மனம் மாறும் கோபியால் ராதிகாவின் நிலைமை, பாக்கியா எடுக்கும் முடிவு? பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபி, ஹாஸ்பிடலில் இருந்து தன் அம்மா வீட்டிற்கு போனார் . இதனால் ராதிகா அதிர்ச்சியாகி எதுவும் பேச முடியாமல் இருந்தார். இதனால் ராதிகா அம்மா, பாக்கியா வீட்டில் சண்டை போட்டார். அப்போது ஈஸ்வரி-ராதிகா அம்மா இருவருக்கும் இடையே கலவரமே நடந்தது. இதை அறிந்த ராதிகா ரொம்ப வருத்தப்பட்டு அழுதார். பின் கோபிக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்கிறார் ஈஸ்வரி.
பின் ஈஸ்வரி, இனியா, கோபி, செழியன் ஆகிய நான்கு பேரும் கலகலப்பாக சந்தோசமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கோபி, தான் செய்த தவறை உணர்ந்து தன்னுடைய அம்மாவிடம் மன்னிப்பு கேட்டார். அதற்கு ஈஸ்வரி, ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார். பின் பாக்கியா பம்பரமாக வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்து கோபி ஆச்சரியப்பட்டு தன்னுடைய அம்மாவிடம் கேட்க, அவருமே பாக்கியாவை புகழ்ந்து பேசி இருந்தார்.
பாக்கியலட்சுமி:
மேலும், கோபியை பார்க்க வந்த ராதிகாவை உள்ளே விடாமல் ஈஸ்வரி தடுத்தார். உடனே பாக்யா, ஈஸ்வரி கையைப் பிடித்துக் கொண்டு, நீங்கள் உள்ளே போங்க என்று ராதிகாவை அனுப்பி வைத்தார். ஆனால், கோபி தூங்கிக் கொண்டிருந்ததால் ராதிகா எதுவும் பேசாமல் கிளம்பி விட்டார். அதற்குப்பின் தூங்கி எழுந்த கோபி தண்ணி கேட்டார். உடனே பாக்கியா- கோபியை சேர்த்து வைப்பதற்காக தேவையில்லாத வேலைகளை ஈஸ்வரி செய்தார். இதை கவனித்த செல்வி பாக்யாவிடம் சொல்ல, அவர் கோபப்பட்டு பேசி இருந்தார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் கோபியை விழுந்து விழுந்து ஈஸ்வரி கவனித்துக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து ஜெனிக்கு பயங்கர கோபம் வந்தது. இன்னொரு பக்கம் ராதிகா, கோபி போன் பண்ணுவார் என்று எதிர்பார்த்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார். ஆனால், அவர் போன் செய்யவில்லை. அதன் பின் தனக்கு கிடைத்த ஆர்டரை பற்றி பாக்கியா வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது புது மெனு கார்டு வந்ததால் என்ன செய்வது என்று புரியாமல் புலம்பி இருந்தார் பாக்கியா. உடனே கோபி, அதற்கான ஒரு செஃப்பை வைத்து சமைத்துக் கொள்ளலாம் என்றவுடன் பாக்யா அமைதியாக இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில் கோபி பாக்கியாவின் புதிய ஆர்டருக்கு சில ஐடியாக்களை கோபி சொல்கிறார். இதை கேட்டு எல்லோருமே பாராட்டுகிறார்கள். ஆனால், பாக்கியா மட்டும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். பின் எல்லோரும் தூங்கிய பிறகும் பாக்யா வேலை செய்து கொண்டிருக்கிறார். அதை பார்த்த கோபி வருத்தப்பட்டு அவரிடம் பேசுகிறார். அதற்கு பாக்யா, உங்களுடைய வேலையை மட்டும் செய்யுங்கள் என்று சொல்கிறார். உடனே கோபி, இனியா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்று தான் செய்த தவறை உணர்ந்து பாக்கியா விடம் மன்னிப்பு கேட்கிறார்.
சீரியல் ட்ராக்:
பாக்கியா அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் அங்கிருந்து கிளம்பி வருகிறார். இன்னொரு பக்கம் ராதிகா, கோபிக்கு போன் செய்து பேசுகிறார். ஆனால், கோபி தன்னுடைய குடும்பத்தை பற்றி மட்டும் பெருமையாக பேசுவதைக் கேட்டு அவருக்கு பயங்கர கோபம் வந்து போனை வைத்து விடுகிறார்.
அடுத்த நாள் காலையில் ஈஸ்வரி, கோபி வாக்கிங் சென்று கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து பாக்கியாவும் வருகிறார். அப்போது பாக்கியாவிடம் கோபி தனியாக பேச முயற்சிக்கிறார். ஒரு கட்டத்தில் கோபி, உனக்குள் நிறைய திறமைகள் வைத்திருக்கிறார். ஒருவேளை நான் உன்னை சரியாக புரிந்து இருந்தால் நம்ம ரெண்டு பேரும் பிரிந்து இருக்கவே மாட்டோம் என்று சொல்ல, அங்கு வந்த ராதிகா, இது எல்லாம் கேட்டு விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.