபிக்கு சாப்பாடு செய்ய சொல்லி ஆர்டர் போடுகிறார். அதற்கு பாக்யா, என்னால் செய்ய முடியாது. நீங்கள் தானே அழைத்து வந்தீர்கள். உங்கள் மகனை பார்த்துக் கொள்ளுங்கள் என்று அங்கிருந்து கிளம்பி விடுகிறார். இன்னொரு பக்கம் ராதிகா, கோபி அவர் அம்மா வீட்டிற்கு சென்று விட்டார் என்று சொல்லி கதறி அழுகிறார். இதனால் கோபத்தில் ராதிகா அம்மா, பாக்கியா வீட்டிற்கு சண்டைக்கு வந்தார். இத்துடன் சீரியல் முடிகிறது.