சகுனி ஆட்டமாடும் சுதாகர், பாக்கியா எப்படி கையாள போகிறார் - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

By subhashini · 21/4/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் இனியாவை அவருடைய கணவர் வீட்டில் விட்டுட்டு அவருடைய அண்ணன் அண்ணிகளும் வந்து விட்டார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோருமே இனியாவை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். பின் இனியா தன்னுடைய கணவர் வீட்டில் எல்லோரிடமும் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது மாற்றி மாற்றி இனியா வீட்டில் இருந்து எல்லோருமே கால் செய்து கொண்டு இருந்தார்கள். இன்னொரு பக்கம் தன்னுடைய மகனிடம் செல்வி, தயவு செய்து படி. இனியா கல்யாணமாகி சென்று விட்டாள்.

நம்முடைய குடும்பத்தை பாரு. நம்மை அவமானப்படுத்தியதற்காக படி என்று அறிவுரை சொன்னார்.
அதற்குப்பின் பாக்கியா ரெஸ்டாரண்டுக்கு சென்றார். அங்கு வந்த சுதாகர், டாக்குமெண்டை காண்பித்தார். அதை படித்து பார்த்தவுடன் பாக்கியா ஷாக் ஆனார். அதில் ரெஸ்டாரண்டை மொத்தமாகவே சுதாகருக்கு எழுதி கொடுத்தது போல் மாற்றி எழுதி விட்டார். அதை பார்த்து பாக்கியா ரொம்பவே மனமடைந்து விட்டார். அதைக் கேட்டதற்கு சுதாகர், உங்கள் மகள் பெயர்தான் இருந்தது. என்று நக்கலாக பேசி இருந்தார். எதுவும் பேச முடியாமல் பாக்கியா வீட்டிற்கு வந்தார். அப்போது இனியா வீட்டில் இருப்பதை பார்த்து சந்தோஷப்பட்டார்.

பாக்கியலட்சுமி:

இனியாவை பார்த்ததால் பாக்கியாவால் எதுவும் பேச முடியாமல் கோபத்தை உள்ளுக்குள்ளே வைத்துக் கொண்டிருந்தார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே இனியா வந்தது நினைத்து சந்தோஷப்பட்டு பேசிக் கொண்டிருந்தார்கள். பின் எல்லோருக்குமே பாக்கியா சமைத்து பரிமாறினார். அப்போது இனியா, ரெஸ்டாரண்டரைப் பற்றி கேட்டார். ஆனால், பாக்கியா எதுவும் சொல்லாமல் அமைதியாகி விட்டார். பின் இனியா கிளம்பியவுடன் பாக்கியா, நான் பயந்தது போலவே நடந்து விட்டது.

கடந்த வாரம் எபிசோட்:

இப்போ உங்கள் சம்மந்தி ரெஸ்டாரண்டிற்கு வந்து, எனக்கும் ரெஸ்டாரண்டிற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிவிட்டார். நான் இனியாவிற்கே மொத்தமாக எழுதிக் கொடுத்தது போல டாக்குமெண்ட்டை மாற்றிவிட்டார். நான்தான் முட்டாள் என்று சொன்னீர்கள். ஆனால், அவர் உங்கள் எல்லோரையும் முட்டாளாக்கிவிட்டார். நான் பயந்தது போலவே நடந்து விட்டது என்று ஆக்ரோசமாக கத்தி புலம்பி கொண்டிருந்தார். ஆனால், ஈஸ்வரி- செழியன்- கோபி மூவருமே பாக்கியா சொல்வதை நம்பவே இல்லை. பாக்கியா மன வேதனையில் எல்லோரிடமும் புலம்பி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப்பின் கோபி, நான் சம்மந்தி இடம் இதைப் பற்றி பேசுகிறேன் என்று ஈஸ்வரிடம் சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோபி-செழியன் இருவருமே சுதாகரிடம் ரெஸ்டாரன்ட் விஷயமாக பேசுகிறார்கள். அப்போது அவர், சட்டப்படி ரெஸ்டாரண்டை பாக்கியா பெயரிலேயே வைத்து பண்ண முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதனால் வேறு வழியில்லாமல் தான் இனியா பேருக்கு மாற்றினோம். இதை நான் சம்மதியிடம் சொல்லி பார்த்தேன். ஆனால், அவர்கள் தான் புரிந்து கொள்ளவில்லை. நான் உங்கள் யாரையும் ஏமாற்றவில்லை. உங்கள் மகள் மீதுதான் இருக்கிறது என்று ஏதேதோ சொல்கிறார். இதை கோபி-செழியன் நம்பி விடுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

பின் வீட்டில் இதைப்பற்றி செழியன் சொன்னவுடன் பாக்யாவிற்கு நம்பிக்கையே வரவில்லை. அவர் இன்னும் கோபம் தான் பட்டுக் கொண்டிருக்கிறார். அதுக்கு பின் ரெஸ்டாரண்டில் செல்வி இடம் பாக்கியா, இனியா திருமணத்தையும் ரெஸ்டாரன்ட் விஷயத்தையும் பற்றி ரொம்ப எமோஷனலாக பேசிக் கொண்டிருக்கிறார். செல்வியும் மனதுக்குள் வேதனை வைத்துக்கொண்டு வெளியில் காண்பிக்காமல் அமைதியாக இருக்கிறார். அப்போது வந்த எழிலிடம் பாக்கியா, ரெஸ்டாரண்ட் பற்றி பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full